Published:Updated:

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: ``இளம் எம்.பி-க்களுக்கு மற்ற தலைவர்கள் ஆதரவளிக்க வேண்டும்" - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

"அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்." - பிரதமர் மோடி

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: ``இளம் எம்.பி-க்களுக்கு மற்ற தலைவர்கள் ஆதரவளிக்க வேண்டும்" - பிரதமர் மோடி

"அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்." - பிரதமர் மோடி

Published:Updated:
பிரதமர் மோடி

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதற்கு முன்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ``இது குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாள். ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்து, அதைக் கொண்டாடிவரும் வேளையில், ஜி20 மாநாட்டுக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பை இந்தியா பெற்றிருக்கிறது. இந்த நேரத்தில் நாம் சந்திக்கிறோம். இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுதந்திரத்தின் அமிர்தத்தில் நடைபெறுகிறது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்!
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்!

உலகமே இந்தியாவை உற்று நோக்கும் நேரத்தில், நம்மிடமிருந்து அதன் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது. இது நமக்குக் கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பு. இந்தியாவின் திறமைகளையும் பெருமைகளையும் உலகுக்கு வெளிப்படுத்த இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு.

எனவே, இந்த நேரத்தில் நாட்டின் ஜனநாயகத்தின் பரந்த தன்மை, பன்முகத்தன்மை மற்றும் வலிமை பற்றி உலகம் அதிகம் அறியும். கடந்த சில ஆண்டுகளாகப் பல இளம் எம்.பி-க்களுடன் பேச வாய்ப்பு கிடைத்தது, அவர்களில் பலர் தொடர்ந்து முடங்கிக் கிடப்பது குறித்து தங்களின் கவலையைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ - இந்தியப் பிரதமர் மோடி
இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ - இந்தியப் பிரதமர் மோடி

பாராளுமன்றத்தில். இளம் எம்.பி-க்கள் விவாதங்கள் மற்றும் சட்டமியற்றுவதில் திறம்பட பங்கேற்க விரும்புகின்றனர். மற்ற தலைவர்கள் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.