Published:Updated:

``பாஜக-வின் புல்டோசர் அரசியல் சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அழிவு!" - அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

``டெல்லியில் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பகுதிகள் ஆக்கிரமிப்பு மற்றும் சட்ட விரோதமானவை என்று கூறலாம். அப்படியானால் டெல்லியின் 80 சதவிகிதத்தை அழித்துவிடுவீர்கள் என்று அர்த்தமா?" - கெஜ்ரிவால்

``பாஜக-வின் புல்டோசர் அரசியல் சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அழிவு!" - அரவிந்த் கெஜ்ரிவால்

``டெல்லியில் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பகுதிகள் ஆக்கிரமிப்பு மற்றும் சட்ட விரோதமானவை என்று கூறலாம். அப்படியானால் டெல்லியின் 80 சதவிகிதத்தை அழித்துவிடுவீர்கள் என்று அர்த்தமா?" - கெஜ்ரிவால்

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

தேசியத் தலைநகரான டெல்லியில், சட்டமன்றத்தில் ஆம் ஆத்மியும், மாநகராட்சி அதிகாரத்தில் பாஜக-வும் இருந்துவருகின்றன. உள்ளாட்சியில் பா.ஜ.க., மாநில ஆட்சியில் ஆம் ஆத்மி என இரு கட்சிகள் இருப்பதாலேயே, அடிக்கடி இந்த இரு கட்சிகளுக்கிடையே அரசியல் மோதல்கள் ஏற்பட்டுவருகின்றன. அந்த வகையில், கடந்த மாதம் ஜஹாங்கிர்புரியில் ஏற்பட்ட இந்து-முஸ்லிம் கலவரத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தபோதும், சில கட்டடங்கள் புல்டோசர் கொண்டு தகர்க்கப்பட்டன. ஜஹாங்கிர்புரி மட்டுமல்லாமல், நியூ ஃப்ரெண்ட்ஸ் காலனி, துவாரகா என டெல்லியின் பல பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற டெல்லி மாநகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இந்த நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக-வின் இத்தகைய புல்டோசர் அரசியலைக் கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்

புல்டோசர்
புல்டோசர்

அந்த வீடியோவில், ``டெல்லி மாநிலம், திட்டமிடப்பட்ட முறையில் உருவாக்கப்படவில்லை. டெல்லியில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட பகுதிகள் ஆக்கிரமிப்பு மற்றும் சட்ட விரோதமானவை எனக் கூறலாம். அப்படியானால் டெல்லியின் 80 சதவிகிதத்தை அழித்துவிடுவீர்கள் என்று அர்த்தமா... அதாவது, 63 லட்சம் மக்களின் வீடுகள், கடைகள் போன்றவை புல்டோசர்களால் தகர்க்கப்படும். இது சுதந்திர இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய அழிவாக இருக்கும்.

இது போன்ற நடவடிக்கைகளை ஆம் ஆத்மியால் பொறுத்துக்கொள்ள முடியாது. டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 வருடங்களாக பா.ஜ.க அதிகாரத்தில் இருந்தது, பணம் வாங்கியது. தற்போது அவர்களின் பதவிக்காலம் மே 18-ம் தேதியுடன் முடிகிறது. இப்படியிருக்க இவ்வளவு பெரிய முடிவுகளை எடுக்க உங்களுக்குச் சட்ட அதிகாரம் இருக்கிறதா... தேர்தல் நடக்கட்டும். அதில், ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வரும் என்பது அனைவருக்குமே தெரியும்" என கெஜ்ரிவால் பேசியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism