Published:Updated:

தலைவர் ரேஸ்: அசோக் கெலாட், மீரா குமார், ப.சிதம்பரம்... காங்கிரஸில் நடப்பது என்ன?!

சோனியா காந்தி - ராகுல் காந்தி - ப.சிதம்பரம்

``ஒருவேளை ராகுல் காந்தி தலைவராக வரவில்லையென்றால், அவர் யாரைக் கைகாட்டுகிறாரோ அவர்தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.”

தலைவர் ரேஸ்: அசோக் கெலாட், மீரா குமார், ப.சிதம்பரம்... காங்கிரஸில் நடப்பது என்ன?!

``ஒருவேளை ராகுல் காந்தி தலைவராக வரவில்லையென்றால், அவர் யாரைக் கைகாட்டுகிறாரோ அவர்தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.”

Published:Updated:
சோனியா காந்தி - ராகுல் காந்தி - ப.சிதம்பரம்

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தற்போதே தயாராகிவருகின்றன. இந்தத் தேர்தலிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடியே இருப்பார் என பீகாரில் செய்தியாளர்களைச் சந்தித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மத்தியில் வலுவாக இருக்கும் பாஜக-வைத் தோற்கடிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் சோனியா காந்தி ஒருபுறமும், மம்தா பானர்ஜி மறுபுறமும் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றனர்.

குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சி பொதுத்தேர்தலுக்குத் தயாராகும் வகையில் அரசியல் விவகாரங்கள் குழு, தேர்தல் செயற்பாட்டுக்குழு, யாத்திரைக்குழு என மூன்று குழுக்களை அண்மையில் அமைத்தது. ஆனால், அதேநேரத்தில் உட்கட்சித் தேர்தலை நடத்தாமலும், கட்சிக்கு நிரந்தரத் தலைவரைத் தேர்வு செய்வதிலும் தொடர்ந்து மௌனம் காத்துவருகிறது. இது காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் தேதி, ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என கடந்த ஆண்டு நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, தேர்தல் பணிகளை தொடங்குவதற்கான தேதி தொடங்கிவிட்டதால், காங்கிரஸின் புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ். இதற்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி செயல்பட்டுவருகிறார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பின்னடைவைச் சந்தித்துவருகிறது. வலுவிழந்துவருகிறது. அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வியைச் சந்தித்தது. காங்கிரஸ் துடிப்புடன் செயல்பட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்திவருகின்றனர்.

 மீரா குமார்
மீரா குமார்

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட ‘ஜி-23’ என அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்கள் குழுவினர் சோனியாவுக்கு, ‘காங்கிரஸ் கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சும் வகையில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்று கடிதம் எழுதினர். அதோடு, ‘காங்கிரஸ் கட்சித் தலைமை பொறுப்பிலிருந்து காந்தி குடும்பத்தினர் விலகியிருக்க வேண்டும்’ எனவும் அவர்கள் வெளிப்படையாகக் குரல் எழுப்பினர்.

இந்நிலையில், கட்சித் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தைச் சாராத நபர் தலைவர் என்றால் அது யாராக இருக்கக்கூடும் என யூகங்கள் வர தொடங்கிவிட்டன. அந்த வகையில் அசோக் கெலாட், முகுல் வாஸ்னிக், மீரா குமார், ப.சிதம்பரம், மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. காங்கிரஸ் தலைவராகத் தன்னை தேர்ந்தெடுக்க 101 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாக ப.சிதம்பரமும் அண்மையில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். ஜி-23 குழுவைச் சேர்ந்த தலைவர்களும் தங்களில் ஒருவரை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

புதிய காங்கிரஸ் தலைவர் அந்தக் கட்சியின் மாநிலப் பிரதிநிதிகளான சுமார் 14 ஆயிரம் பேரால் தேர்ந்தெடுக்கப்படுவார். அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் மத்திய தேர்தல்குழுத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி புதிய காங்கிரஸ் தலைவர் மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலைச் சமர்ப்பிக்கவிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் தேர்தெடுக்கப்படும் பட்சத்தில் 1998-ம் ஆண்டுக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் சூழல் உருவாகும்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இது தொடர்பாக டெல்லி தரப்பில் விசாரித்தபோது, “இதை யூகங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் காங்கிரஸ் தொண்டர்களைப் பொறுத்தவரை ராகுல் காந்தி தலைவராக வருவதையே சாலச்சிறந்ததாக மக்கள் நினைக்கிறார்கள். ஒருவேளை அவர் வரவில்லையென்றால், அவர் யாரைக் கைகாட்டுகிறாரோ அவர்தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதேநேரத்தில் இது பேசுபடும் பொருளும் கிடையாது. உட்கட்சி விவகாரம். சித்தாந்த எதிர்ப்புக்கான வேலைகளைப் பார்த்துகொண்டிருக்கிறோம். கட்சியை நிர்வகிக்க ஒரு தலைவர் தேவை. அது விரைவில் தெரியும்” என்கிறார்கள்.