Published:Updated:

உத்தரப்பிரதேசம், குஜராத்தைத் தொடர்ந்து அஸ்ஸாமிலும் பெயர் மாற்றம்! - பா.ஜ.க முதல்வர் ட்வீட்

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ( ட்விட்டர் )

`ஒரு நகரம் அல்லது கிராமத்தின் பெயர் அதன் கலாசாரம், பாரம்பர்யம் மற்றும் நாகரிகத்தைப் பிரதிபலிக்க வேண்டும்.' - அஸ்ஸாம் முதல்வர்

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவிலுள்ள பல்வேறு பகுதிகளுக்கும், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் பகுதிக்கும் பெயர்களை மாற்ற வேண்டும் என பா.ஜ.க தலைவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றனர்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் பா.ஜ.க ஆளும் ராஜஸ்தானில் இஸ்லாமியப் பெயர்கள்கொண்ட மூன்று கிராமங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன. மாற்றி வைக்கப்படும் புதிய பெயர்கள், புகழ்மிக்க இந்துக்களின் பெயர்கள் என பா.ஜ.க-வினர் கூறிவருகின்றனர்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா-வின் ட்விட்
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா-வின் ட்விட்
ட்விட்டர்

இந்த நிலையில், `அஸ்ஸாமில் இதேபோல பெயர்களை மாற்றுவதற்கு மக்கள் ஆலோசனை வழங்க வேண்டும்’ என, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ``இந்தியாவின் கலாசாரத்துக்கு முரணான மற்றும் சாதி, சமூகத்தை இழிவுபடுத்தும், நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்களை மாற்றுவது குறித்து மக்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு மாநில அரசு ஒரு போர்ட்டலைத் தொடங்கும்.

ஏனென்றால், ஒரு நகரம் அல்லது கிராமத்தின் பெயர் அதன் கலாசாரம், பாரம்பர்யம் மற்றும் நாகரிகத்தைப் பிரதிபலிக்க வேண்டும். எந்தச் சாதியையும் இழிவுபடுத்தும் பெயர்களை மாற்றுவதற்கான பரிந்துரைகளை வழங்குங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism