Published:Updated:

ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை - பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்குமா தமிழ்நாடு?

ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடைச் சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை - பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்குமா தமிழ்நாடு?

ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடைச் சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

Published:Updated:
ஆன்லைன் சூதாட்டம்

ஆன்லைன் சூதாட்டம்:

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற பல்வேறு சூதாட்டங்கள் விளையாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது போன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, பின்னர் செய்வதறியாது அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவமும் வாடிக்கையாகிப்போனது. ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்குத் தொடர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கடந்த 2020-ம் ஆண்டு, நவம்பர் 21-ம் தேதி அன்றைய அதிமுக அரசு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அவசரத் தடைச் சட்டம் கொண்டுவந்தது.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடைவிதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விவாதமும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி, ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் போன்ற தனியார் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசு பிறப்பித்த தடைச் சட்டத்தை ரத்துசெய்தது. மேலும், `ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்க முடியாது என்றும், புதிய சட்டம் கொண்டுவரத் தமிழ்நாடு அரசுக்கு எந்தத் தடையும் இல்லை' என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறப்புக்குழு:

தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்ற திமுக ஆட்சியிலும் ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழந்துவிட்டு தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஜூன் 6-ம் தேதி தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்படும் பாதிப்புகள், ஆபத்துகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், ஆன்லைன் சூதாட்டம் சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களைக் கட்டுப்படுத்த முடிவுசெய்யப்பட்டது.

அறிக்கை சமர்ப்பித்த சிறப்புக்குழு
அறிக்கை சமர்ப்பித்த சிறப்புக்குழு

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் தலைமையில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனர், உளவியல் மருத்துவர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே மற்றும் ஐ.பி.எஸ் அலுவலர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்தக் குழு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும் எனவும் கூறப்பட்டது. குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவசரச் சட்டம்:

இந்தக்குழு, ஆன்லைன் விளையாட்டுகள் திறன்களை வளர்கின்றனவா, இந்த விளையாட்டுகளி உள்ள தீமைகள் என்னென்ன, சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்தும். இதில் ஏற்படும் பண இழப்பு குறித்தும் ஆய்வு நடத்தியது. ஆன்லைன் விளையாட்டுகளில் பணப் பரிவர்த்தனை எந்த அளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் அறிக்கையை நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவினர் முதல்வரிடம் சமர்ப்பித்திருந்தனர். இந்த அறிக்கையில், `ஆன்லைன் விளையாட்டுகளில் கடந்த சில மாதங்களில் பணத்தை இழந்து 17 பேர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆன்லைன் விளையாட்டுகளால் திறன்கள் மேம்படுவதாகச் சொல்லப்படுவது தவறு. ஆன்லைன் விளையாட்டு முறைப்படுத்த முடியாத ஒன்று என்பதால் அதை முழுமையாகத் தடை செய்ய வேண்டும்" என்று பல்வேறு பரிந்துரைகளை அந்தக் குழு தெரிவித்திருந்தது.

அமைச்சரவைக் கூட்டம்
அமைச்சரவைக் கூட்டம்

இந்த அறிக்கையை அடுத்து, முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அவசரச் சட்டம் கொண்டுவருவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசு விரைவில் அவசரச் சட்டம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசு உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``இந்த அரசு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதில் உறுதியாக இருக்கிறது. ஏற்கெனவே உயர் நீதிமன்றம் சட்டத்தை ரத்து செய்திருந்த காரணத்தால், இந்த முறை வலுவான சட்டம் உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. விரைவில், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவது உறுதி. கொண்டுவரப்படும் சட்டம், இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.