Published:Updated:

``குவாட்டர் ரூ.200-க்கு விக்கிறாங்க, என்னனு கேளுங்க!"-அமைச்சர் ராஜகண்ணப்பனை வலியறுத்திய மதுப்பிரியர்

கிராமசபைக் கூட்டத்தில் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள்

ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்ட கிராமசபைக் கூட்டத்தில், மதுப்பிரியர் ஒருவர் `குவாட்டர் ரூ.200-க்கு விக்கிறாங்க அது என்னன்னு கேளுங்க' எனக் கூச்சலிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

``குவாட்டர் ரூ.200-க்கு விக்கிறாங்க, என்னனு கேளுங்க!"-அமைச்சர் ராஜகண்ணப்பனை வலியறுத்திய மதுப்பிரியர்

ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்ட கிராமசபைக் கூட்டத்தில், மதுப்பிரியர் ஒருவர் `குவாட்டர் ரூ.200-க்கு விக்கிறாங்க அது என்னன்னு கேளுங்க' எனக் கூச்சலிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

Published:Updated:
கிராமசபைக் கூட்டத்தில் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள்

தமிழகத்தில் நேற்று கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் கிராம ஊராட்சிகளின் வரவு, செலவு கணக்குகள், வளர்ச்சித் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, புதிய கோரிக்கைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கடமைகள் உள்ளிட்டவை விரிவாக விவாதிக்கப்பட்டன. பல்வேறு கிராமங்களில் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே காவாகுளம் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டார்.

கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, திடீரென கூட்டத்தில் கலந்துகொண்ட மதுப்பிரியர் ஒருவர், ``ஒரு குவாட்டர் விலை 200 ரூபாய் என அநியாயமாக விற்கின்றனர். அதை முதலில் என்னவென்று கேளுங்கள்..!" எனக் கூச்சலிட்டார். அதைக் கேட்டு டென்ஷனான அமைச்சர் ராஜகண்ணப்பன், `அவரைக் கூட்டத்திலிருந்து அப்புறப்படுத்துங்கள்...’ என போலீஸாருக்கு அறிவுறுத்தினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதையடுத்து, அருகிலிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

கூச்சலிட்ட மதுப்பிரியர்
கூச்சலிட்ட மதுப்பிரியர்

அதைத் தொடர்ந்து ஊராட்சியின் செயலர் செலவினங்களை வாசித்தார். அப்போது, `அருந்ததியர் காலனி செலவிடப்பட்ட தொகை' எனக் கூறியபோது, கூட்டத்திலிருந்த அந்தப் பகுதி இளைஞர்கள், `தேவேந்திரகுல வேளாளர் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அருந்ததியர் காலனி என்று எப்படிச் சொல்லலாம்' என அமைச்சருக்கு முன்பாகக் கூச்சலிட்டனர். இதையடுத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தலின். பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் ஊராட்சிச் செயலாளரிடமிருந்து மைக்கை வாங்கி தேவேந்திரகுல வேளாளர் காலனி என வாசித்தார்.

இந்த இரண்டு சம்பவங்களால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism