Published:Updated:

போர்வாள்.. சாவர்க்கர் படம்.. தாயின் எமோஷன்.. மகாராஷ்டிரா அரசியலில் களமிறங்கிய அடுத்த `சேனா' வாரிசு

அமித் தாக்கரே
அமித் தாக்கரே ( twitter )

அமித் தாக்கரேயின் நடவடிக்கைகளால் அவரது அரசியல் வருகை தொடர்பான கேள்விகளும் தொடர்ந்து எழுந்தன. 2014-ம் ஆண்டு ராஜ் தக்கரேவும் அமித் தாக்கரே சரியான நேரத்தில் அரசியல் களத்துக்கு வருவார் எனக் கூறியிருந்தார்.

மகாராஷ்டிராவில், சிவசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு குழப்பங்களுக்குப் பிறகு அமைந்த இந்தக் கூட்டணியின் மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும் தற்போது, இரண்டு மாதங்களை நெருக்கி ஆட்சியை நடத்தி வருகிறது. இந்தக் கூட்டணியின் அமைச்சரவையிலும் அரசியல் களத்திலும் இளம் அரசியல்வாதியாக அறியப்படுபவர் ஆதித்யா தாக்கரே. இவரைத் தொடர்ந்து தற்போது அவரது உறவினர் ஒருவரும் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார்.

ராஜ் தாக்கரே
ராஜ் தாக்கரே
twitter

சிவசேனாவும் நவ நிர்மான் சேனாவும்!

``மராட்டியம் மராட்டியருக்கே, இந்தியா இந்துக்களுக்கே'' என்ற அரசியல் முழக்கக் கொள்கையுடன், 1966-ம் ஆண்டு பால்தாக்கரே தொடங்கிய கட்சிதான் `சிவசேனா’. பால்தாக்கரே கட்சியின் தலைவராக இருந்தவரை தன்னுடைய குடும்பத்திலிருந்து வேறு யாரையும் தேர்தல் களத்துக்குள் அவர் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், நேரடியாகத் தேர்தல் களத்தை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிவசேனாவிலிருந்து விலகிய பால்தாக்கரேயின் சகோதரியின் மகன் ராஜ் தாக்கரேவால் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்சிதான் `மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா’. தேர்தல் அரசியலில் நவநிர்மான் சேனா மிகப்பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. இந்நிலையில், நவ நிர்மான் சேனாவின் தலைவரான ராஜ் தாக்கரே தன்னுடைய மகனான அமித் தாக்கரேவை அரசியல் களத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

தி.மு.க வழியில் சிவசேனா... தேர்தல் களத்தில் சவாலைச் சந்திப்பாரா, ஆதித்யா தாக்கரே?

யார் இந்த அமித் தாக்கரே?

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் 1992-ம் ஆண்டு அமித் தாக்கரே பிறந்தார். அரசியல்வாதியாகவும் பால் தாக்கரேவை போலவே ஒரு கார்டூனிஸ்ட்டாக விளங்குகிறார். மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ள அமித் கடந்த சில வருடங்களாகத் தீவிரமாக அரசியல் களத்தில் இயங்கி வந்தார். கட்சியின் இளம் உறுப்பினர்களால் அதிகமாக விரும்பட்ட நபராகவும் இருந்துள்ளார். அவ்வப்போது, அரசியல் பிரச்னைகள் குறித்தும் தனது கருத்துகளையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தார்.

அமித் தக்கரே
அமித் தக்கரே
twitter

அமித் தாக்கரேயின் நடவடிக்கைகளால் அவரது அரசியல் வருகை தொடர்பான கேள்விகளும் தொடர்ந்து எழுந்தன. 2014-ம் ஆண்டு ராஜ் தக்கரேவும் அமித் தாக்கரே சரியான நேரத்தில் அரசியல் களத்துக்கு வருவார் எனக் கூறியிருந்தார். தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நவநிர்மான் கட்சியும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்துதான் தன்னுடைய மகன் அமித்தை முழுநேர அரசியல் களத்தில் இறக்கியுள்ளார் ராஜ் தாக்கரே.

`அமித்ஷா ஒப்புக்கொண்டார்; தாக்கரே உடைத்தார்!’- மகாராஷ்ட்ரா குழப்பத்துக்கு காரணம் சொல்லும் காங்கிரஸ்

பால் தாக்கரேயின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு கோரேகானில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமித் தாக்கரேவின் அரசியல் வருகையை அதிகாரபூர்வமாக அறிவித்தார். அரசியலுக்குள் வரவேற்கும் விதமாகக் கட்சியினர் போர்வாளையும் அவருக்குப் பரிசாக அளித்தனர். 20,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் அக்கட்சிக்கான புதிய கொடியும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. பால் தாக்கரேவுக்கு அஞ்சலியும் இந்நிகழ்ச்சியில் செலுத்தப்பட்டது. பொதுக்கூட்ட மேடையில் சாவர்க்கரின் புகைப்படமும் அவருடைய இந்துத்துவ கொள்கைகளை வெளிப்படுத்தும் குறியீடுகளும் இருந்தன. அதேநேரம் அம்பேத்கர் படமும் பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்தது.

அமித் தாக்கரே குடும்பம்
அமித் தாக்கரே குடும்பம்
twitter

அமித் தாக்கரே பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ``கட்சியிலிருந்த கடந்த 14 ஆண்டுகளில் முதன்முறையாக பொதுவெளியில் உரையாற்றுகிறேன். இப்போது எனக்கு 27 வயது. உண்மையிலேயே பெருமையாக உணர்கிறேன். ராஜ் தாக்கரேவின் வழிகாட்டுதலும் ஊக்கப்படுத்தலும் இன்றி இது சாத்தியமில்லை என்றுதான் நினைக்கிறேன்” என்று பேசினார்.

கட்சியில் எந்தப் பதவியும் தற்போது அமித் தாக்கரேவுக்கு வழங்கப்படவில்லை. இளைஞர் அணியின் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சுகளும் எழுந்து வருகின்றன. கட்சியை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்வதற்கான முக்கிய பொறுப்பு அவருக்கு உள்ளது என்றும் மூத்த தலைவர்கள் கூறிவருகின்றனர்.

அமித் தாக்கரே
அமித் தாக்கரே
twitter

நிகழ்வில் கலந்துகொண்ட அமித் தாக்கரேவின் தாய் ஷர்மிளா ஊடகங்களிடம் பேசும்போது, ``அவனுக்கு தலைவராக வர வேண்டும் என்பது மட்டுமே எண்ணமல்ல. பதவிகள் வரும் போகும். மக்களினுடைய நலனுக்காகத் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்பதே அவனுடைய எண்ணம்” என்று உணர்ச்சிவசப்பட்டு கூறிள்ளார்.

`பா.ஜ.க-விடம் எச்சரிக்கையாகவே இருங்கள்!' - அமைச்சர்களை அலர்ட்டாக்கிய உத்தவ் தாக்கரே

தேர்தல் களம்கண்ட முதல் வாரிசு!

சிவசேனாவின் இளைஞரணியான யுவசேனாவின் தலைவராக இருந்தவர்தான் ஜீனியர் தாக்கரே எனும் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரே. கடந்த சில வருடங்களாக அரசியல் களத்தில் தீவிரமாக இயங்கிவந்த இவர், நடந்து முடிந்த தேர்தலில் நேரடியாகத் தேர்தல் களத்தில் இறங்கிப் போட்டியிட்டார். தாக்கரே குடும்பத்தில் முதன்முறையாகத் தேர்தலில் நின்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ என்ற பெருமை இவரையே சேரும் (உத்தவ் தாக்கரே தேர்தலில் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).

சிவசேனாவின் வருங்கால முகமாகவும் பார்க்கப்படுகிறார். இவருக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றும் கட்சியினரால் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது மகாராஷ்டிரா அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்.

ஆதித்யா தாக்கரே
ஆதித்யா தாக்கரே
twitter

மகாராஷ்டிரா அரசியல் களத்தில் ஆதித்யா தாக்கரே இறங்கிய சில மாதங்களிலேயே அமித் தாக்கரேவும் இறங்கியுள்ளது அங்கு நிலவும் அரசியல் நிலையை இன்னும் எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

`அதிகார பேராசையில் உற்ற நண்பர்களை இழந்துவிட்டார்கள்!’ -சட்டப்பேரவையில் ஆதித்ய தாக்கரே
பின் செல்ல