Published:Updated:

விஐபி தொகுதி: அருப்புக்கோட்டை... முந்துகிறார் ராமச்சந்திரன்!

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

தொகுதிக்குள் சொல்லிக்கொள்ளும்படியான திட்டங்களை நிறைவேற்றாதது இவருக்கு மைனஸ்.

விஐபி தொகுதி: அருப்புக்கோட்டை... முந்துகிறார் ராமச்சந்திரன்!

தொகுதிக்குள் சொல்லிக்கொள்ளும்படியான திட்டங்களை நிறைவேற்றாதது இவருக்கு மைனஸ்.

Published:Updated:
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

எம்.ஜி.ஆரை எம்.எல்.ஏ-வாக்கி, முதல்வராகவும் அழகுபார்த்த அருப்புக்கோட்டை தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மீண்டும் அங்கு தி.மு.க சார்பில் களமிறங்குகிறார். சாத்தூர் தொகுதியில் ஆறு முறையும், விளாத்திகுளம் மற்றும் அருப்புக்கோட்டைத் தொகுதிகளில் தலா ஒரு முறையும் என அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரு கட்சிகளின் சார்பாகவும் எட்டு முறை எல்.எல்.ஏ-வாகியிருக்கிறார் ராமச்சந்திரன்.

விஐபி தொகுதி: அருப்புக்கோட்டை... முந்துகிறார் ராமச்சந்திரன்!

விருதுநகரில் தங்கியிருந்தாலும் அடிக்கடி தொகுதிக்குள் ராமச்சந்திரனைப் பார்க்கலாம். குடிநீர்த் தட்டுப்பாடான பகுதிகளில் சொந்தச் செலவில் லாரியில் குடிநீர் விநியோகம் செய்வது, கொரோனா காலத்தில் தொகுதி மக்களுக்கு நிவாரணம் அளித்தது, மக்களின் நல்லது கெட்டது நிகழ்வுகளில் கலந்துகொள்வது ஆகியவை இவருக்கு ப்ளஸ். ஆனால், தொகுதிக்குள் சொல்லிக்கொள்ளும்படியான திட்டங்களை நிறைவேற்றாதது இவருக்கு மைனஸ்.

விஐபி தொகுதி: அருப்புக்கோட்டை... முந்துகிறார் ராமச்சந்திரன்!

அ.தி.மு.க வேட்பாளராக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் மூன்றாம் முறையாகக் களமிறங்கியிருக்கிறார். கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலின்போது, ‘‘தேர்தலில் வெற்றிபெற்றதும் வீட்டுக்கு 3,000 ரூபாய் மதிப்புள்ள பொருள்களைப் பரிசாக வழங்குவேன்’’ என்று பச்சை நிற டோக்கனை வழங்கி, வெற்றிபெற்றதுடன் அமைச்சராகவும் ஆனார். ஆனால், அதற்குப் பிறகு டோக்கனைப் பற்றி அவர் எதுவும் பேசவில்லை. கடுப்பான மக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டும், காரை வழிமறித்தும் பார்த்தார்கள்... மனிதர் அசைந்து கொடுக்கவில்லை. தவிர, வைகைச்செல்வன் சென்னையில் வசித்துவருவதை முன்வைத்து, “தேர்தல் நேரத்தில் மட்டுமே தொகுதிக்குள் தலைகாட்டுகிறார்... கொரோனா காலத்தில்கூட எட்டிப் பார்க்கவில்லை” என்று முணுமுணுக்கிறார்கள் மக்கள். இன்னொரு பக்கம், “ராஜேந்திர பாலாஜிக்கும் வைகைச்செல்வனுக்கும் இடையிலான மோதல் காரணமாக அ.தி.மு.க-வினரும் அவ்வளவாகப் பிரசாரத்தில் முனைப்பு காட்டவில்லை” என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

மக்கள் நீதி மய்ய வேட்பாளராக, ஜெயவிலாஸ் நூற்பாலை நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான உமாதேவி களமிறங்கியுள்ளார். உமாதேவி, தான் சார்ந்த நாயக்கர் சமுதாய மக்களின் வாக்குகளையும், தனது நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 15,000 தொழிலாளர்களின் குடும்பத்தினரின் வாக்குகளையும் நம்பியிருக்கிறார். இதனால், தி.மு.க-வின் வாக்குகள் கணிசமாகக் குறையலாம் என்கிறார்கள். அதனால், அருப்புக்கோட்டைக்குப் பிரசாரத்துக்கு வந்த உதயநிதி மூலம், ஜெயவிலாஸ் குழுமத்தின் மற்ற உரிமையாளர்களிடம் தனக்காக ஆதரவு திரட்டியிருக்கிறார் ராமச்சந்திரன்.

உமாதேவி
உமாதேவி

‘‘உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து என்னை மன்னித்து வாக்களியுங்கள்’’ என்று பிரசாரத்தில் பேசிவருகிறார் வைகைச்செல்வன். ‘‘இதுதான் எனக்குக் கடைசித் தேர்தல். மற்றவர்களைப்போல ஓடி ஒளிய மாட்டேன். பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களுடனேயே இருப்பேன்’’ எனச் சொல்லி வாக்குச் சேகரித்துவருகிறார் ராமச்சந்திரன்.

கள நிலவரத்தை கணித்துப் பார்த்தால், மும்முனைப் போட்டியில் ராமச்சந்திரனே முந்துகிறார்.