Published:Updated:

``கொண்டாட வேண்டாம்; புல்டோசர்கள் நாளை உங்கள் வீடுகளுக்கும் வரலாம்..!" - ராஜஸ்தான் முதல்வர் கெலாட்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

``சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பு பலவீனமாக இருந்தால், ஒரு கட்டத்தில் எல்லோருமே கஷ்டப்படவேண்டியிருக்கும்." - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

``கொண்டாட வேண்டாம்; புல்டோசர்கள் நாளை உங்கள் வீடுகளுக்கும் வரலாம்..!" - ராஜஸ்தான் முதல்வர் கெலாட்

``சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பு பலவீனமாக இருந்தால், ஒரு கட்டத்தில் எல்லோருமே கஷ்டப்படவேண்டியிருக்கும்." - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

Published:Updated:
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

நபிகள் நாயகம் விவகாரத்தில், நுபுர் ஷர்மாவைக் கைதுசெய்யக் கோரி டெல்லி, உத்தரப்பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் கடந்த 10-ம் தேதியன்று முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இந்தப் போராட்டம் கலவரமாக மாற, அதைக் கட்டுப்படுத்தும்விதமாக போலீஸார், போராட்டத்தைத் தூண்டியதாக 60-க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் கைதுசெய்திருந்தனர். அதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை, இதில் முக்கியக் குற்றவாளியாகக் கைதுசெய்யப்பட்ட ஜாவேத் முகமதின் வீடு உட்பட போராட்டக்காரர்கள் பலரின் சொத்துகள் புல்டோசர்களால் இடிக்கப்பட்டன. மேலும், இதில் ஜாவேத் முகமதின் வீடு அவரின் மனைவியின் பெயரில் இருப்பதாகவும், சட்டத்துக்குப் புறம்பாக வீடு இடிக்கப்பட்டிருப்பதாகவும் வழக்கறிஞர்கள் பலரும் கூறிவருகின்றனர்.

குடியிருப்புப் பகுதிகள் இடிப்பு
குடியிருப்புப் பகுதிகள் இடிப்பு

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கருத்து தெரிவித்திருக்கிறார். இது குறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடையே பேசிய அசோக் கெலாட், ``சட்டத்தின் ஆட்சியும், அரசியலமைப்பும் பலவீனமாக இருந்தால், ஒரு கட்டத்தில் எல்லோருமே கஷ்டப்படவேண்டியிருக்கும். வேறொருவரின் வீடு இடிக்கப்பட்டால் யாரும் அதைக் கொண்டாட வேண்டாம். புல்டோசர்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் வீடுகளுக்கும் வரலாம். இது போன்ற இடிப்புச் சம்பவங்கள் சரியென்றால், அதை வரவேற்கச் செய்யுங்கள். அதுவே நியாயத்துக்குப் புறம்பாக... அநீதியாக இருந்தால் அதைப் பற்றிக் கூறுங்கள். இன்று மற்றவர்களுக்கு நடந்தது நாளை உங்களுக்கும் நடக்கும்" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism