Published:Updated:

ஜெயலலிதா மரணம்: மார்ச் 21-ம் தேதி நேரில் ஆஜராக ஓபிஎஸ்-க்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!

ஓபிஎஸ்-ஸுக்கு ஆறுமுகசாமி விசாரணை சம்மன்!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஓபிஎஸ், சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர், வரும் 21-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மரணம்: மார்ச் 21-ம் தேதி நேரில் ஆஜராக ஓபிஎஸ்-க்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஓபிஎஸ், சசிகலா அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர், வரும் 21-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

Published:Updated:
ஓபிஎஸ்-ஸுக்கு ஆறுமுகசாமி விசாரணை சம்மன்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கில், விசாரணை நடத்த நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ல் இடைக்கால தடை விதித்திருந்தது. அதையடுத்து தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இந்த வழக்கில் நேற்று விசாரணையை மீண்டும் தொடங்கியது. அதில் முதற்கட்டடமாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்போலோ மருத்துவர்களிடம் நேற்று ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக எய்ம்ஸ் மருத்துவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

சசிகலா, ஓ.பன்னீர்செல்வம்
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம்

இந்த விசாரணையில், மருத்துவர் மதன்குமாரிடம் விசாரணை ஆணையத்தினர் குறுக்கு விசாரணை நடத்தினர். பின்னர் இந்த விசாரணையில், 2016 டிசம்பர் 4-ல் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும், மாரடைப்பு ஏற்பட்டதும் உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டது எனவும் மதன்குமார் கூறியிருந்தார். மேலும் இந்த விசாரணையில் கலந்துகொள்ளாத மருத்துவர்கள் வரும் 15-ம் தேதி விசாரணைக்கு வர வேண்டும் எனவும் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 நீதியரசர் ஆறுமுகசாமி
நீதியரசர் ஆறுமுகசாமி

முக்கியமாக வரும் 21-ம் தேதி ஓ.பி.எஸ் விசாரணையில் ஆஜராக வேண்டுமென்று ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் சசிகலாவின் அண்ணண் மனைவி இளவரசிக்கும், வரும் 21-ம் தேதி ஆஜராக வேண்டும் என விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் ஓபிஎஸ் சம்மன் அனுப்பப்பட்டிருந்தும் ஒரு முறைகூட ஓபிஎஸ் விசாரணைக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.