Published:Updated:

`டெல்லி துணை முதல்வர் ரூ.100 கோடி இழப்பீடு தரவேண்டும்’ - அஸ்ஸாம் முதல்வரின் மனைவி அவதூறு வழக்கு

மணீஷ் சிசோடியா

டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மீது, அஸ்ஸாம் முதலமைச்சரின் மனைவி 100 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்தது பேசு பொருளாக மாறியிருக்கிறது.

அஸ்ஸாமில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. கொரொனா தொற்று உலக நாடுகளையே புரட்டிப் போட்ட காலத்தில் பி.பி.இ கிட், அதாவது முழு உடல் கவச உடைகள் வாங்கியதில் மோசடி நடந்ததாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

இந்த மோசடியில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயன் சர்மாவுக்கு தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுக்கு ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் அவரது மனைவி ஆகியோர் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக நேற்று கவுகாத்தியில் உள்ள கம்ரூப் சிவில் நீதிபதி நீதிமன்றத்தில் ரினிகி புயன் சர்மா, ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism