Published:Updated:

தலைவரைத் தேடிய தொண்டர்கள்; ஆட்டோவில் சென்ற அண்ணாமலை - பாஜக போராட்டம் ஹைலைட்ஸ்!

அண்ணாமலை - பா.ஜ.க

தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

தலைவரைத் தேடிய தொண்டர்கள்; ஆட்டோவில் சென்ற அண்ணாமலை - பாஜக போராட்டம் ஹைலைட்ஸ்!

தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

Published:Updated:
அண்ணாமலை - பா.ஜ.க

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு விலை குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு பா.ஜ.க-வைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். மேலும், பா.ஜ.க-வைச் சேர்ந்த 5,000-க்கும் அதிகமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

பா.ஜ.க போராட்டம்
பா.ஜ.க போராட்டம்

காலை 10 மணிக்கு சென்னை ராஜரத்தினம் மைதானத்திலிருந்து பேரணியாகக் கோட்டை வரை செல்வதாகத் திட்டம். சுமார் ஒரு லட்சம் தொண்டர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டிருந்தது. காலை ஒன்பது மணியிலிருந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வேன்கள் மூலம் வந்துகொண்டிருந்தனர். முக்கியத் தலைவர்களும் வரத் தொடங்கினர். ஆயிரக்கணக்கில் மக்கள் குழுமியிருந்தபோதிலும், கடுமையான வெயில் காரணமாகத் தலைவர்கள் பேசுவதை யாரும் கேட்கவில்லை. அருகிலிருந்த பூங்காவில் அதிகமானோர் காணப்பட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அங்கே கூடியிருந்தவர்களில் பலருக்கும் போட்டோ எடுத்துக்கொள்வதிலிருந்த ஆர்வம் மேடையில் பேசிக்கொண்டிருப்பவர்களின் பேச்சைக் கவனிப்பதில் இல்லை என்பதுபோலத்தான் காணப்பட்டது. அங்கே போடப்பட்டிருந்த சமோசா கடைகளிலும், இளநீர் கடையில் இளநீர் காலியாகும் அளவுக்கும் வியாபாரம் படு ஜோராக நடைபெற்றுக்கொண்டிருந்தது. போட்டோ எடுத்துக்கொள்ளும் கூட்டம் ஒருபுறமிருக்க, வாடிய முகத்தோடு ஓரமாக அமர்ந்திருந்த பல வயதானவர்களும் காணப்பட்டார்கள்.

பா.ஜ.க போராட்டம்
பா.ஜ.க போராட்டம்

அங்கே பல முதியவர்களையும், கைக்குழந்தைகளோடு வந்தவர்களையும் காண முடிந்தது. அதேவேளையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்தப் பகுதியில் உள்ள கண் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் மாற்றுப்பாதையில் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேரணி நடத்துபவர்களைக் கைதுசெய்து அழைத்துச் செல்ல 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தயாராக இருந்தன. போலீஸார் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பா.ஜ.க மூத்த தலைவர்கள் பலரும் அடுத்தடுத்து பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவழியாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 11:45 மணியளவில் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு இசை வாத்தியங்கள் முழங்க மாஸ் வரவேற்பு வழங்கப்பட்டது. அதே சமயத்தில், அந்தக் கூட்டத்தில் பின்னால் பலரும் வாடிச் சோர்வடைந்திருந்தார்கள்.

மேடையில் ஹெச்.ராஜா
மேடையில் ஹெச்.ராஜா

அவருக்காகத் தனியாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறினார். அவருடன் ஏறுவதற்குப் பலரும் போட்டிப் போட்டுக்கொண்டிருந்தனர். ஒருவழியாகப் பலரும் ஏறிவிட ஹெச்.ராஜாவுக்கு மேடையில் இடம் கிடைக்கவில்லை. அதனால் அவர் படியில் நின்றுகொண்டிருந்தார். பேசத் தொடங்கிய அண்ணாமலை, ஆளும் தி.மு.க அரசைச் சரமாரியாக விமர்சித்துப் பேசிக்கொண்டிருந்தார். பேசி முடித்ததும், கோட்டையை நோக்கி பேரணி செல்லத் தயாரானார்கள்.

பேரணி செல்ல தயாரானவர்களைத் தடுத்து நிறுத்திய காவலர்கள், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே பின்னால் இருந்தவர்கள் முன்னே இருந்தவர்களை நெருக்க, கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தில் சிக்கிக்கொண்ட அண்ணாமலை, ஹெச்.ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் சிக்கித் தவித்தனர். அவர்களோடு, அங்கிருந்த தொண்டர்களும் கூட்டத்தில் சிக்கிப் பெரும்பாடுபட்டார்கள். அந்தக் கூட்டத்தில் கைக்குழந்தையோடு சிக்கிய ஒரு பெண்மணியைக் காவலர்கள் போராடி பத்திரமாக மீட்டனர். நெரிசல் தாங்காமல், அருகிலிருந்த பூங்காவிலும், மண்டபத்திலும் சுவர் ஏறிக் குதிக்க ஆரம்பித்தனர்.

நெரிசலால் ஏறிக் குதிக்கும் தொண்டர்கள்
நெரிசலால் ஏறிக் குதிக்கும் தொண்டர்கள்

பேரணியில் நின்றுகொண்டிருந்த அண்ணாமலை திடீரென அங்கு வந்த ஆட்டோவில் ஏறிப் புறப்பட்டுவிட்டார். அண்ணாமலை போராட்டம் நடைபெறும் இடத்திலிருந்து சென்றதே பலருக்கும் தெரியாது. அதைத் தொடர்ந்து முக்கியத் தலைவர்கள் பலரும் காரில் ஏறிப் புறப்பட்டுவிட்டார்கள். கூட்டத்தில் சிக்கி எட்டுக்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்தார்கள். அவர்களுக்கு 108 ஊழியர்கள் முதலுதவி வழங்கினர். கூட்டத்திலிருந்தவர்கள் மாற்றுத் திசையில் பேரணி செல்ல ஆரம்பித்தார்கள். அப்போது இரண்டு திசையிலும் உணவு வழங்க ஆரம்பித்தனர். அதனால், கூட்டத்திலிருந்த அனைவரும் சாப்பாடு வாங்கச் சென்றுவிட, சொற்பமானவர்கள் மட்டும் பேரணி என்ற பேரில் சென்றுகொண்டிருந்தனர்.

நெரிசலில் சிக்கிய அண்ணாமலை
நெரிசலில் சிக்கிய அண்ணாமலை

பேரணியிலிருந்த மாநிலத் தலைவர் அண்ணாமலை முதல் முக்கியத் தலைவர்கள்வரை பலரும் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக `விட்டால் போதும்...' என்பதுபோல அங்கிருந்து சொல்லாமலேயே சென்றுவிட்டார்கள் என்பதுதான் உண்மை நிலவரம். தங்களை அழைத்துவந்த பலரையும் காணவில்லை என்பதால், என்ன செய்வது... எங்கே செல்வது என்று தெரியாமல் அழைத்து வந்தவர்களைத் தேடித்திரிந்த பலரையும் காண முடிந்தது. ``கோட்டையை நோக்கிப் பேரணி, அதனால்தான் முதல்வர் பயந்து டெல்டா மாவட்டத்துக்குச் சென்றுவிட்டார்" என்று அண்ணாமலை இந்தக் கூட்டத்தில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism