Published:Updated:

ராஜஸ்தான்: `வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ரூ.500-க்கு காஸ் சிலிண்டர்' - முதல்வர் கெலாட்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

``வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளவர்களுக்கு ரூ.500-க்கு சமையல் காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்" - காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தான் மாநிலம், அல்வாரில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின் பேரணியில் ராகுல் காந்தியுடன் கலந்துகொண்ட ராஜஸ்தானின் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் பேசியதாவது," அடுத்த மாதம் மாநில பட்ஜெட்டுக்குத் தயாராகிவருகிறேன்... இப்போது ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். உஜ்வாலா திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி ஏழைகளுக்கு எல்.பி.ஜி இணைப்புகளை வழங்கினார். ஆனால், அந்த சிலிண்டர்கள் காலியாக இருக்கின்றன.

இப்போது ஒரு சிலிண்டரின் விலை ரூ.1,040 வரை இருக்கிறது. எனவே, வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் ஏழைகள் மற்றும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் என, சிலிண்டர் ஒன்று ரூ 500-க்கு வழங்குவோம்" எனத் தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, அசோக் கெலாட் அரசின் சாதனைகளைப் பாராட்டினார். குறிப்பாக அரசின் சார்பில் திறக்கப்பட்ட 1,700 ஆங்கிலவழிப் பள்ளிகளைப் பற்றிக் குறிப்பிட்டு பாராட்டினார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்
PTI

அடுத்த ஆண்டு ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியமைக்க காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்பூசல் நிலவுகிறது. முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கிடையே பனிப்போர் நிலவுவது குறிப்பிடத்தக்கது.