Published:Updated:

ஒரு நாள் மழைக்கே தேங்கிய வெள்ளம்; சகதியான சாலைகள்... `ஸ்மார்ட் சிட்டி’ மதுரையில் நேரடி ரவுண்ட்அப்!

மதுரை - மழைத் தண்ணீர்

மதுரை நகருக்குள் வழக்கமாக மாநகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட சாலைகள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட சாலைகள் என அனைத்தும் சேதமாகி 'சர்வதேசப் பல்லாங்குழிப் போட்டி' நடத்தும் அளவுக்குக் காட்சியளிக்கின்றன.

ஒரு நாள் மழைக்கே தேங்கிய வெள்ளம்; சகதியான சாலைகள்... `ஸ்மார்ட் சிட்டி’ மதுரையில் நேரடி ரவுண்ட்அப்!

மதுரை நகருக்குள் வழக்கமாக மாநகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட சாலைகள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட சாலைகள் என அனைத்தும் சேதமாகி 'சர்வதேசப் பல்லாங்குழிப் போட்டி' நடத்தும் அளவுக்குக் காட்சியளிக்கின்றன.

Published:Updated:
மதுரை - மழைத் தண்ணீர்

ஸ்மார்ட் சிட்டி என்றால் பொலிவுறு நகரம் என்று சொன்னார்கள். ஆனால், மதுரையோ அழிவுறும் நகரம்போல் காட்சியளிக்கிறது எனப் புலம்புகிறார்கள் மக்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்ட தமிழகத்தின் 11 மாநகராட்சிகளில் மதுரையும் ஒன்று. இந்தத் திட்டத்தால் அதிகம் அடி வாங்கிய நகரமென்றும் மதுரையைச் சொல்லலாம்.

சகதி - தெருக்கள்
சகதி - தெருக்கள்

பல கோடி நிதிகளை ஒதுக்கி அவ்வப்போது புதிய சாலைகளை அமைப்பது... பிறகு அதைத் தோண்டி எதையாவது புதைப்பது... பின்பு அதற்கொரு காரணத்தைக் கதைப்பது எனத் தார்ச் சாலைகளை மண்சாலைகளாக மாற்றும்  மேஜிக் தெரிந்த மதுரை மாநகராட்சி அதிகாரிகளை அடித்துக்கொள்ள உலகத்தில் ஆள் இல்லை என மக்கள் கமென்ட் அடிக்கிறார்கள்.

சென்னையில் மழை வெள்ளம் வந்தால் பெரிய பாதிப்பு வருமாமே என்று கவலைப்படும் மக்கள், மதுரைக்காரன் சாலைப்பள்ளத்தில் மல்லாக்க விழும்போது கவலைப்படுவதில்லை.

ஒரு நாள் மழைக்கே தேங்கிய வெள்ளம்; சகதியான சாலைகள்... `ஸ்மார்ட் சிட்டி’ மதுரையில் நேரடி ரவுண்ட்அப்!

ஒரு நாள் மழைக்கே சிட்னி நகரம், வெனிஸ் நகரம்போல ஆன கோலத்தைக் காண ஒரு ரவுண்ட் அடித்தோம்.

`பொன்னியின் செல்வனி’ல் கப்பல் கடலில் மூழ்கி எழுவதுபோல், மதுரை சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் வாகனங்கள் விழுந்து எழுவதைக் காணவே பாவமாக இருக்கிறது. தண்ணீர் வடிந்தாலும் சில சாலைகள் சதுப்பு நிலம்போல் மாறி சறுக்கு விளையாட அழைக்கின்றன.

 தெருக்கள்
தெருக்கள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1,889 கோடி ரூபாய் மதிப்பில் மதுரையில் 13 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதில் முன்பிருந்ததைவிட சிறியதாக பெரியார் பேருந்து நிலையம், தமுக்கம் மாநாட்டு மையம், பன்னடுக்கு வாகனக் காப்பகம், நான்கு மாசி வீதிகளில் சிமென்ட் சாலை, அதில் அலங்கார விளக்குகள், குன்னத்தூர் சத்திரத்தில் ஷாப்பிங் மால் என சிலவற்றின் வேலைகள் முடிந்துள்ளன.

ஆனாலும் இன்னும் பன்னடுக்கு வாகனக் காப்பகம் பயன்பாட்டுக்கு வரவில்லை, பெரியார் பேருந்து நிலையத்தில் ஆறு தளங்கள்கொண்ட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், பிரமாண்ட வாகனக் காப்பாகத்தின் கட்டுமான வேலைகள் முடிவடையவில்லை. வைகை ஆற்றங்கரையில் இருபுறமும் அமைக்கப்பட்ட சாலைகள் பணி முழுமையடையவில்லை.

ஒரு நாள் மழைக்கே தேங்கிய வெள்ளம்; சகதியான சாலைகள்... `ஸ்மார்ட் சிட்டி’ மதுரையில் நேரடி ரவுண்ட்அப்!

அது தற்போது, தனியார் வாகனங்கள் நிறுத்துமிடமாகவும், மாட்டுத் தொழுவமாகவும் பயன்பட்டுவருகிறது. இதனால் நகரில் போக்குவரத்து நெருக்கடிகள் அதிகமாகிவருவது இது ஒரு பக்கமென்றால், இல்லாத காதுக்கு ஜிமிக்கிபோல அதில் விளக்கு அமைத்துவருகிறார்கள்.

மதுரை நகருக்குள் வழக்கமாக மாநகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட சாலைகள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட சாலைகள் என அனைத்தும் சேதமாகி, 'சர்வதேசப் பல்லாங்குழிப் போட்டி' நடத்தும் அளவுக்குக் காட்சியளிக்கின்றன.

மதுரை
மதுரை

மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி மாசி வீதிகளில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலைகள் பெயர்ந்து வெயில் காலத்தில் தூசிகளைக் கிளப்பி தொல்லை தருவது ஒரு பக்கமென்றால், சிறு மழை வந்துவிட்டாலே வலை வீசி மீன் பிடிக்கும் வகையில் மாசி வீதிகள் குளமாகிவிடுகின்றன.

நூறு ஆண்டுகளுக்கு அமைக்கப்பட்ட விளக்குத்தூண் வெளிச்சமிட்டுக்கொண்டிருக்கும்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி செலவழித்து அமைக்கப்பட்ட அலங்கார விளக்குகள் அனைத்தும் ஆஃப் ஆகி அலங்கோலமாகக் காட்சியளிக்கின்றன.

தெருக்கள்
தெருக்கள்

மதுரை நகரம் முழுக்க முக்கிய சாலைகள் மட்டுமல்ல, சந்து பொந்து இண்டு இடுக்கிலெல்லாம் பெரும்பள்ளங்களைத் தோண்டியதால் மழை காலத்தில் வெள்ளம் தேங்கிவிடுகிறது. இதில், குழாய் பதிக்கிறோம் என்று தோண்டி போட்ட பள்ளங்களை மூடாமலும், எகிடு தகிடாக மூடியும் மக்களையும், வாகன ஓட்டிகளையும் பல்டி அடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அடிக்கடி சாதாரண மழைக்கே மதுரை மாநகரம், மாநரகமாகிவிடுகிறது. வரும் நாள்களில் பெரு மழை வரும் என்று மதுரையும் எச்சரிக்கப்பட்டிருப்பதால், வெளியே செல்லலாமா, வேண்டாமா என்றும், டூ வீலர், ஃபோர் வீலரை மாற்றிவிட்டு ஃபைபர் படகு அல்லது கட்டுமரம் வாங்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்களாம் மதுரை மக்கள்.

செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்
செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்

'செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்...' மதுரை மக்கள் இப்போது அதிகம் படிக்கிற பாடல் இதுதானாம்.

ஒருசில இடங்களில் பள்ளங்கள் சரி செய்யப்பட்டிருக்கின்றன என்றாலும், அது போதுமான அளவில் இல்லை என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது. பெருமழைக்கு முன்னதாக அனைத்தும் சரிசெய்யப்படுமா என்பதுதான் இப்போதைய கேள்வி!