Published:Updated:

``சித்து மூஸ் வாலா மரணத்தில் அரசியல் செய்யாதீர்!” - அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

``சித்து மூஸ் வாலா மரணத்தில் அரசியல் செய்யாதீர்!” - அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், பாடகருமான சித்து மூஸ் வாலாவை மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சித்து மூஸ்வாலா தனது பாடலின் மூலம் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர் கொலைசெய்யப்பட்டதில் ஏதோ மர்மம் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் குற்றஞ்சாட்டி வந்தனர். மேலும் பஞ்சாப் பாடகர் சுட்டுக்கொல்லபட்ட சம்பவத்தில் கனடா கும்பலுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், சித்து மூஸ் வாலாவின் தந்தையை சொந்த கிராமத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சித்து மூஸ் வாலா
சித்து மூஸ் வாலா

இந்தநிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது, ஆனால் அதைச் வைத்து அரசியல் செய்யக்கூடாது. பஞ்சாபில் என்ன சம்பவங்கள் நிகழ்ந்தாலும், அதைச் சுற்றி அரசியல் இருக்கக்கூடாது என நம்புகிறேன். சித்து மூஸ் வாலாவை கொலை செய்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் உறுதியளித்தார்'' என கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism