Published:Updated:

விழுப்புரம்: ``கிரிக்கெட்டில் கட்டாயம் அரசியல் கிடையவே கிடையாது" - அசோக் சிகாமணி

அசோக் சிகாமணி பேட்டி

"ஜெகதீசன் தொடர்ச்சியாக ஐந்து சதங்களை அடித்து உலக சாதனை படைத்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" - அசோக் சிகாமணி.

விழுப்புரம்: ``கிரிக்கெட்டில் கட்டாயம் அரசியல் கிடையவே கிடையாது" - அசோக் சிகாமணி

"ஜெகதீசன் தொடர்ச்சியாக ஐந்து சதங்களை அடித்து உலக சாதனை படைத்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" - அசோக் சிகாமணி.

Published:Updated:
அசோக் சிகாமணி பேட்டி

விழுப்புரம் மாவட்டம், விக்கிவாண்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று புதிய விளையாட்டு மைதானத்தை தமிழ்நாடு கிரிகெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி திறந்து வைத்து பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்தியாவிலேயே பாரம்பரியமான சிறந்த கிரிக்கெட் சங்கம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தான். அதில் நான் தலைவராக பொறுப்பேற்று இருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம். இதற்கெல்லாம் முன்னோடியாக இருந்தவர் சீனிவாசன். அவரின் தயவால் தான் நான் இன்று இந்த பொறுப்பில் இருக்கிறேன். இதற்கு முன் மாவட்ட அளவில் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது நகரம் மற்றும் மாவட்டங்கள் வாரியாக செயல்பட வேண்டியுள்ளது. 

அசோக் சிகாமணி
அசோக் சிகாமணி

திறமையானவர்கள் நிறைய பேர் ஊர் பகுதியில் தான் இருக்கின்றனர். அவர்களை எப்படி கண்டறிந்து எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கலாம் என்பதை பார்ப்போம். தமிழகத்தில் அஸ்வின், தினேஷ் கார்த்திக் மட்டுமல்ல... சாய் கிஷோர், சாய் சுதர்சன், ஜெகதீசன் போன்றவர்களும் இருக்கிறார்கள். இப்போது கூட ஜெகதீசன் தொடர்ச்சியாக ஐந்து சதங்களை அடித்து உலக சாதனை படைத்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களைப் போல இங்கு நிறைய கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள். 

இந்திய அணி என்று போகும்போது, ரஞ்சிக்கோப்பை வெற்றியாளர்கள் போன்றவர்களைத்தான் எதிர்பார்ப்பார்கள். இம்முறை தமிழக வீரர்கள் நல்ல முறையில் விளையாடி காட்டுவார்கள் என நம்பிக்கை இருக்கிறது. கிரிக்கெட்டில் அரசியல் கட்டாயம் கிடையவே கிடையாது. நீங்கள் அரசியல்வாதி யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். இதில் அரசியல்வாதிகள் யாராவது பரிந்துரை செய்தாலும் கூட, உள்ளே வர முடியாது. 

அசோக் சிகாமணி, பொன்முடி
அசோக் சிகாமணி, பொன்முடி

அப்படியே ஓரிருவர் இருந்தாலும் கூட, அவர்களின் திறமையால் தான் நீடித்திருக்க முடியுமே தவிர, இல்லையெனில் முடியாது. அப்படி டெண்டுல்கர் நினைத்திருந்தால் அவருடைய மகனை அணிக்குள் கொண்டு வந்திருக்க முடியுமில்லையா..! எனவே, திறமை இருந்தால்தான் இதில் சாதிக்க முடியுமே தவிர, திறமை இல்லையெனில் மிகவும் கஷ்டம்தான்" என்றார்.