Published:Updated:

அமைச்சருக்கு தெரியாமல் நடந்ததா நியமனம்... கல்வி தொலைக்காட்சி C.E.O நியமனச் சர்ச்சையும் பின்னணியும்!

அமைச்சருக்கு தெரியாமல் நடந்ததா நியமனம்?

கல்வி தொலைக்காட்சியின் சி.இ.ஒ-வாக மணிகண்ட பூபதி என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரின் நியமனம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

அமைச்சருக்கு தெரியாமல் நடந்ததா நியமனம்... கல்வி தொலைக்காட்சி C.E.O நியமனச் சர்ச்சையும் பின்னணியும்!

கல்வி தொலைக்காட்சியின் சி.இ.ஒ-வாக மணிகண்ட பூபதி என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரின் நியமனம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

Published:Updated:
அமைச்சருக்கு தெரியாமல் நடந்ததா நியமனம்?

தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சியின் முதன்மைச் செயல் அலுவலராக மணிகண்ட பூபதி என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் சில தனியார் தொலைக்காட்சிகளிலும் யூ-டியூப் சேனல்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தப் பதவிக்கான விண்ணப்பத்தில் ஐந்து முதல் எட்டு ஆண்டுகள்வரை அனுபவம் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்கள் எளிதாக வீட்டிலிருந்தபடியே கல்வி கற்க பள்ளிக்கல்வித்துறை சார்பில், கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளி மாணவர்கள் வீடுகளிலேயே முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், அப்போது அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றலுக்குக் கல்வி தொலைக்காட்சிதான் பெரியளவில் உதவியது. இதன் காரணமாகவே தி.மு.க ஆட்சி அமைந்த பின்னரும் கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்ற அன்பில் மகேஸ் முதன்முதலில் பார்வையிட்டது, அதிக கவனம் செலுத்தியதும் இந்தக் கல்வித் தொலைக்காட்சியில்தான். அரசு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நான்கு ஆண்டுகளாக முதன்மைச் செயலாளர் இல்லாமல் இயங்கிவந்த கல்வி தொலைக்காட்சிக்கு அந்தப் பதவி உருவாக்கப்பட்டு, மணிகண்ட பூபதி நியமிக்கப்பட்டிருக்கிறார். சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்ட மணிகண்ட பூபதிக்கு மாதம் 1.5 லட்சம் ஊதியம். இரண்டு ஆண்டுகளுக்கு அவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
கோப்புப்படம்

தி.மு.க தனது கட்சிக்காரர்களை வைத்து இளைஞரணி சார்பில் “திராவிட மாடல் பயிற்சிப் பாசறை” என்ற நிகழ்ச்சி மூலம் தி.மு.க-வின் அரசியல் வரலாறு குறித்தும், திராவிட சித்தாந்தம் குறித்து வகுப்புகள் எடுத்துவருகிறது. இந்தச் சூழலில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் கல்வி தொலைக்காட்சியின் முதன்மைச் செயலாளராக வலதுசாரி சிந்தனை உடைய மணிகண்ட பூபதி என்பவரை நியமித்ததது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வலதுசாரி, ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி அவரின் நியமனத்துக்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து, தற்போது அவர் நியமனத்தை நிறுத்தி வைத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நியமனச் சர்ச்சை குறித்து பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ``கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்துவதற்கு சி.இ.ஓ நியமிக்கத் திட்டமிட்டு அதற்கான விளம்பரம் மே மாதம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கொடுக்கப்பட்டது. அதற்குக் கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. அதில் இறுதி நேர்காணலுக்கு பதினோர் பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். இதை ஐந்து பேர் அடங்கிய குழு (திருமாவேலன், பாஸ்கர் சக்தி, ரவி, பிரம்மநாதன், பாடநூல் கழக இணை இயக்குநர் ஆகியோர் அடங்கிய குழு) நேர்காணல் செய்து ஐந்து பேரைத் தேர்வு செய்தார்கள்.

மணிகண்ட பூபதி - கல்வி தொலைக்காட்சி சிஇஒ
மணிகண்ட பூபதி - கல்வி தொலைக்காட்சி சிஇஒ

இறுதிச்சுற்றுக்கு மூவரை தேர்வுசெய்து, அதில் இருவரின் பெயரை இறுதியாகப் பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்குப் பரிந்துரை செய்தார்கள். அதிலிருந்த மணிகண்ட பூபதியின் பெயர் இறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது” என மூச்சுவிடாமல் நடந்த விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

அமைச்சர் தரப்பில் கேட்டபோது, `` `என்னுடனும் வலதுசாரி சிந்தனையுடைய சிலர் பேசுகிறார்கள். அதனால் என்னையையும் அந்த அமைப்பைச் சேர்ந்தவன் எனச் சொல்ல முடியுமா? செயல்பாட்டை வைத்துத்தான் விமர்சனம் செய்ய வேண்டுமே தவிர கொள்கையை வைத்து ஒருவரின் நியமனத்தைச் சரி தவறு எனச் சொல்லக்கூடாது. இல்லம் தேடிக் கல்விக்கும் இதேபோல விமர்சனம் எழுந்தது. யாரும் எந்தக் கொள்கையையும் திணிக்கும் இடமாகத் தமிழ்நாட்டில் எந்தத் துறையும் இருக்காது” என அமைச்சர் பதிலளித்தபோது அதில் இவ்வளவு சிக்கல் இருக்கும் என்று தெரியவில்லை. அதிகாரிகளை முழுவதுமாக நம்பி, அவர்கள் நியமனம் செய்தால் சரியாக இருக்கும் என்று நினைத்ததன் பலனை அவர் நிறையவே அனுபவித்துள்ளார். இனி நேரடியாக அனைத்து விவகாரங்களையும் தானே கவனிப்பது என்ற இடத்துக்கு வந்துவிட்டார். விரைவில் எல்லாம் சரி செய்யப்படும்" என்றனர்.

மணிகண்ட பூபதி தரப்பில் கேட்டபோது, “அவருக்கும் வெளியில் சொல்லப்படும் குறிப்பிட்ட சேனலுக்கும்... கொள்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. காழ்ப்புணர்ச்சியில் கிளப்பிவிடப்பட்ட வீண் வதந்தி” என்றனர்.

 மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மாணவர்களுடன் உதயநிதி ஸ்டாலின் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பயன் தந்த இந்தக் கல்வி தொலைக்காட்சியை எந்தவித சர்ச்சைகளுக்கும் இடமளிக்காமல் சிறப்பாக அரசு வழிநடத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.