Published:Updated:

சசிகலாவைக் கண்டுகொள்ளாத தினகரன்... கொதிக்கும் ஆதரவாளர்கள்! - என்ன நடக்கிறது அமமுக-வில்?

சசிகலா , தினகரன்

சமீபகாலமாக `சசிகலாவை அரசியல்ரீதியாக தினகரன் ஒதுக்குகிறார்’ என்கிற குமுறல் சசிகலாவின் ஆதரவாளர்கள் இடையே அதிகரித்துவருகிறது. இந்த நிலையில்...

சசிகலாவைக் கண்டுகொள்ளாத தினகரன்... கொதிக்கும் ஆதரவாளர்கள்! - என்ன நடக்கிறது அமமுக-வில்?

சமீபகாலமாக `சசிகலாவை அரசியல்ரீதியாக தினகரன் ஒதுக்குகிறார்’ என்கிற குமுறல் சசிகலாவின் ஆதரவாளர்கள் இடையே அதிகரித்துவருகிறது. இந்த நிலையில்...

Published:Updated:
சசிகலா , தினகரன்

ஓரங்கட்டப்பட்ட சசிகலா:

அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டதுமே, `அ.தி.மு.க-வை மீட்டெடுக்க வேண்டும். கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிக்க வேண்டும்' என்று போர்க்கொடி உயர்த்தினார் டி.டி.வி.தினகரன். இதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியையும் ஆரம்பித்தார். கடந்த 2018-ம் ஆண்டு கட்சி ஆரம்பித்த நேரத்தில், அ.ம.மு.க-வின் பொதுச்செயலாளர் பொறுப்பு சசிகலாவுக்கு வழங்கப்பட்டது.

சசிகலா - தினகரன்
சசிகலா - தினகரன்

அதன் பின்னர் அ.தி.மு.க-வை மீட்பதில் எந்த இடர்பாடும், சிக்கலும் வரக் கூடாது என்பதற்காக சசிகலாவை அ.ம.மு.க-வின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய தினகரன், தன்னை கட்சியின் பொதுச்செயலாளராக அறிவித்துக்கொண்டார். காலங்கள் செல்ல... அ.ம.மு.க-வில் சசிகலாவுடன் தொடர்பில் இருக்கும் நிர்வாகிகளும், சசிகலாவின் ஆதரவாளர்களும் ஓரங்கட்டப்படுவது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சசிகலா அரசியல் பயணம்:

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சசிகலாவின் தீவிர ஆதரவாளர்கள் சிலர், ``சமீபத்தில் சசிகலா தனது ஆன்மிகப் பயணத்தை முடித்துக்கொண்டு, அரசியல் பயணத்தைத் தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். அந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில்தான், சசிகலா சமூக வலைதளத்தில் இணைந்திருக்கிறார்.

ட்விட்டரில் இணைந்தது முதல் அறிக்கை, வாழ்த்து, இரங்கல் என்று மிகவும் ஆக்டிவாகச் செயல்பட்டுவருகிறார். ட்விட்டரில் அவர் கணக்கு ஆரம்பித்து மூன்று நாள் ஆகியும், இதுவரை டி.டி.வி.தினகரன் அவரைப் பின்தொடரவில்லை. அவர்மட்டுமல்ல, அ.ம.மு.க-வின் சீனியர் நிர்வாகியான கடம்பூர் மாணிக்கராஜா உட்பட முக்கிய நிர்வாகிகள் யாரும் சசிகலாவைப் பின்தொடரவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சசிகலாவின் கொள்கைகளை உரக்கச் சொல்வதற்கும், அவரை அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக அமரவைப்பதற்கும் சூளுரைத்த தினகரன், குறைந்தபட்சம் ட்விட்டரில்கூட அவரை பின்தொடராதது சசிகலா ஆதரவாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தினகரனின் நடவடிக்கைக்கு பயந்து அ.ம.மு.க ஐடி விங்-கின் முக்கிய நிர்வாகிகள்கூட சசிகலாவை ட்விட்டரில் பின்தொடர அஞ்சுகிறார்கள். இந்த விவகாரம் சசிகலாவின் குடும்பத்துக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது" என்றனர்.

தினகரனின் ட்விட்டர் பக்கத்தில் சென்று பார்த்தோம், அ.ம.மு.க-வின் ட்விட்டர் பக்கத்தை மட்டுமே அவர் பின்தொடர்கிறார். சசிகலாவை அவர் இதுவரை பின்தொடரவில்லை. சசிகலாவும் யாரையும் பின்தொடரவில்லை. இதன் மூலம் இருவருக்குமிடையே இருக்கும் கருத்து வேறுபாடு வெட்ட வெளிச்சமாகியிருப்பது அ.ம.மு.க-வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism