Published:Updated:

``மோடியால், வடகிழக்கு மாணவர்களுக்கு எதிரான இனப் பாகுபாடு குறைந்துள்ளது!" - அஸ்ஸாம் முதல்வர்

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

``கடந்த எட்டு ஆண்டுகளில், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி, வடகிழக்குப் பகுதிகள் முழுவதிலும் வளர்ச்சியின் புதிய அலை வீசியுள்ளது" - அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா.

``மோடியால், வடகிழக்கு மாணவர்களுக்கு எதிரான இனப் பாகுபாடு குறைந்துள்ளது!" - அஸ்ஸாம் முதல்வர்

``கடந்த எட்டு ஆண்டுகளில், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி, வடகிழக்குப் பகுதிகள் முழுவதிலும் வளர்ச்சியின் புதிய அலை வீசியுள்ளது" - அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா.

Published:Updated:
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிகண்டதன் மூலம் மத்தியில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று தங்களின் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டு, எட்டு ஆண்டுக்காலம் ஆட்சியை முழுமையாகக் கடந்துள்ளது. இதை பாஜக-வும், பல்வேறு மாநிலங்களில் பேரணி, மாநாடுகளை நடத்தித் தங்களின் சாதனைகளை மக்களிடையே கூறிவருகின்றனர். இந்த நிலையில், அஸ்ஸாம் மாநில முதல்வரான ஹிமந்தா பிஸ்வா சர்மா, மோடியின் எட்டு ஆண்டுக்கால ஆட்சியைப் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹிமந்தா பிஸ்வா, ``பிரதமர் மோடி வடகிழக்குப் பகுதிகளுக்குப் பெருமளவில் சென்றதன் காரணமாக, தற்போது வடகிழக்கு மாணவர்களுக்கு எதிரான இனப் பாகுபாடு திடீரென பெரிய அளவில் குறைந்துள்ளது" என்று மோடிக்குப் புகழாரம் சூட்டினார்.

மோடி
மோடி

மேலும் ஹிமந்தா பிஸ்வா தனது ட்விட்டர் பக்கத்தில், ``கடந்த எட்டு ஆண்டுகளில், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி, வடகிழக்குப் பகுதிகள் முழுவதிலும் வளர்ச்சியின் புதிய அலை வீசியுள்ளது. வடகிழக்குப் பகுதியின் திறனை வெளிப்படுத்தி, அதைப் புதிதாக மாற்றியதற்காக, அஸ்ஸாம் மக்கள் சார்பாக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என ட்வீட் செய்திருந்தார்.

முன்னதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ``புதிய இந்தியாமீதான உலகத்தின் பார்வையை மோடி வடிவமைத்திருக்கிறார்" என மோடியைப் பாராட்டியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism