Published:Updated:

இந்தியாவில் ஒலிபெருக்கி அரசியல்... என்ன நடக்கிறது? பாஜகவின் நிலைப்பாடு தான் என்ன?

ஒலிபெருக்கி அரசியல்

சமீப காலமாக இந்தியாவின் ஒலிபெருக்கி அரசியல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு தான் என்ன?

இந்தியாவில் ஒலிபெருக்கி அரசியல்... என்ன நடக்கிறது? பாஜகவின் நிலைப்பாடு தான் என்ன?

சமீப காலமாக இந்தியாவின் ஒலிபெருக்கி அரசியல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு தான் என்ன?

Published:Updated:
ஒலிபெருக்கி அரசியல்

சமீபத்தில் டெல்லியின் ஜஹாங்கீர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தி சமயத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் இரண்டு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இரண்டு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட தாக்குதல் பலரும் காயமடைந்தனர். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதிலும் பதற்றமான சூழல் நீடித்தது. இந்த கலவரத்துக்கான பல்வேறு காரணங்களில், அந்த பகுதியில் ஒரு வழிபாட்டுத் தலத்தில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டது.

இன்னும் சில தினங்களில் ரம்ஜான் பண்டிகையும், அட்சய திருதியை பண்டிகைகள் வரவிருக்கின்றது. இதனையடுத்து உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். டெல்லியில் நடந்த சம்பவம் போன்று இங்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக மத வழிபாட்டுத் தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்றவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அது தொடர்பான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த உத்தரவை அடுத்து உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள மத வழிபாட்டுத் தலங்களில் இருக்கும் ஒலிபெருக்கிகளை காவல்துறையினர் அகற்றி வருகின்றார்கள். குறைந்த அளவிலான ஒலியை எழுப்பும் ஒலிபெருக்கிகள் அகற்றப்படாத நிலையில், இதுவரை 11,000-க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்களில் உள்ள பெரிய ஒலிபெருக்கிகளை காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் அகற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

``மகாராஷ்டிராவின் இயல்பு நிலையையும், அமைதியையும் சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம். இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டிருக்கின்றது” - திலீப் வால்ஸ் பாட்டில், மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்றவேண்டும் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே வலியுறுத்தியிருந்தார். அப்படி அகற்றவில்லை என்றால் மசூதிகளின் முன்பு ஒலிபெருக்கி அமைத்து அனுமன் பாடல் ஒலிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் மோஹித் கம்போஜ், கோயில்களுக்கு இலவசமாக ஒலிபெருக்கிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல்வேறு மாநிலங்களில் ஒலிபெருக்கி அரசியல் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றது. இந்த விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதனிடம் பேசினோம். ``இந்தியா பல்வேறு, மதம், மொழி, இனம் என்று பன்முகத் தன்மை கொண்ட நாடு. இந்த நாட்டின் ஒற்றுமையை தான் பலப்படுத்த வேண்டும். ஆனால், பாஜக ஒரு மத பதற்றத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இந்த நாட்டில் எதையெல்லாம் செய்யக்கூடாதோ, அதையெல்லாம் பாஜக செய்துகொண்டிருக்கிறது. அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் மாட்டும் தான் இதுபோன்ற பிரச்னைகள் வருவதை நாம் கண்கூட காண முடியும்" என்றார்.

மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்
மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்

தொடர்ந்து பேசியவர், ``பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பண்பாடு, ஒற்றுமை இருக்கக் கூடாது என்று ஒற்றை பண்பாட்டை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி என்பதை முன்னெடுத்து வருகின்றார்கள். அதேபோல, மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது என்று ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டுவர முயல்கின்றார்கள். அடுத்ததாகத் தனியார் நிறுவனங்களின் சுரண்டலுக்கு இந்த நாட்டை திறந்து விட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தான் அவர்கள் புதிய இந்தியா என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மத பிளவுகளை ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு மதமும் கடைப்பிடிக்கும் தனித்துவமான செயல்களைத் தடுத்து வருகிறார்கள். உதாரணமாக, ஹிஜாப், ஹலால் தற்போது ஒலிபெருக்கி. இதுபோன்ற செயல்களின் மூலம் இந்து நாடு என்பதைக் கொண்டுவர முயற்சி செய்து அவர்களின் வாக்கு வங்கியைப் பலப்படுத்த வேண்டும். அதன்மூலமாக தங்களின் ஆட்சியை உறுதிசெய்யவேண்டும் என்று இதனை தொடர்ச்சியாகச் செய்துவருகிறார்கள்" என்று பேசினார்.

இந்த விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாகத் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``பல ஆண்டுகளாக, பல்வேறு நீதிமன்றங்கள் மசூதிகளில் இருக்கும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் அகற்றப்படவில்லை. இதனால், பொதுமக்களுக்கு இடையூறு உண்டாகிறது, ஒலி மாசு ஏற்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் தற்போது மசூதிகளில் மட்டுமின்றி, கோவில்களிலும், தேவாலயங்களிலும் உள்ள ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளது. வெளியில் சத்தம் வராத வண்ணம் மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கி மூலம் வழிபாடு நடத்திக்கொள்ளலாம் என்று தான் கூறப்பட்டுள்ளது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் செயலை மத நல்லிணக்கத்தைப் பேணி காக்கும் விஷயமாகத் தான் பார்க்க வேண்டும். மசூதிகளில் ஒலிபெருக்கி வைத்திருக்க வேண்டும் என்பது அவர்களின் மதத்தில் சொல்லப்பட்ட விஷயமும் அல்ல. இதனைச் சிலர் ஒத்துக்கொள்கிறார்கள். அதே சமயத்தில் அங்கிருக்கும் ஒரு சில அடிப்படைவாதிகளால் ஒலிபெருக்கிகளை அகற்றக்கூடாது என்று சொல்லிவருகிறார்கள். இந்த செயலுக்கு எதிர்வினையாக சில கோவில்களிலும் அதையே செய்கிறார்கள். அது தவறு தான். என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு மத வழிபாட்டு தலமும் மாற்று மதத்தவர்க்கும் இடையூறாக இருக்கக் கூடாது" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism