Published:Updated:

ஒன் பை டூ: முதல்வரான பிறகு ஸ்டாலினிடம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

அருணன், நாராயணன் திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
அருணன், நாராயணன் திருப்பதி

ஆமாம். நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ‘எனக்கு வாக்களிக்காதவர்களும்... ஏன் இவருக்கு வாக்களிக்கத் தவறினோம் என்று நினைக்கும் அளவுக்குச் செயல்படுவேன்

ஒன் பை டூ: முதல்வரான பிறகு ஸ்டாலினிடம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

ஆமாம். நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ‘எனக்கு வாக்களிக்காதவர்களும்... ஏன் இவருக்கு வாக்களிக்கத் தவறினோம் என்று நினைக்கும் அளவுக்குச் செயல்படுவேன்

Published:Updated:
அருணன், நாராயணன் திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
அருணன், நாராயணன் திருப்பதி

பேராசிரியர் அருணன், சி.பி.எம்

ஒன் பை டூ: முதல்வரான பிறகு ஸ்டாலினிடம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

“ஆமாம். நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ‘எனக்கு வாக்களிக்காதவர்களும்... ஏன் இவருக்கு வாக்களிக்கத் தவறினோம் என்று நினைக்கும் அளவுக்குச் செயல்படுவேன்’ என்று ஆரம்பத்தில் முதல்வர் சொன்னார். அது வெறும் வாக்கியமாகப் போய்விடுமோ என்கிற கேள்வி அப்போது என்னிடம் எழுந்தது. ஆனால், இந்த நூறு நாள்களில் அதைச் சாதித்திருக்கிறார் முதல்வர். கொங்கு மண்டலத்தில் தி.மு.க கூட்டணி வெற்றிபெறவில்லை. அங்கு கொரோனாவைக் கட்டுப்படுத்த அவர் எடுத்த தீவிர முயற்சிகள், அந்தப் பகுதிகளுக்கு அவர் அறிவித்த புதிய திட்டங்கள் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றன. அ.திமு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் தொடர்வது, அ.தி.மு.க தலைவர்களின் படம் அச்சிடப்பட்ட புத்தகப் பைகளை ‘அப்படியே இருக்கட்டும்’ எனச் சொன்னது இவையெல்லாம் முதல்வரின் பெருந்தன்மையைக் காட்டுகின்றன. அனைத்துக் கட்சிக் கூட்டங்களைக் கூட்டி எதிர்க்கட்சிகள், தோழமைக் கட்சிகள் முன்வைக்கும் கருத்துகளைக் காது கொடுத்துக் கேட்கிறார். அமைச்சர்கள், தன் கட்சி எம்.எல்.ஏ-க்கள் வரம்புமீறிப் பேசினால் முதல்வரே எழுந்து கண்டிக்கிறார். அவர்களின் வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்கிறார். ‘நான் ஒன்பதாவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருக்கிறேன். இவ்வளவு கண்ணியமான சபையைப் பார்த்ததில்லை’ என அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் வார்த்தைகளே, முதல்வரின் அணுகுமுறை மாற்றத்துக்கான நற்சான்று!”

ஒன் பை டூ: முதல்வரான பிறகு ஸ்டாலினிடம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

நாராயணன் திருப்பதி, பா.ஜ.க

“தனிப்பட்ட முறையில் முதல்வரின் ஆளுமை அதிகரித்திருப்பதைப்போலத் தோன்றினாலும், அரசியல்ரீதியான அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது, ‘நாங்கள் சொன்னதைச் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம்’ என்றார்கள். அதனால், மக்கள் இவர்கள்மீது நம்பிக்கைவைத்து வாக்களித்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, அவர் சொன்னது எதையும் செய்யவில்லை என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல... கடந்த காலத்தில் சுப, ராஜேஸ்வரி ஆகியோர் விபத்துகளில் இறந்தபோது ஆளுங்கட்சியை நோக்கிக் கொதித்தவர், இப்போது விழுப்புரம் விஷயத்தில் அதற்கு நேர்மாறாக நடந்துகொள்கிறார். அதேபோல, பொருளாதார வளர்ச்சிக்காக சில குழுக்களை அமைத்ததோடு சரி... பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைவாய்ப்புகளை, தொழில் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கான எந்தத் திட்டமும் இவர்களிடம் இல்லை. கடந்தகாலத்தில் விவசாயிகளுக்காகப் பேசினார்கள், போராடினார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு பயிர்க் காப்பீட்டைக் கைவிட்டார்கள். தொலைநோக்குப் பார்வையோடு, ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் செயல்படும் என நினைத்தோம். ஆனால், அப்படி எந்தப் பார்வையும் இவர்களிடம் இல்லை!’’