Published:Updated:

``அஸ்ஸாம் மசூதிகளுக்கு வரும் வெளிமாநில மத போதகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!" - முதல்வர் அறிவிப்பு

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ( ட்விட்டர் )

``அஸ்ஸாம் மசூதிகளுக்கு வரும் வெளி மாநில மதபோதகர்கள் கட்டாயமாக அரசின் வலைதளத்தில் பதிவுசெய்ய வேண்டும்." - அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

``அஸ்ஸாம் மசூதிகளுக்கு வரும் வெளிமாநில மத போதகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!" - முதல்வர் அறிவிப்பு

``அஸ்ஸாம் மசூதிகளுக்கு வரும் வெளி மாநில மதபோதகர்கள் கட்டாயமாக அரசின் வலைதளத்தில் பதிவுசெய்ய வேண்டும்." - அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

Published:Updated:
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ( ட்விட்டர் )

அஸ்ஸாமில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இயக்கங்கள் செயல்பட்டுவருவதாகத் தகவல் வெளியானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இரண்டு சந்தேகத்துக்குரிய பயங்கரவாதிகள் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில், அஸ்ஸாம் மாநில அரசு புதிய நடைமுறையைக் கொண்டுவந்திருக்கிறது.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ``அஸ்ஸாம் மசூதிகளுக்கு வரும் வெளி மாநில மதபோதகர்கள் கட்டாயமாக அரசின் வலைதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரான கிங்பின், மசூதியில் இமாமாக இருந்தவர். அவர் பல கிராமங்களில் ஜிகாதி வலையமைப்பை விரிவுபடுத்தியிருக்கிறார். ஜிகாதி வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக ஆறு வங்க தேச பிரஜைகள் அஸ்ஸாமில் நுழைந்திருக்கின்றனர்.

இஸ்லாம்
இஸ்லாம்

அதில் ஒருவரை அஸ்ஸாம் போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். அதேபோல ஐந்து பேர் இன்னும் தலைமறைவாக இருக்கின்றனர். அஸ்ஸாம் காவல்துறை தனது நடவடிக்கையைத் தொடரும். இமாம் யாராவது அஸ்ஸாம் கிராமங்களுக்கு வந்தால், சரிபார்ப்புக்காக உள்ளூர் மக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். காவல்துறையால் சரிபார்க்கப்பட்ட பிறகு, மக்கள் அவரை இமாமாக நியமிக்கலாம். இந்த விவகாரத்தில் அஸ்ஸாமின் முஸ்லிம் சமூகம் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா

அஸ்ஸாம், ஜிஹாதி நடவடிக்கைகளின் மையமாக மாறியிருக்கிறது. இந்த விதிகள் அஸ்ஸாமில் வசிப்பவர்களுக்குப் பொருந்தாது. அஸ்ஸாமில் வசிப்பவர்கள் தங்கள் விவரங்களைப் பதிவுசெய்யவேண்டிய அவசியமில்லை. ஆனால் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தங்கள் விவரங்களை அரசின் வலைதளத்தில் பதிவுசெய்ய வேண்டும்'' என்றார்.