Published:Updated:

புதுக்கோட்டை: ``குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தை திசைதிருப்ப முயற்சி!" - பாஜக குற்றச்சாட்டு

பா.ஜ.க ஆய்வுக்குழு

`இரட்டை டம்ளர், கோயிலுக்குள் நுழையவிடுவதில்லை என்பது முக்கியப் பிரச்னை இல்லை. மலம் கலந்த விவகாரம்தான் பெரிய பிரச்னை. அதை திசைதிருப்பிவிட்டார்கள்.' - பாஜக

புதுக்கோட்டை: ``குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தை திசைதிருப்ப முயற்சி!" - பாஜக குற்றச்சாட்டு

`இரட்டை டம்ளர், கோயிலுக்குள் நுழையவிடுவதில்லை என்பது முக்கியப் பிரச்னை இல்லை. மலம் கலந்த விவகாரம்தான் பெரிய பிரச்னை. அதை திசைதிருப்பிவிட்டார்கள்.' - பாஜக

Published:Updated:
பா.ஜ.க ஆய்வுக்குழு

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர், வேங்கைவயல் கிராமத்தில், மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில்தான், அரசியல் கட்சியினர் பலரும் நேரடியாகச் சென்று இறையூர் மக்களைச் சந்தித்துவருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க சார்பில் அந்தக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் குழு நியமிக்கப்பட்டு, அந்தக் குழுவினர் இறையூர் சென்று இரு தரப்பு மக்களிடமும் நேரடியாக விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள், ``இரு தரப்பு மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினோம். அங்கிருக்கும் மக்கள் அனைவரும் இத்தனை ஆண்டுக்காலம் இணக்கமாகத்தான் இருந்திருக்கின்றனர். இது தொடர்பாக, பல தலைவர்கள் விமர்சனம் செய்யும் அளவுக்கு இங்கு பிரச்னைகள் ஏதும் இல்லை.

புதுக்கோட்டை: ``குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தை திசைதிருப்ப முயற்சி!" - பாஜக குற்றச்சாட்டு

இரு தரப்பினரும் நண்பர்களாக, உறவினர்களாக இருந்துவந்திருக்கின்றனர். குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இந்தப் பிரச்னை திசைதிரும்பிவிட்டது. இந்தப் பிரச்னையில், வெளி ஆட்கள் தலையீடு முழுமையாக இருக்கிறது. பிரச்னை இந்த அளவுக்கு போனதற்கு மாவட்ட ஆட்சியர்தான் காரணம். மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையைப் பொறுத்தவரை எங்களுக்கு திருப்தி இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருக்கும் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தபோது, ஒரு நாள் மண்டகப்படி பட்டியல் சமூக மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களும் கலந்துகொண்டு விழா நடத்தியிருக்கின்றனர். 

அப்படியிருக்க எங்கிருந்து புதிதாக ஆட்சியர் கூட்டிச் சென்றிருக்கிறார்... பட்டியல் சமூகத்தினருமே கும்பாபிஷேகத்தின்போது, `நாங்க கோயிலுக்குள் போனோம்'னு சொல்கிறார்கள். இரட்டை டம்ளர் விவகாரம் தொடர்பாக விசாரித்தபோது, பட்டியல் சமூகத்தினர், `நாங்க ஏதும் புகார் கொடுக்கலை' என்று சொல்கிறார்கள். அதே நேரத்தில் பிற சமூகத்தினரும், `இரட்டை டம்ளர் முறையெல்லாம் இங்க இல்லை. யார் டீ குடிச்சாலும், அவங்க டம்ளரை நாங்கதான் கழுவுறோம்' என்று சொல்கிறார்கள். ஆக, அங்கு இரட்டை டம்ளர், கோயிலுக்குள் நுழையவிடுவதில்லை என்பது முக்கியப் பிரச்னை இல்லை. மலம் கலந்த விவகாரம்தான் பெரிய பிரச்னை. அதை திசைதிருப்பிவிட்டார்கள். குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்தது கொடூரமான விஷயம். அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் செய்தார்களா, வெளியிலிருந்து யாரும் செய்தார்களா என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பாஜக-வினர்
பாஜக-வினர்

உண்மையான குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும். அப்படிச் செய்யாதபட்சத்தில் பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்தப்படும். சாதாரணமாக முடிக்கவேண்டிய பிரச்னை, பெரிய அளவுக்கு உருவெடுக்காமல் அதிகாரிகள் பேசி பிரச்னைக்குத் தீர்வுகண்டிருக்கலாம். ஏற்கெனவே, மாவட்ட அளவில் ஏழு பேர்கொண்ட குழு போட்டு, விசாரணை நடத்தினோம். இப்போது, மாநிலக்குழு போட்டு நாங்கள் வந்திருக்கிறோம். கழுகுப் பார்வையிலெல்லாம் எப்போதும் இருக்க முடியாது. இந்தப் பிரச்னைக்கு முடிவு தெரியாதபட்சத்தில் நாங்க களத்துக்கு வந்திருக்கிறோம். சாதிய ஒழிப்பில் பா.ஜ.க மட்டும்தான் உண்மையான முயற்சி எடுக்கிறது" என்றனர்.