Published:Updated:

``இன்னும் ஒரே மாநிலம்... ஆம் ஆத்மியும் தேசிய கட்சி!" - அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

``இன்னும் ஒரு மாநிலத்தில் அங்கீகாரம் பெற்றால், நாம் அதிகாரபூர்வமாக தேசியக் கட்சி என்று அறிவிக்கப்படுவோம்." - அரவிந்த் கெஜ்ரிவால்

``இன்னும் ஒரே மாநிலம்... ஆம் ஆத்மியும் தேசிய கட்சி!" - அரவிந்த் கெஜ்ரிவால்

``இன்னும் ஒரு மாநிலத்தில் அங்கீகாரம் பெற்றால், நாம் அதிகாரபூர்வமாக தேசியக் கட்சி என்று அறிவிக்கப்படுவோம்." - அரவிந்த் கெஜ்ரிவால்

Published:Updated:
அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி, பஞ்சாப்பில் ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி கட்சி, தற்போது கோவாவில் மாநிலக் கட்சி அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. இதை இந்தியத் தேர்தல் ஆணையமும் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்தத் தகவல் வெளியானதையடுத்து, ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தன் கட்சித் தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதம்
ட்விட்டர்

அதில், ``பஞ்சாப்புக்குப் பிறகு ஆம் ஆத்மி தற்போது கோவாவிலும் மாநில அங்கீகாரம் பெற்ற கட்சியாகியிருக்கிறது. இன்னும் ஒரு மாநிலத்தில் அங்கீகாரம் பெற்றால், நாம் அதிகாரபூர்வமாக தேசியக் கட்சி என்று அறிவிக்கப்படுவோம். இதில், ஒவ்வொரு தொண்டரின் கடின உழைப்புக்காக உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். அதோடு ஆம் ஆத்மியின் சித்தாந்தத்தில் நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கும் நன்றி" என அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இந்த ட்வீட்டில், இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத்தையும் சேர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்டிருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

ஒரு கட்சி தேசிய கட்சியாக அறிவிக்கப்பட வேண்டுமெனில், இந்தியத் தேர்தல் ஆணையம் முன்வைத்திருக்கும் 3 நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்திருக்க வேண்டும். முதல் நிபந்தனை, கடைசியாக நடந்த 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் குறைந்தது 6 சதவிகித வாக்கை அந்தக் கட்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, கடைசியாக நடந்த மக்களவைத் தேர்தலில் குறைந்தது 4 இடங்களில் அந்தக் கட்சி வெற்றிபெற்றிருக்க வேண்டும்.

இரண்டாவது நிபந்தனை, கடைசியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 2 சதவிகித மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும். கூடவே 3 மாநிலங்களிலிருந்து எம்.பி-க்களை பெற்றிருக்க வேண்டும். மூன்றாவது நிபந்தனை, குறைந்தது 4 மாநிலங்களிலாவது, மாநில அந்தஸ்தைப் பெற்றிருக்க வேண்டும்.

தற்போது குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகிவரும் ஆம் ஆத்மி, அங்கும் மாநில அந்தஸ்தை பெற்றுவிட்டால், தேசியக் கட்சியாக அறிவிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.