Published:Updated:

ஸ்டாலின் அட்வைஸ்... எடப்பாடி டிப்ஸ்... வருத்தம்போக்கிய துரைமுருகன்...

முதன்முறை எம்.எல்.ஏ-க்களின் அனுபவங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
முதன்முறை எம்.எல்.ஏ-க்களின் அனுபவங்கள்!

முதன்முறை எம்.எல்.ஏ-க்களின் அனுபவங்கள்!

ஸ்டாலின் அட்வைஸ்... எடப்பாடி டிப்ஸ்... வருத்தம்போக்கிய துரைமுருகன்...

முதன்முறை எம்.எல்.ஏ-க்களின் அனுபவங்கள்!

Published:Updated:
முதன்முறை எம்.எல்.ஏ-க்களின் அனுபவங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
முதன்முறை எம்.எல்.ஏ-க்களின் அனுபவங்கள்!

லட்சக்கணக்கான மக்களின் பிரதிநிதியாக, அவர்களின் பிரச்னைக்கு தீர்வுகாணும் முகமாக சட்டமன்றத்துக்குள் முதன்முறை காலடி எடுத்துவைக்கும்போது உண்டாகும் பெருமித உணர்வை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அந்தவகையில் தமிழ்நாட்டின் 16-வது சட்டமன்றத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கும் புதுமுக எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம் அவர்களின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் அனுபவங்களைக் கேட்டோம்...

ஸ்டாலின் அட்வைஸ்... எடப்பாடி டிப்ஸ்... வருத்தம்போக்கிய துரைமுருகன்...

எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர், விடுதலைச் சிறுத்தைகள்

“அனைத்துக் கருத்தியல்களைக்கொண்டவர்களும் சபைக்குள் இருப்பதே ஆரோக்கியமான விஷயம். பொதுவாக அரசியல் நாகரிகம் குறித்துப் பேசும்போதெல்லாம், நாடாளுமன்றத்தைத்தான் முன்பு உதாரணமாகச் சொல்வார்கள். ஆனால், இந்த முறை தமிழக சட்டமன்றம் அதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. மக்கள் மன்றத்தில் பேசும்போது நேரக் கட்டுப்பாடு பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், சட்டமன்றத்தில் அப்படியல்ல. நமக்குக் கிடைக்கும் நேரத்தில், சொல்லவந்த விஷயங்களை அழுத்தம் திருத்தமாகப் பேசிவிட வேண்டும். அதுவே, புதிய அனுபவமாக இருந்தது. விவாதங்கள் உக்கிரமாகும்போது, எதிர்க்கட்சியினர் வருத்தங்களைப் போக்கும் வகையில் அவை முன்னவர் துரைமுருகன், அவையை வழிநடத்திய விதமும் ரசிக்கும்படியாக இருந்தது.’’

ஸ்டாலின் அட்வைஸ்... எடப்பாடி டிப்ஸ்... வருத்தம்போக்கிய துரைமுருகன்...

சரஸ்வதி, மொடக்குறிச்சி, பா.ஜ.க

“சட்டமன்றத்துக்கு மட்டுமல்ல... நான் அரசியலுக்கே புதியவள். 2016-ல்தான் அரசியலுக்குள்ளேயே நுழைந்தேன். தேர்தலில் போட்டியிட விருப்பமனு நான் கொடுக்கவில்லை. கட்சியில்தான் என்னை போட்டியிடச் சொன்னார்கள். வெற்றிபெறுவேன் என்றுகூட நினைக்கவில்லை. ஆனால், மக்கள் என்னைத் தேர்வு செய்திருக்கிறார்கள். சட்டசபைக்குச் செல்வதற்கு முன்பாகவே சபை நடைமுறைகள் குறித்து மூத்த உறுப்பினர்களுடன் பேசித் தெரிந்துகொண்டே உள்ளே சென்றேன். மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கூட்டத்தில் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இனிவரும் கூட்டத்தொடர்களில், போட்டி விவாதங்களாக இல்லாமல் மக்கள்நலன் சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.’’

ஸ்டாலின் அட்வைஸ்... எடப்பாடி டிப்ஸ்... வருத்தம்போக்கிய துரைமுருகன்...

அமுல் கந்தசாமி வால்பாறை, அ.தி.மு.க

“இந்தக் கூட்டத்தொடரில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் சார்பாக சட்டமன்றத்தில் முதன்முதலில் பேசும் வாய்ப்பு எனக்குத்தான் கிடைத்தது. மிகவும் உணர்வுபூர்வமான அனுபவம் இது. அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, தொழிலாளர் நலத்துறை ஆகிய மானியக் கோரிக்கைகளின் விவாதங்களில் நான் பேசினேன். கோயில் புனரமைப்பு தொடர்பாக நான் வைத்த முதல் கோரிக்கையை அமைச்சர் சேகர் பாபு உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்தார். அது மகிழ்ச்சியாக இருந்தது. என் தொகுதிக்குட்பட்ட ஆனைமலையில் தீயணைப்பு நிலையம் கேட்டிருக்கிறேன்... முதல்வர் நிறைவேற்றிக் கொடுப்பதாகக் கூறியிருக்கிறார். தொழிலாளர் நலத்துறை குறித்துப் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சில டிப்ஸ்களைக் கொடுத்தார். மொத்தத்தில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியக் கூட்டத்தொடர் இது.’’

