Published:Updated:

''ஈர்ப்பு சக்தி கொண்ட தலைவர்கள் அதிமுக-வில் இல்லை!'' - வைகைச் செல்வன் அதிரடி

வைகைச் செல்வன்

''அதிமுக மிகப்பெரிய எழுச்சியைப் பெறுவதற்கான வழிவகைகளை ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் சேர்ந்து செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது!'' என்கிறார் வைகைச் செல்வன்.

''ஈர்ப்பு சக்தி கொண்ட தலைவர்கள் அதிமுக-வில் இல்லை!'' - வைகைச் செல்வன் அதிரடி

''அதிமுக மிகப்பெரிய எழுச்சியைப் பெறுவதற்கான வழிவகைகளை ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் சேர்ந்து செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது!'' என்கிறார் வைகைச் செல்வன்.

Published:Updated:
வைகைச் செல்வன்

சசிகலா, ஆன்மிக சுற்றுப்பயணம் செல்ல ஆரம்பித்ததிலிருந்து, 'அதிமுக-வின் தலைமைப் பொறுப்பை ஏற்கப்போகிறவர் யார்' என்றக் கேள்வி சூடு பறக்கிறது. அ.தி.மு.க-வைச் சேர்ந்த தலைவர்கள் சிலரும் 'கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா, சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க.... தடாலடியாக அவரைக் கட்சியிலிருந்து நீக்கி அறிவித்திருக்கிறது கட்சித் தலைமை!

பரபரப்பான இந்த அரசியல் சூழலில், அ.தி.மு.க செய்தித் தொடர்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வனிடம் பேசினேன்...

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

''அதிமுக-வில் தற்போது தலைமையே இல்லை; இப்போது இருப்பவர்களை கட்சியை வழிநடத்தவே நாங்கள் உருவாக்கி வைத்துள்ளோம் என்று செல்லூர் ராஜு சொல்கிறாரே?''

''எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற மக்கள் செல்வாக்குப் பெற்றத் தலைவர்களைப் பார்த்து பழக்கப்பட்டவர்கள் நாங்கள். தற்போது அப்படியான ஈர்ப்பு சக்தி கொண்ட தலைவர்களை அ.தி.மு.க பெறவில்லை என்றாலும்கூட, தொண்டர்களை அரவணைத்து கட்சியைத் திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் இரட்டைத் தலைமையை நாம் கொச்சைப்படுத்திவிடக் கூடாது. அ.தி.மு.க மிகப்பெரிய எழுச்சியைப் பெறுவதற்கான வழிவகைகளை ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் சேர்ந்து செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''ஓ.பி.எஸ் தலைமையிலான கூட்டத்தில், சசிகலா இணைப்பு குறித்து பேசப்படுகிறது, ஓ.பி.எஸ் சகோதரரான ஓ.ராஜா சசிகலாவை நேரிலேயே சந்திக்கிறார்... எனில், விரைவில் அ.தி.மு.க-வில் சசிகலா இணைந்துவிடுவார்தானே?''

''தகுதி உள்ளது தப்பிப் பிழைக்கும்; வெற்றிடத்தைக் காற்று நிரப்பும். ஒரு மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர்தான் முக்கியப் பொறுப்பை வகிக்கிறார் என்றாலும்கூட, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள கோஷ்டிப் பூசலை களைவதில் கட்சித் தலைமை கவனம் செலுத்தவேண்டும்!

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, எடப்பாடி பழனிசாமி

தேனி மாவட்ட அ.தி.மு.க-வினர் 'சசிகலாவை கட்சியில் இணைக்கவேண்டும்' என்கின்றனர். உடனே, 'இதுகுறித்து கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகளோடு பேசித்தான் முடிவெடுக்க முடியும்' என்றுதான் ஓ.பி.எஸ் சொல்லியிருக்கிறார். சசிகலாவை நேரில் சந்தித்த ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா, கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுவிட்டார். ஆக, கட்டுக்கோப்பான ஒரு கட்சியில் எந்தவொரு முடிவுமே ஒருமித்த முடிவாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவருமே கடந்த காலத்தில் பிரிந்திருந்தார்கள். 'நாம் இணையவேண்டும்' என்று இருவருமே ஒருமித்து நினைத்ததால்தான், இணைப்பு சாத்தியப்பட்டது. இப்படி ஒருமித்த எழுகிற கருத்து மட்டுமே அ.தி.மு.க-வுக்கு சிறந்த முறையில் வழி காட்டும். மக்களும்கூட இதைத்தான் ஏற்றுக்கொள்வார்கள்!''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''இதைத்தானே, 'அ.தி.மு.க-வினர் ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம்' என்று சசிகலாவும் சொல்லிவருகிறார்?''

''ஒரே ஓட்டில்தான், ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவருமே கட்சியின் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். அந்தவகையில், அ.தி.மு.க சார்பில் எடுக்கப்படுகிற எல்லா முடிவுகளுமே, ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டு எடுக்கப்பட்டவைதான்.

இந்த நிலையில், 'அ.தி.மு.க-வுக்கு ஒரு மாற்றம் வரவேண்டும்; இதிலிருந்து பிரிந்துபோயிருக்கிற பல்வேறு சக்திகளையும் மறுபடியும் அ.தி.மு.க-வோடு ஒன்றிணைக்க வேண்டும்' என்றெல்லாம் சொன்னால், இதையும்கூட ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரும் ஒருமித்துதான் முடிவெடுக்க வேண்டும். அப்படி ஒருமித்து முடிவெடுக்காதவரையில், அந்த செயல் வெற்றி பெறாது!''

எடப்பாடி பழனிசாமி - ஜெயக்குமார் - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - ஜெயக்குமார் - ஓ.பன்னீர்செல்வம்

''ஆனால், சிறையிலிருந்துவரும் ஜெயக்குமாரை சந்திப்பதிலும்கூட, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரிடையே முரண்பாடு உள்ளதே?''

''தனித்தனியே சென்று சந்தித்தாலும் இந்த இரண்டு தலைவர்களுமே ஜெயக்குமாரை நேரில் சந்தித்திருக்கிறார்கள் என்பதுதான் இங்கே முக்கியம். இருவருக்கும் இருக்கிற அலுவல் காரணமாக ஒன்றாக போய் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. இதுபோன்ற சின்னச்சின்ன விஷயங்களை வைத்துக்கொண்டு, பிரச்னைகளாக பெரிதுபடுத்தக்கூடாது.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism