Published:Updated:

அருப்புக்கோட்டை நகர்மன்றக் கூட்டம்: பாஜக Vs திமுக - ஒருமையில் விமர்சித்த திமுக கவுன்சிலரால் சலசலப்பு

விவாதம்

"ஆக்கிரமிப்பு எனத் தெரிந்தும் நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது அந்த நபர் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலா அல்லது ஒட்டுமொத்தமாக பா.ஜ.க கட்சி என்ற பயமா?" - திமுக கவுன்சிலர்.

அருப்புக்கோட்டை நகர்மன்றக் கூட்டம்: பாஜக Vs திமுக - ஒருமையில் விமர்சித்த திமுக கவுன்சிலரால் சலசலப்பு

"ஆக்கிரமிப்பு எனத் தெரிந்தும் நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது அந்த நபர் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலா அல்லது ஒட்டுமொத்தமாக பா.ஜ.க கட்சி என்ற பயமா?" - திமுக கவுன்சிலர்.

Published:Updated:
விவாதம்

அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள்‌ கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நகராட்சியின் எதிர்காலப் பணிகள், நிலுவையில் உள்ள பணி விவரம் மற்றும் டெண்டர் விஷயங்கள் முறையே பேசப்பட்டன.

அருப்புக்கோட்டை நகராட்சி
அருப்புக்கோட்டை நகராட்சி

அப்போது கூட்டத்தில் பேசிய 6-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் மணிமுருகன், "ஆட்சி நம்ம ஆட்சி. நம் தலைவர் முதல்வராக இருக்கிறார். நமது தொகுதி உறுப்பினர் மந்திரியாக இருக்கிறார். தி.மு.க உறுப்பினர் நகர்மன்றத் தலைவராக இருக்கிறார். பெரும்பாலும் நாம் கவுன்சிலராக இருக்கிறோம். அனைத்துப் பணிகளும் நன்றாக நடக்கும்போது அருப்புக்கோட்டை நகராட்சியை விமர்சித்து தினசரி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளிவந்துள்ளது. இதை நகராட்சி மன்றம் கண்டிக்க வேண்டும். மேலும், நகராட்சியை விமர்சித்து செய்தி வெளியிட்ட நாளிதழுக்கு இனி நகராட்சி தொடர்பான‌ எந்த விளம்பரமும் கொடுக்கக் கூடாது” என ஓப்பனாகவே ஒருமையில் விமர்சனம் செய்தார். இது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து பேசிய அவர், "அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 29-வது வார்டில் சாலையை ஆக்கிரமித்து பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த நபர் கடை அமைத்திருக்கிறார்.‌ எனவே, அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பு எனத் தெரிந்தும் நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருப்பது அந்த நபர் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலா அல்லது ஒட்டுமொத்தமாக பா.ஜ.க கட்சி மீதுள்ள பயமா?” எனக் கேள்வி எழுப்பினார். இது கவுன்சிலர்கள் கூட்டத்தில் சூட்டைக் கிளப்பியது.

திமுக கவுன்சிலர்
திமுக கவுன்சிலர்

இதற்கு பதிலளித்துப் பேசிய 36-வது வார்டு பா.ஜ.க கவுன்சிலர் முருகானந்தம், "6-வது வார்டு தி.மு.க உறுப்பினரான நீங்கள் உங்களது வார்டிலுள்ள குறையை மட்டும் மன்றத்தில் எடுத்துச் சொன்னால் போதும். தேவையின்றி 29-வது வார்டிலுள்ள பிரச்னையை நீங்கள் பேசவேண்டியதில்லை. அதுபோல, தனிநபர் ஆக்கிரமிப்பைப் பற்றிப் பேசுகையில் பா.ஜ.க கட்சியை இழுக்க என்ன அவசியம் வந்தது?

பாஜக கவுன்சிலர்
பாஜக கவுன்சிலர்

ஆக்கிரமிப்பு இருந்தால் அதை அகற்றுவதற்குக் கோரிக்கை வையுங்கள். அதைவிட்டு, ஒருமையில் பேசி ஒட்டுமொத்த பா.ஜ.க-வையும் மன்றத்தில் இழிவுபடுத்தி வம்பிழுப்பது நல்லதல்ல" என பதிலடி கொடுத்தார். இதைத் தொடர்ந்து, கவுன்சிலர்கள்‌ இருவருக்குள்ளும் மன்றக்கூட்டத்திலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, மற்ற கவுன்சிலர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர்.

அறிக்கை
அறிக்கை

கூட்ட முடிவில், பத்திரிகையாளர்களையும், பா.ஜ.க-வினரையும் கவுன்சிலர் மணிமுருகன்‌ ஒருமையில் பேசியது குறித்து நகர்மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவரிடம் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கேட்டதற்கு, "நகர்மன்றக் கூட்டத்துக்கு பத்திரிகையாளர்களை அழைக்க வேண்டுமென்று எந்த அவசியமும் இல்லை. அவர்களை யார் கூட்டத்துக்கு அழைத்தது?” என பதிலளித்தவாறே கடந்து சென்றனர். இது பற்றித் தகவலறிந்த விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் பாண்டுரங்கன், தி.மு.க கவுன்சிலர் மணிமுருகனின் செயல்களுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.