ஸ்டாலின் அட்வைஸ்... எடப்பாடி டிப்ஸ்... வருத்தம்போக்கிய துரைமுருகன்...

இரா.அருள், சேலம் மேற்கு, பா.ம.க

“காமராஜர், அண்ணா போன்ற மாபெரும் தலைவர்கள் அமர்ந்திருந்த அவைக்கு பிரமிப்போடு உள்ளே போனேன். இன்னும் அந்த பிரமிப்பு நீங்கவில்லை. இந்தக் கூட்டத்தொடரில், அதிகமாகக் கேள்வி கேட்ட உறுப்பினர்களில், எங்கள் தலைவர் ஜி.கே.மணி இரண்டாமிடம். நான் நான்காம் இடம். இதுவே எனக்குப் பெருமையாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளை இவ்வளவு மரியாதையாக நடத்துவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. மனுக்களாக வந்த மக்களின் கோரிக்கைகளை, வினாக்களாகச் சட்டமன்றத்தில் முன்வைத்ததற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது!’’

ஸ்டாலின் அட்வைஸ்... எடப்பாடி டிப்ஸ்... வருத்தம்போக்கிய துரைமுருகன்...

பிரபாகர் ராஜா விருகம்பாக்கம், தி.மு.க

“இந்த சட்டமன்றத்தில் இருப்பதிலேயே இளவயது

எம்.எல்.ஏ நான்தான் என்கிற பெருமையோடு, பயபக்தியோடுதான் அவைக்குள் நுழைந்தேன். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களான எங்களுக்குப் பத்து நிமிடங்கள் பேசுவதற்கு நேரம் கிடைத்ததென்றால், எதிர்க்கட்சியினருக்கு 15 நிமிடங்கள் கிடைத்தன. எங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களே பொறாமைப்படும் அளவுக்கு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டதைப் பார்த்து வியந்துபோனேன். ‘பிரபாகர் ராஜா நன்றாகப் பேசுவார்’ என்று முதல்வர் என்னைப் பரிந்துரை செய்தார். பேசுவதற்கு முன்பாக முதல்வரிடம் ஆலோசனை வாங்கச் சென்றேன். அப்போது என் கையில் எதிர்க்கட்சியினரை அட்டாக் செய்வதற்காக ஒரு பட்டியலையே தயாரித்துவைத்திருந்தேன். அதைப் பார்த்த முதல்வர், ‘அதெல்லாம் வேண்டாம்; உனக்கு என்ன தேவையோ அதைப் பற்றி மட்டும் பேசு’ என்று அறிவுரை வழங்கினார். அதேவேளையில், மக்களுக்கு இன்னும் அதிகமாகச் சேவையாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தை இந்த கூட்டத்தொடர் ஏற்படுத்தியிருக்கிறது.’’

ஸ்டாலின் அட்வைஸ்... எடப்பாடி டிப்ஸ்... வருத்தம்போக்கிய துரைமுருகன்...

துரை.சந்திரசேகர் பொன்னேரி, காங்கிரஸ்

“கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக, சட்டமன்றத்துக்கு நான் சென்றிருக்கிறேன். அதுவே எனக்கு மிகப்பெரிய கௌரவத்தைக் கொடுத்தது. அதேவேளையில், வெளியிலிருந்து சட்டசபை நிகழ்ச்சிகளைப் பார்த்ததற்கும், இப்போது நேரடியாகப் பார்ப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருந்தது. அமைச்சர்கள், மூத்த உறுப்பினர்கள் எப்படிப் பேசுகிறார்கள், என்ன நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள் என்பதை முழுமையாக கவனித்தேன். என் தொகுதி மக்களுக்காக நான் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தேன். அவற்றில், மீனவ மக்களுக்காக நான் வைத்த கோரிக்கைகளுக்காக மீனவ மக்கள் என்னை வந்து பாராட்டிச் சென்றார்கள். சட்டமன்றத்தில் குரல் கொடுத்து மக்கள் பிரச்னைகளை தீர்த்துவைப்பதன் மூலம் நிரந்தரமாக காங்கிரஸ் கட்சியின் தொகுதியாக பொன்னேரியை மாற்றிவிடுவேன் என்கிற நம்பிக்கையை இந்தக் கூட்டத்தொடர் ஏற்படுத்தியிருக்கிறது.’’