Published:Updated:

``ஆர்டர்லாம் போடாதீங்க விஜயபாஸ்கர்" கோபமான ஓ.பி.எஸ்! - அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?

விஜயபாஸ்கர் - ஓ.பி.எஸ்

கூட்டத்தில் ஆரம்பம் முதலாகவே அ.தி.மு.க நிர்வாகிகள் வார்த்தைகளால் பயங்கரமாக மோதிக்கொண்டதாகவும், பொன்விழா தொடர்பாகத் தங்களின் விருப்பங்களை எழுதிக்கொடுத்துவிடுங்கள் எனக் கூட்டம் வேகமாக முடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

``ஆர்டர்லாம் போடாதீங்க விஜயபாஸ்கர்" கோபமான ஓ.பி.எஸ்! - அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?

கூட்டத்தில் ஆரம்பம் முதலாகவே அ.தி.மு.க நிர்வாகிகள் வார்த்தைகளால் பயங்கரமாக மோதிக்கொண்டதாகவும், பொன்விழா தொடர்பாகத் தங்களின் விருப்பங்களை எழுதிக்கொடுத்துவிடுங்கள் எனக் கூட்டம் வேகமாக முடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

Published:Updated:
விஜயபாஸ்கர் - ஓ.பி.எஸ்
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் பல்வேறு சர்ச்சை, கூச்சல், குழப்பங்களுக்கிடையே நடந்து முடிந்திருக்கிறது. இ.பி.எஸ் -ஓ.பி.எஸ் அணிகளுக்கு இடையே மிகப்பெரிய வார்த்தை யுத்தம் அரங்கேறியிருக்கிறது.

அதிமுக-வின் பொன்விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது தொடர்பாக தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. காலை பத்து மணியளவில் தொடங்கிய இந்தக் கூட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினர். கூட்டத்துக்கு, அமைப்புச் செயலாளர்கள், வழிகாட்டுதல்குழு உறுப்பினர்கள், அணிகளின் தலைவர்கள், செய்தித் தொடர்பாளர்கள் ஆகிய தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், பொன்னையன், சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்மகன் உசேன், தம்பிதுரை, கோகுல இந்திரா, ஜே.சி.டி.பிரபாகர், வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, எம்.ஆர்.விஜயபாஸ்கர், டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அதிமுக கூட்டத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமி
அதிமுக கூட்டத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமி

இந்தக் கூட்டத்தில் ஆரம்பம் முதலாகவே அ.தி.மு.க நிர்வாகிகள் வார்த்தைகளால் பயங்கரமாக மோதிக்கொண்டதாகவும், பொன்விழா தொடர்பாகத் தங்களின் விருப்பங்களை எழுதிக்கொடுத்துவிடுங்கள் எனக் கூட்டம் வேக வேகமாக முடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து அதிமுக-வின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்,

``கே.பி.முனுசாமிதான் முதல்ல பேசினாரு. அவர் பேசினதும், வைத்திலிங்கம், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் கொஞ்ச நேரம் பேசினாங்க. அதுவரைக்கும் கூட்டம் அமைதியாத்தான் இருந்தது. ஜே.சி.டி.பிரபாகர் பேச ஆரம்பிக்கும்போதே கூட்டத்துல லேசா முணுமுணுப்பு வந்துடுச்சு. 'ஜானகி அம்மா பேர்ல வாங்கின சொத்தைத்தான் கட்சி அலுவலகமா தலைவர் மாத்தினாரு. தலைவர் இறப்புக்குப் பின்னாடி இரண்டு அணியும் ஒண்ணா சேர்ந்தப்ப ஜானகி அம்மாதான் இந்த இடத்தைக் கட்சிக்குக் கொடுத்தாங்க. அதனால கட்சி அலுவலகத்துல ஜானகி அம்மா பேரையும் படத்தையும் இடம் பெறச் செய்யணும். அதுமட்டுமில்ல, தலைமைக் கழகத்துக்கு, "புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை"ன்னு பேர்வெச்சுடலாம். உள்ள இருக்குற மீட்டிங் ஹாலுக்கு அம்மா பேரைவெச்சுக்கலாம்' என்று அவர் சொன்னதும்தான் தாமதம்... வளர்மதி எழுந்து கத்த ஆரம்பிச்சாட்டங்க. 'உங்களுக்கு கட்சியோட வரலாறு தெரியுமா... உயிலைப் படிச்சுப் பார்த்திருக்கீங்களா'ன்னு ஒரே கூச்சல் போட்டு தொடர்ந்து ஜே.சி.டி.பிரபாகரை பேச விடாமப் பண்ணினாங்க. எஸ்.பி.வேலுமணியும், `இவர்கிட்ட (ஜே.சி.டி.பிரபாகர்) யாரு மைக்கைக் கொடுத்தது’ன்னு வெளிப்படையாவே கத்தினாரு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதுவரை அமைதியா இருந்த வைத்திலிங்கம் டென்ஷனாகி வளர்மதியை பயங்கரமா திட்ட ஆரம்பிச்சுட்டாரு. 'இந்தம்மாவுக்கு வேற வேலை இல்லை. எப்பப் பார்த்தாலும் இதையே செஞ்சுக்கிட்டு இருக்காங்க'னு கொஞ்சம் கோபமா கத்தினதும் வளர்மதி கூட்டத்தைவிட்டு வெளியில போயிட்டாங்க. ஆனா, ஒருவழியா சமாதானம் பண்ணி, கூட்டத்துல திரும்ப உட்காரவெச்சாங்க. வளர்மதிக்கு ஆதரவா எடப்பாடி ஏதோ சொல்ல, இன்னும் டென்ஷனாகிட்டாரு வைத்திலிங்கம். அடுத்ததா, மனோஜ் பாண்டியன், புரட்சித் தலைவருக்கு ஸ்டாம்ப் வெளியிடணும் அப்படின்னு பேசிக்கிட்டு இருக்கும்போதே அவருக்குக் குடைச்சல் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவருக்குப் பேசுறதுக்கு சரியா நேரம் கொடுக்கலை. அவர் பேசும்போதும் சத்தம் போட்டுக்கிட்டே இருந்தாங்க.

அடுத்ததா அன்வர் ராஜா, 'புரட்சித் தலைவர் பத்தி துரைமுருகன் தப்பா பேசியிருக்காரு. ஆனா யாருமே பெரிசா எதிர்ப்பைக் காட்டலை, எல்லோரும் அமைதியா இருக்கீங்க, டி.வி விவாதங்கள்லயும் நம்ம கட்சி சார்பா யாரும் கலந்துக்கிறது இல்லை. இதெல்லாம் சரியில்லை, இப்படிப் பேசுறதுக்காக என்னைக் கட்சியைவிட்டு நீக்கினாக்கூட பரவாயில்லை'ன்னு பேச, '' நீங்க சீனியர் இப்படியெல்லாம் பேசாதீங்க. பொன்விழா பத்தி மட்டும் பேசுங்க'னு எடப்பாடி பழனிசாமி சொல்ல, 'கட்சியில சீனியரான என்னையவே பேச விடாமப் பண்றீங்களே'ன்னு அவரும் கூட்டத்தைவிட்டு வெளியில போக, அவரையும் சமாதானம் பண்ணிக் கூட்டிட்டு வந்தாங்க.

கூட்டத்துக்கு வந்த ஓ.பி.எஸ்
கூட்டத்துக்கு வந்த ஓ.பி.எஸ்

இந்தக் களேபரத்துக்கு நடுவுல, சி.விஜயபாஸ்கர், 'ஆளாளுக்கு இப்படிப் பேசினா எப்படிக் கூட்டம் கன்ட்ரோலா இருக்கும்'னு சொல்ல, ஓ.பி.எஸ் டென்ஷனாகிட்டாரு. 'ஆர்டர் போடுற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க விஜயபாஸ்கர்'னு அவர் கோபப்பட்டாரு. இப்படிக் கூச்சல், குழப்பம், சமாதானம்'னு கூட்டம் நடந்து முடிஞ்சுது. கட்சியில இளைஞர்களுக்கு அதிகமா வாய்ப்பு கொடுக்கணும்னு பொன்னையன் பேசினாரு. அதேபோல, கட்சியில எம்.ஜி.ஆர் விசுவாசிகளுக்கு, தொண்டர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கணும்னு தமிழ்மகன் உசேன் பேசினாரு. கடைசியா எல்லாரும் உங்களோட கருத்துகளையும் அவைத் தலைவர் விருப்பத்தையும் எழுத்துபூர்வமாக கொடுங்கன்னு சொல்லிட்டாங்க.

ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், அன்வர் ராஜா'ன்னு ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் யாரும் சசிகலா பத்தி எதுவும் பேசிடக் கூடாதுங்கிறதுக்காகத்தான் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துட்டே இருந்தாங்க. குறிப்பா வளர்மதி, எடப்பாடியோட உத்தரவுலதான் பேசியிருக்கணும். இல்லை அவர்கிட்ட நல்ல பேர் வாங்குறதுக்காகப் பேசியிருக்கணும். அங்க நடந்த விஷயங்களைவெச்சுப் பார்க்கும்போது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும் சரி, இ.பி.எஸ் ஆதரவாளர்களும் சரி... என்ன பேசணும்ங்கிறதை முன்னாடியே பேசிவெச்சுக்கிட்டு வந்த மாதிரிதான் இருந்தது.

வளர்மதி
வளர்மதி

ஆனா, தான் என்ன பேசணும்'னு அவங்க முடிவு பண்ணலாம், ஆனா அடுத்தவங்க என்ன பேசணும்கிறதையும் எடப்பாடி தரப்பே முடிவு பண்ணுறாங்க. தலைவரும் அம்மாவும் கஷ்டப்பட்டு கட்டிக் காத்த இயக்கம் இது. பொன்விழா ஆலோசனைக் கூட்டத்துலயே ஒற்றுமை இல்லை. இவங்க எப்படி கட்சியை ஒற்றுமையா வழிநடத்தப் போறாங்க'' என்றார்கள் வேதனையோடு.