Published:Updated:

#ElectionResults2021: திடீர் குளறுபடி; சுவேந்து அதிகாரி வெற்றி - முறைகேடு நடந்திருப்பதாக மம்தா குற்றச்சாட்டு

மே 2 | 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான செய்திகளின் தொகுப்பு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

02 May 2021 8 PM

நந்திகிராமில் வென்றது யார்?

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி, பா.ஜ.க-வின் சுவேந்து அதிகாரியை விட பின் தங்கியிருந்தார். மாலை 5 மணி போல, 1200 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி வெற்றி என்று தகவல் வெளியானது.

ஆனால், வாக்கு எண்ணிக்கை முடியவில்லை என்று, மம்தா பின்தங்கியிருக்கிறார் என்று மீண்டும் கூறப்பட்டது. இதனிடையே பேசிய மம்தா, ``நந்திகிராம் பற்றி தான் கவலைப்படப் போவதில்லை. மக்கள் கொடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்கிறேன்" என்றார். மேலும் `` முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு சில முறைகேடுகள் நடந்ததாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது. நான் நீதிமன்றத்தை நாடுவேன்" என்றார்.

இந்நிலையில் தற்போது சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

02 May 2021 6 PM

சகாவு பினராயி விஜயன் வெற்றி!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தர்மடா தொகுதியில் 50,123 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கேரளாவில் ஆளும் இடது முன்னணி 97 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இதில் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 42 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. பா.ஜ.க-வை பொறுத்தவரை ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்
02 May 2021 5 PM

துரோகியை பழிதீர்த்த மம்தா!நந்திகிராமில் சுவேந்து அதிகாரியை தோற்கடித்து வெற்றி

மம்தா vs சுவேந்து அதிகாரி: நந்திகிராமில் வெற்றி பெற்றது யார்..?! - சர்ச்சையான தேர்தல் முடிவுகள்!
02 May 2021 5 PM

ஷைலஜா டீச்சர் வெற்றி!

கேரள சட்டமன்றத் தேர்தலில் மட்டனூர் தொகுதியில் போட்டியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர், 58,872 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். நிஃபா வைரஸ் பரவல், கேரள வெள்ளம், கொரோனா வைரஸ் பரவல் என சோதனை நேரங்களில் மக்களைக் காக்க சிறப்பாக செயல்பட்ட அவருக்கு மக்கள் கொடுத்த மகுடமிது!

02 May 2021 5 PM

மேற்கு வங்கத்தில் எடுபடாமல் போன பாஜகவின் வியூகம்.. அடித்து நொறுக்கிய மம்தா பானர்ஜி!

மேற்கு வங்கத்தில் எடுபடாமல் போன பாஜகவின் வியூகம்..  அடித்து நொறுக்கிய மம்தா பானர்ஜி!
02 May 2021 4 PM

மம்தா பானர்ஜி வெற்றி!

பா.ஜ.க-வின் சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்கும் வகையில் நந்திகிராமில் போடியிட்ட மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார். காலை முதல் மிக நெருக்கமான போட்டியாக இருந்தது. தொடக்கத்தில் சுவேந்து அதிகாரி முன்னிலையில் இருந்தார். பிற்பகலுக்கு பிறகு மம்தா பானர்ஜி முன்னிலை பிடிக்கத் தொடங்கினார். இறுதியில் 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சவாலில் சாதித்திருக்கிறார்.

02 May 2021 4 PM

மம்தா பானர்ஜிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் வாழ்த்து   

02 May 2021 3 PM

புதுச்சேரி நமச்சிவாயம் வெற்றி!

புதுச்சேரி மன்னடிப்பேட் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி. இவர் காங்கிரஸ் ஆட்சிக் கலைக்கப்படுவதற்கு முன், அக்கட்சியில் எம்.எல்.ஏ-வாக இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்த முக்கியப் புள்ளி.

இதே போல காங்கிரஸில் இருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்த ஜான்குமார் காமராஜ் நகர் தொகுதியில் வெற்றி பெற்றார். அவரது மகன் ரிச்சர்ட் ஜான்குமார் நெல்லித் தோப்பு பகுதியில் வெற்றி பெற்றார்.

நமச்சிவாயம்
நமச்சிவாயம்
02 May 2021 3 PM

என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 7 இடங்களில் வெற்றி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

02 May 2021 3 PM

புதிய சாதனைப்படைத்த பினராயி விஜயன்!

1957-ம் ஆண்டு முதல் சட்டமன்றத் தேர்தலை சந்தித்து வரும் கேரளாவில், தனி ஒரு கட்சி தொடர்ந்து இரு முறை ஆட்சியமைத்தது இல்லை. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஆட்சியை மாற்றுவது கேரள மக்களின் வழக்கமாகவே இருந்திருக்கிறது.

இந்த வரலாற்றை முறித்திருக்கிறது பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி செய்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 2016-ம் ஆண்டு தேர்தலில் 91 இடங்களைக் கைப்பற்றி சி.பி.எம் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி அமைத்தது. பினராயி விஜயன் முதலமைச்சரானார். 2021 தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி இடது முன்னணி 93 இடங்களிலும், காங்கிரஸ் 45 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. சி.பி.எம் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகிறது.

கேரளாவில் இடதுசாரி கூட்டணி முன்னிலை... சொல்லி அடித்த  பினராயி விஜயன்!
02 May 2021 2 PM

2.00 மணி முன்னிலை நிலவரம்

மேற்கு வங்கம்: திரிணாமுல் காங்கிரஸ் - 206, பா.ஜ.க - 83, காங்கிரஸ் - 1, சி.பி.எம் - 0, இதர -2

கேரளா: சி.பி.எம் கூட்டணி - 90, காங்கிரஸ் கூட்டணி - 46, பா.ஜ.க - 3, இதர -1

அஸ்ஸாம்: பா.ஜ.க கூட்டணி - 77, காங்கிரஸ் கூட்டணி - 48, இதர -1

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் - 5, பா.ஜ.க- 1 வெற்றி, 2 முன்னிலை, காங்கிரஸ் -2, தி.மு.க - 1 வெற்றி

02 May 2021 2 PM

புதுச்சேரியில் கணக்கைத்   தொடங்கியது   தி.மு.க

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் அனிபெல் கென்னடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். பா.ஜ.க-வும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது.

02 May 2021 12 PM

மேற்கு வங்கம்:  எதிர்க்கட்சி  அந்தஸ்தை இழக்கும்   காங்கிரஸ்

2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 தொகுதிகளில் வெற்றி பெற்று, சட்டமன்ற எதிர்க்கட்சியாக இருந்தது. 2021 தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. கிட்டத்தட்ட 86 தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலையில் இருக்கிறது. இதனால் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டிருக்கிறது.

02 May 2021 12 PM

மேற்கு வங்கத்தில்: ஒரு தொகுதியில் கூட முந்தாத  சி.பி.எம்

மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 26 இடங்களை வென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த தேர்தலில் 12.30 மணி நிலவரப்படி ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை. இது அரசியல் விமர்சகரகளால் அதிர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. 35 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது பரிதாப நிலைக்கு வந்திருக்கிறது.

02 May 2021 12 PM

ரங்கசாமி பின்னடைவு!

புதுச்சேரி ஏனாம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ரங்கசாமி 673 வாக்குகளில் பின்தங்கி இருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கொல்லப்பள்ளி அசோக் முன்னிலை. ரங்கசாமி இரண்டு தொகுதிகளிலில் போட்டியிட்டார். மற்றொரு தொகுதியான தட்டாஞ்சாவடியில் அவர் முன்னிலையில் இருக்கிறார். இருந்தாலும் கடும் போட்டி நிலவுகிறது.

02 May 2021 12 PM

வெற்றி முகம்!

12 மணி நிலவரப்படி...

மேற்கு வங்கம்: திரிணாமுல் காங்கிரஸ் 193, பா.ஜ.க - 97, காங்கிரஸ் 1, சி.பி.எம் - 0, இதர- 2

ஆட்சி அமைக்கத் தேவையான 148 என்ற எண்ணிகையைக் கடந்து முன்னிலையில் இருப்பதால், கிட்டத்தட்ட மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை திரிணாமுல் காங்கிரஸ் பெற்றுவிட்டது என்றே கருதலாம்.

கேரளா: சி.பி.எம் கூட்டணி - 86, காங்கிரஸ் கூட்டணி - 50, பா.ஜ.க -3, இதர - 1

ஆட்சி அமைக்க 71 இடங்கள் தேவை என்ற நிலையில், 86 இடங்களில் முன்னிலையில் இருக்கும் ஆளும் இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

அஸ்ஸாம்: பா.ஜ.க கூட்டணி - 84, காங்கிரஸ் கூட்டணி 40, இதர 2

மெஜாரிட்டிக்குத் தேவை 64 இடங்கள். கூடுதலாக 20 இடங்களில் பா.ஜ.க கூட்டணி முன்னிலையில் இருப்பதால், அஸ்ஸாமை தன் கைக்குள் பா.ஜ.க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம்.

புதுச்சேரி: என்.ஆர்.காங்கிரஸ் - 5, பா.ஜ.க - 3, காங்கிரஸ் 2, தி.மு.க - 1, இதர - 1.

இழுபறி...

புதுச்சேரியில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தி.மு.க அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணி 3 இடங்களில் முன்னிலை இருக்கிறது. ஆட்சி அமைக்க 16 இடங்கள் தேவையான நிலையில் இதுவரை 12 தொகுதிகளுக்கான நிலவரங்கள் மட்டுமே வெளி வந்திருக்கின்றன. அதனால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற தெளிவாகக் கணிக்க முடியாத நிலை நீடிக்கிறது. இழுபறியை நோக்கி செல்லவும் வாய்ப்பிருக்கிறது.

02 May 2021 11 AM

கேரளத்தில் சாதனையை நோக்கி எல்.டி.எஃப் கூட்டணி... காலூன்றுகிறது பா.ஜ.க?!

கேரளத்தில் சாதனையை நோக்கி எல்.டி.எஃப் கூட்டணி... காலூன்றுகிறது பா.ஜ.க?!
02 May 2021 10 AM

11.00 மணி முன்னிலை நிலவரம்

மேற்கு வங்கம் - திரிணாமுல் காங்கிரஸ் 149, பா.ஜ.க 126, இடதுசாரிகள் 5, இதர 2.

மேற்கு வங்கம் - நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி, எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.கவின் சுவேந்து அதிகாரியை விட 8,000 வாக்குகள் பின் தங்கியிருக்கிறார்.

கேரளா - சி.பி.எம் கூட்டணி - 85, காங்கிரஸ் கூட்டணி - 51, பா.ஜ.க - 1

கேரள பா.ஜ.க-வின் தலைவர் கே.சுரேந்திரன் போட்டியிட்ட மஞ்சேஸ்வரம், கொன்னி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பின்னிலை.

அஸ்ஸாம் - பா.ஜ.க - 81, காங்கிரஸ் 37, இதர - 3

அஸ்ஸாமில் மீண்டும் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்பு கூறியதைப் போலவே, பா.ஜ.க முந்துகிறது.

புதுச்சேரி - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 12, காங்கிரஸ் கூட்டணி 4 , இதர 1

02 May 2021 9 AM

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்   முன்னிலை

புதுச்சேரியில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 9 இடங்களில் முன்னணி வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டனி 5 இடங்களில் முன்னணி வகிக்கின்றன.

02 May 2021 9 AM

அஸ்ஸாமில்   பா.ஜ.க   முன்னிலை

அஸ்ஸாமில் ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் பா.ஜ.க 49 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

02 May 2021 9 AM

நந்திகிராமில் மம்தா பானர்ஜி பின்னடைவு

மேற்கு வங்கம் மட்டுமல்ல நாடே பெரிதும் எதிர்பார்க்கும் நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 5790 வாக்குகள் பெற்று பின் தங்குகிறார். அவரை எதிர்த்து போடியிட்ட பா.ஜ.க-வின் சுவேந்து அதிகாரி 7287 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றிருக்கிறார்.

திரிணாமுல் காங்கிரஸ் 96 இடங்களிலும், பா.ஜ.க 93 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இடதுசாரிகள் 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
02 May 2021 9 AM

கேரளா: பினராயி விஜயன் முன்னிலை

கேரள முதலமைச்சராக இருக்கும் பினராயி விஜயன் தார்மடம் தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் மட்டனூர் தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். காங்கிரஸ் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி புதுப்பள்ளி தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

பெரிதும் கவனம் ஈர்த்த பா.ஜ.க-வின் 'மெட்ரோ மேன்' ஶ்ரீதரண் பாலக்காடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார்.

மெட்ரோமேன் ஸ்ரீதரன்
மெட்ரோமேன் ஸ்ரீதரன்
02 May 2021 8 AM

புதுச்சேரி தொடக்க நிலவரம்

என்.ஆர் காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது

02 May 2021 8 AM

அஸ்ஸாம் தொடக்க நிலவரம்

பா.ஜ.க கூட்டணி 10 இடங்களில் முன்னணி வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

02 May 2021 8 AM

கேரளா தொடக்க நிலவரம்

மார்க்சிஸ்ட கம்யூனிஸ் கட்சி தலைமையிலான இடது முன்னணி (LDF) 28 இடங்களில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி (UDF) 27 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. பா.ஜ.க 3 தொகுதிகளிலும், இதர கட்சிகள் ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளன

02 May 2021 8 AM

மேற்கு வங்கம் தொடக்க   நிலவரம்!

திரிணாமுல் காங்கிரஸ் 35 இடங்களில் முன்னணி. பா.ஜ.க 35 இடங்களில் முன்னணியில் இருக்கிறது.

02 May 2021 8 AM

வாக்கு   எண்ணிக்கை   தொடங்கியது!

மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாகுகள் எண்ணப்படுகின்றன.ச்

02 May 2021 8 AM

கேரளா

140 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட கேரளாவில், 2016-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணி ஆட்சியைப் பிடித்தது. 71 இடங்களில் வென்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், இடது முன்னணி 91 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது, பினராயி விஜயன் முதலமைச்சராக இருக்கிறார். காங்கிரஸ் தலைமை வகித்த ஐக்கிய முன்னணி 47 இடங்களைப் பெற்று எதிர்க்கட்சியாக உள்ளது. பா.ஜ.க ஒரு தொகுதி மட்டுமே பெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தலில் 74.57% வாக்குகள் பதிவாகியுள்ளன.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்
02 May 2021 7 AM

மேற்கு வங்கம்

292 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில், கடந்த இரண்டு முறையாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தியது. 2016 சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 211 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 தொகுதிகளில், இடதுசாரிகள் கூட்டணி 33 இடங்களையும் பெற்றன.

பா.ஜ.க கூட்டணி வெறும் 3 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்பில் பா.ஜ.க 110 - 140 தொகுதிகள் வரை வெல்ல வாய்பிருப்பதாக கூறும் அளவுக்கு பா.ஜ.க மேற்கு வங்கத்தில் கால் பதித்திருக்கிறது. மம்தா பானர்ஜி - பிரதமர் மோடிக்கு இடையிலான நேரடி போராகவே இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது.

கவனிக்க வேண்டிய போட்டி:

திரிணாமுல் காங்கிரஸில் மம்தா பானர்ஜிக்கு அடுத்த இடத்தில் மிக முக்கியத் தலைவராக இருந்தவர் சுவேந்து அதிகாரி. இவர் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் பா.ஜ.க-வில் இணைந்தது மேற்கு வங்க அரசியலில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நந்திகிராமில் வலுவான தனிப்பட்ட செல்வாக்கு கொண்டிருக்கும் சுவேந்து, இம்முறை அங்கு பா.ஜ.க சார்பாக போடியிடுகிறார். சுவேந்து விடுத்த சவாலை ஏற்கும் விதமாக நந்திகிராமில் போட்டியிட்டிருக்கிறார் மம்தா பானர்ஜி. எனவே இந்த தொகுதி இந்தியா முழுவதும் உற்று நோக்கப்படுவதாக இருக்கிறது.

மம்தா - சுவேந்து அதிகாரி
மம்தா - சுவேந்து அதிகாரி
02 May 2021 7 AM

பிற மாநில தேர்தல் முடிவுகள்  உடனுக்குடன்!

மேற்கு வங்கம் , கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி என தமிழகம் தவிர்த்து 4 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் துல்லியமாக இங்கு தெரிந்து கொள்ளலாம். இணைந்திருங்கள்!!!

4 மாநில தேர்தல்
4 மாநில தேர்தல்
02 May 2021 7 AM

அதிகரிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையங்கள்

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் மையங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் 108 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. கேரளாவில் 114 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்றன. அஸ்ஸாமில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள அரங்கங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அங்கு 331 வாக்கு என்ணிக்கை அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

02 May 2021 7 AM

8மணிக்கு தொடங்குகிறாது வாக்கு எண்ணிக்கை

பெரிதும் எதிர்பார்க்கப்படும் மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி, தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கு 8 மணிக்கு தொடங்கப்படுகிறது.

01 May 2021 3 PM

5 மாநில தேர்தல்... வெல்லப்போவது யார்...?

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில தேர்தல்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆக மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அஸ்ஸாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.

மம்தா
மம்தா

தமிழகம் மட்டுமல்லாது அனைத்து மாநில தேர்தல்களும் இந்த முறை அதிக கவனம் ஈர்த்தது. கேரளாவில் சபரிமலை விவகாரம், தங்கம் கடத்தல் விவகாரம் போன்ற சர்ச்சைகளுக்கு பிறகு நடைபெறும் தேர்தல். புதுச்சேரியில் கடந்த ஆட்சியின் இறுதி கட்டத்தில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மேற்கு வங்கத்தில், மம்தாவை எப்படியாவது வீழ்த்தி, ஆட்சியப் பிடிக்க நினைக்கிறது பா.ஜ.க, அஸ்ஸாமில் ஆட்சியை தக்க வைக்குமா பா.ஜ.க... இப்படி அனைத்து மாநில தேர்தல்களும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

தமிழக தேர்தல் நிலவரங்களை தெரிந்து கொள்ள...

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: திமுக கூட்டணி - 159 ; அதிமுக கூட்டணி -75..!   #LiveUpdates
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு