Published:Updated:

``ராஜ்யசபா லட்சியம் பலரை பல விஷயங்களைச் செய்ய வைக்கிறது" - காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி

மணீஷ் திவாரி

கடந்த 45 ஆண்டுகளாகக் காங்கிரஸில் பணியாற்றிவந்த அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அஸ்வனி குமார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அஸ்வனி குமார் விலகல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதிய கடிதத்தில், ``காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி இந்த நாட்டு மக்களுக்குச் சேவையாற்றத் தொடர்ந்து அரசியலில் இருக்க முடிவு செய்துள்ளேன்" எனத் தெரிவித்திருந்தார்.

குலாம் நபி ஆசாத்
குலாம் நபி ஆசாத்

அஸ்வனி குமார் விலகலுக்குக் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினரும், மாநிலங்களவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத், ``இந்த வெளியேற்றங்களுக்கான காரணத்தைக் கண்டறியக் காங்கிரஸ் நிறைய சுயபரிசோதனை செய்யவேண்டும் என்பதை இது காட்டுகிறது.

மேலும், இந்தத் தலைவர்கள் எந்த ஒரு தனிநபரின், அல்லது ஏதேனும் ஒரு கட்சியின் விருப்பப்படி நடக்கிறார்கள் என்று சொல்வது சரியல்ல. கட்சிக்குள் சில குழப்பங்கள் இருக்கின்றன. அது காலங்காலமாக காங்கிரஸுக்கு உழைத்து வரும் மூத்ததலைவர்களைக் கூட சங்கடப்படுத்துகிறது" என்று தெரிவித்திருந்தார்.

அஸ்வனி குமார்
அஸ்வனி குமார்

பஞ்சாப் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி இன்று லூதியானாவில் இது தொடர்பாகப் பேசியபோது, ``அஸ்வனி குமாரின் இந்த முடிவு பெரும் துர்ப்பாக்கியமானது. அஷ்வனி குமாரும் நானும் டாக்டர் மன்மோகன் சிங்கின் அரசாங்கத்தில் ஒன்றாக வேலைசெய்தோம். அவருக்கும் எனக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. இருப்பினும், ஒரு ஒரு தொண்டர் கட்சியை விட்டு வெளியேறினாலும், அது சுயபரிசோதனைக்குரியது. அரசியலில் மாநிலங்களவை சீட் பெறுவதற்கான லட்சியம் மக்களை பல விஷயங்களைச் செய்ய வைக்கிறது" என்று தெரிவித்தார்.