Published:Updated:

"ஆம் ஆத்மியை வீழ்த்த ரூ.800 கோடிக்கு 40 எம்எல்ஏ-க்களை இழுக்க முயற்சி!" - பாஜக-மீது பாயும் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

``முதல்வர் பதவிக்குப் பேராசைகொள்ளாத மணீஷ் சிசோடியா, எங்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்." - அரவிந்த் கெஜ்ரிவால்

"ஆம் ஆத்மியை வீழ்த்த ரூ.800 கோடிக்கு 40 எம்எல்ஏ-க்களை இழுக்க முயற்சி!" - பாஜக-மீது பாயும் கெஜ்ரிவால்

``முதல்வர் பதவிக்குப் பேராசைகொள்ளாத மணீஷ் சிசோடியா, எங்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்." - அரவிந்த் கெஜ்ரிவால்

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தொடர்புடைய இடங்களில், மாநில கலால் கொள்கை ஊழல் தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்குக் கண்டனம் தெரிவிக்கும்விதமாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி தலைவர்கள் பலரும் பா.ஜ.க-வைச் சாடிவந்தனர். மேலும் இந்த விவகாரத்தில், ஆம் ஆத்மியைவிட்டு வெளியேறினால் தன்மீதான அனைத்து வழக்குகளையும் நீக்குவதாகவும், பா.ஜ.க தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவிருப்பதாகவும், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டிவந்தார்.

மணீஷ் சிசோடியா
மணீஷ் சிசோடியா

அதேபோல, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களை, பா.ஜ.க விலைக்கு வாங்கச் செயல்பட்டுவருவதாகவும் ஆம் ஆத்மி மட்டத்தில் செய்திகள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் இன்று தன்னுடைய இல்லத்தில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை நடத்தினார். இதற்கிடையில் கெஜ்ரிவால், பா.ஜ.க-வின் `ஆபரேஷன் லோட்டஸ்' தோல்விக்குப் பிரார்த்தனை செய்வதற்காக, ராஜ்கோட்டிலுள்ள காந்தியின் நினைவிடத்துக்கு, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களுடன் இன்று சென்றார்.

ராஜ்கோட்டில் அரவிந்த் கெஜ்ரிவால்
ராஜ்கோட்டில் அரவிந்த் கெஜ்ரிவால்

அப்போது ஊடகங்களிடம் பேசிய கெஜ்ரிவால், ``சி.பி.ஐ-யின் ரெய்டுக்குப் பிறகு பா.ஜ.க முதல்வர் பதவி தருவதாகவும், என்னை காட்டிக்கொடுக்க வேண்டுமென்றும், மணீஷ் சிசோடியாவை அணுகியது. முதல்வர் பதவிக்குப் பேராசைகொள்ளாத மணீஷ் சிசோடியா, எங்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். மேலும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களும், அங்கு செல்வதைவிடவும் இறப்பதே மேல் என்று நினைக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க பா.ஜ.க-வுக்கு 40 எம்.எல்.ஏ-க்கள் தேவை. அதற்காகத் தனியாக ரூ.800 கோடியை ஒதுக்கி வைத்திருக்கின்றனர்" எனக் கூறினார்.