Published:Updated:

உதவி கேட்டு வந்த பெண்ணை தலையில் அடித்த சம்பவம்: அமைச்சர் வீட்டை முற்றுகையிடச் சென்ற பாஜக-வினர் கைது!

பாஜக-வினர் கைது

உதவி கேட்டுச் சென்ற பெண்ணை மனு வழங்கிய கவரால் தலையில் அடித்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து அமைச்சர் வீட்டை முற்றுகையிடச் சென்ற பாஜக-வினரை விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் கைதுசெய்தனர்.

உதவி கேட்டு வந்த பெண்ணை தலையில் அடித்த சம்பவம்: அமைச்சர் வீட்டை முற்றுகையிடச் சென்ற பாஜக-வினர் கைது!

உதவி கேட்டுச் சென்ற பெண்ணை மனு வழங்கிய கவரால் தலையில் அடித்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து அமைச்சர் வீட்டை முற்றுகையிடச் சென்ற பாஜக-வினரை விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் கைதுசெய்தனர்.

Published:Updated:
பாஜக-வினர் கைது

விருதுநகர் மாவட்டம், பாலவநத்தத்தில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் உதவி கேட்டு மனு அளிக்க வந்த கலாவதி எனும் பெண்ணை, தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மனு கவரால் தலையில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோவை தமிழ்நாடு பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு கண்டனத்தைத் தெரிவித்தார். மேலும் ஏழைப் பெண்ணை அடித்ததற்காக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பதவி விலக வேண்டும், இல்லையெனில் பா.ஜ.க சார்பில் வீட்டை முற்றுகையிடுவோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

பாஜக-வினர் கைது
பாஜக-வினர் கைது

அரசியல் வட்டத்தில் சர்ச்சையைக் கிளப்பிய இந்தச் சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் கலாவதி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். ஆனால் அதுவும் சர்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில் விருதுநகர் பா.ஜ.க கிழக்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அறிவிப்பு வெளியிடப்பட்டதால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத் தொடர்ந்து, விருதுநகர் ராமமூர்த்தி சாலையிலுள்ள அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அமைச்சர் வீட்டைச் சுற்றி நான்கு திசைகளிலும், சுமார் 500 மீட்டருக்கு முன்னதாகவே நாலாபுரமும் மாவட்ட காவல்துறையின் சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு எந்தவொரு வாகனமும் அமைச்சர் வீடு இருக்கும் பகுதி வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால், விருதுநகர்-மல்லாங்கிணறு சாலையில் வழக்கமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள், மாற்றுவழியில் நகரைச் சுற்றி மல்லாங்கிணறு சென்றன.

தடுப்புவேலிகள்
தடுப்புவேலிகள்

பா.ஜ.க-வின் வீடு முற்றுகை அறிவிப்பைத் தொடர்ந்து போலீஸார் உஷார்படுத்தப்பட்டு பா.ஜ.க-வினரின் நடவடிக்கைகளை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்தனர். தொடர்ந்து அந்தி மாலையில், விருதுநகர் பா.ஜ.க கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர் சேர்ந்து, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வீட்டை முற்றுகையிடுவதற்காகப் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு திரண்டனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகர் தலைமையிலான போலீஸார், அவர்களைத் தடுத்து நிறுத்தி கைதுசெய்து வாகனங்களில் ஏற்றினர். இதனால் அப்பகுதியே சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.