Published:Updated:

`பழைய சாலைக்குப் புதிய பாதை!'- அடையாளம் மாறப்போகிறது அண்ணாசாலை!

அண்ணா சாலை

எத்தனை மாற்றங்களை சந்தித்தாலும் அண்ணாசாலை அதன் பாரம்பரிய அடையாளத்தை ஒருபோதும் மாற்றிக்கொள்ளாது.

`பழைய சாலைக்குப் புதிய பாதை!'- அடையாளம் மாறப்போகிறது அண்ணாசாலை!

எத்தனை மாற்றங்களை சந்தித்தாலும் அண்ணாசாலை அதன் பாரம்பரிய அடையாளத்தை ஒருபோதும் மாற்றிக்கொள்ளாது.

Published:Updated:
அண்ணா சாலை

“அண்ணாசாலை சென்னை மாநகரின் தனித்த அடையாளம். இந்த சாலையின் அடையாளத்தையே புதுமையான வடிவில் மாற்றும் முயற்சியில் தமிழக அரசு திட்டம் வகுத்திருக்கிறது. சென்னை கிண்டி முதல் எல்.ஐ.சி.வரை நீண்டிருக்கும் அண்ணா சாலைக்குத் தனி வரலாறும் உண்டு. ஆரம்பத்தில் மவுன்ட் ரோடு என்கிற பெயரில் அழைக்கப்பட்ட இந்தச் சாலையின் மொத்த நீளம் 15 கி.மீ. செயின் தாம்ஸ் மவுன்ட்டிற்கு செல்ல ஆங்கிலேயர்களால் இந்தச் சாலை உருவாக்கப்பட்டது. இதனாலே இந்த சாலை மவுன்ட் ரோடு என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது. அண்ணா மறைவுக்குப் பிறகு கருணாநிதி முதல்வராக பதவியேற்றதும் மவுன்ட் ரோட்டின் பெயரை அண்ணா சாலை என்று மாற்றினார்.

அண்ணாசாலை போக்குவரத்து நெரிசல்
அண்ணாசாலை போக்குவரத்து நெரிசல்

தற்போது சென்னையின் பிரதான சாலையாகவும், பல்வேறு முக்கிய அலுவலகங்கள், பாரம்பரியமான பல நிறுவனங்களின் அலுவலகங்கள் என அண்ணா சாலையை அடையாளப்படுத்தி வருகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்ததன் விளைவாகவே சென்னையின் முதல் போக்குவரத்து மேம்பாலமான அண்ணா மேம்பாலம் கருணாநிதியால் கட்டப்பட்டது. அண்ணா சாலையில் தற்போது அமைந்துள்ள ஒரே மேம்பாலம் அது மட்டுமே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் அண்ணா சாலை நாள்தோறும் அதிகரித்துவரும் போக்குவரத்தினால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகிவருகிறார். இதை கருத்தில்கொண்டு தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ..வேலு சட்டமன்றத்தில் “அண்ணாசாலையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான 3.5 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கான செலவு மதிப்பீடாக 485 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.

மேம்பால திட்டம் - மாதிரி வரைப்படம்
மேம்பால திட்டம் - மாதிரி வரைப்படம்

அண்ணா சாலையில் உள்ள நந்தனம் சந்திப்பு, சி.ஐ.டி நகர் சந்திப்பு, தி.நகர் சந்திப்பு உள்ளிட்ட சந்திப்புகளில் மட்டும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பல்வேறு சிக்கல் எழுருகிறது. சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை உள்ள மூன்று கி.மீ தொலைவைக் கடக்க, அரைமணிநேரத்திற்கும் மேலாகும் நிலை இருப்பதால் இந்த உயர்மட்ட பாலம் பொது மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும் இந்த உயர்மட்ட பாலத்தின் மாதிரி வரைப்படங்களையும் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகே உயர்மட்ட பாலம் ஆரம்பமாகிறது. தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் உயர்மட்ட பாலம் முடிவுக்கு வருகிறது. இந்த உயர்மட்ட பாலம் அமைந்தால், நந்தனம் சந்திப்பு, தி.நகர் சந்திப்பு, சி.ஐ. டி நகர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் குறையும்..மேலும் இந்த பாலம் நவீன தொழில்நுட்பத்துடன் அமைய உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாலத்தின் மாதிரி வரைப்படம்
பாலத்தின் மாதிரி வரைப்படம்

பாலத்தின் இருபுறமும் இப்போது உள்ளது போலவே போக்குவரத்துக்கான வழிகளும் அமைய உள்ளது. “பெங்களூர் போன்ற பெரும் நகரங்களில் போக்குவரத்து நெரிலை குறைக்க இதுபோன்ற எக்ஸ்பிரஸ் ஹைவே என்கிற பெயரில் உயர்மட்ட பாலங்கள் அமைந்துள்ளது. அந்த வகையில் நானுறு ஆண்டுகள் பழமைவாய்ந்த அண்ணாசாலையும் புதிய அடையாளத்தோடு இனி மாற்றம் பெற போகிறது என்கிறார்கள்” நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள். எத்தனை மாற்றங்களை சந்தித்தாலும் அண்ணாசாலை அதன் பாரம்பரிய அடையாளத்தை ஒருபோதும் மாற்றிக்கொள்ளாது என்பது மட்டுமே நிதிர்சனம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism