Election bannerElection banner
Published:Updated:

``சசிகலா முதல்வராவதைத் தடுக்கவே நான் பதவியேற்றேன்!'' - ஆடிட்டர் குருமூர்த்தி

ஆடிட்டர் குருமூர்த்தி
ஆடிட்டர் குருமூர்த்தி ( என்.ஜி.மணிகண்டன் )

மேடையில் ராஜகுரு என்று குறிப்பிட்டபோது அவர் மறுக்கவில்லை. ``குரு என்பது என் பெற்றோர் வைத்த பெயர், என்னை எல்லோரும் குரு என்று அழைத்தே ஆக வேண்டும், வேறு வழியில்லை.

``சோவுக்கு கருணாநிதிபோல, எனக்கு சசிகலா பத்திரிகை விற்பனைக்குக் காரணமாக இருந்தார். துக்ளக் ஆசிரியராக ஆக மறுத்துவந்த நான், சசிகலா முதலமைச்சராகி விடுவார் என்ற சூழல் வந்ததால் அதைத் தடுக்க உடனே பொறுப்பேற்றேன்'' என்று மதுரையில் நடந்த விழாவில் துக்ளக் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆடிட்டர் குருமூர்த்தி
ஆடிட்டர் குருமூர்த்தி
என்.ஜி.மணிகண்டன்

`ஓ.பன்னீர்செல்வத்தை ஆம்பளையா என்று கேட்டேன்...' என்று குருமூர்த்தி திருச்சி விழாவில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு `நமது அம்மா' நாளிதழில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் ஜெயக்குமாரும் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தார். தொடர்ந்து, ``நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, அ.தி.மு.க-வில் மதிக்கும் நபர் பன்னீர்செல்வம்'' என விளக்கம் தந்தார் குருமூர்த்தி. அந்த சர்ச்சை ஓய்ந்தநிலையில், மதுரையில் நடந்த விழாவில் வழக்கம்போல திராவிடக் கட்சிகளை விமர்சித்துப் பேசியவர், ``நாத்திகவாதிகளும், மார்க்சிய சிந்தனையாளர்களும் உள்ள தமிழக ஊடகங்களை மாற்ற வேண்டும்' என்று சில புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசியவர், ``மேடையில் சிலர் என்னை ராஜகுரு என்று அழைத்தார்கள்''. குரு என்பது என் பெற்றோர் வைத்த பெயர், என்னை எல்லோரும் குரு என்று அழைத்தே ஆகவேண்டும், வேறு வழியில்லை'' என்று சிலேடையாகப் பேசினார்.

ஆடிட்டர் குருமூர்த்தி
ஆடிட்டர் குருமூர்த்தி
என்.ஜி.மணிகண்டன்

தொடர்ந்து அவர் பேசும்போது, ``என்னைவிட நீ துணிச்சல்காரன் என சோ என்னிடம் அடிக்கடி கூறுவார். துக்ளக் நான் நடத்த வேண்டும் என 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே கேட்டுக்கொண்டார். இந்திய அரசியலில் மாற்றத்தை கொண்டுவருபவன் நீ என சோ தெரிவித்தார். ஜெயலலிதா, சோ மறைந்து சசிகலா அரசியலுக்கு வந்தபோது அரசியல் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என நினைத்தேன். நான் வந்தபிறகு துக்ளக் பத்திரிகைக்கு சசிகலா அரசியலைப் பயன்படுத்தினேன்.

நானும் சோவும் சில நேரங்களில் கருத்தால் சண்டையிட்டுள்ளோம், ராஜீவைத் தோற்கடிக்க வி.பி சிங்கை ஆரம்பத்தில் கொண்டு வந்தபோது, வி.பி.சிங் நல்ல ஆள் இல்லை என்று சோ எதிர்த்தார். கடைசியில் அவர் சொன்னதுதான் நடந்தது.

ஆடிட்டர் குருமூர்த்தி
ஆடிட்டர் குருமூர்த்தி
என்.ஜி.மணிகண்டன்
`நீங்க போய் சமாதியில் உட்காருங்க.. வழிபிறக்கும்'- ஆடிட்டர் குருமூர்த்தி மீண்டும் சர்ச்சை!

பத்திரிகை உலகில் உண்மையைத் தேடவேண்டிய நிலை உள்ளது. ஆதாரமற்ற செய்திகள் வெளிவருகின்றன. தற்போதைய பத்திரிகை உலகம் கேவலமாக உள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் இரண்டு கழகங்களாலும் அரசியல் கலாசாரம் வேண்டுமானால் அழிந்துவிட்டது என்று சொல்லலாம். ஆன்மிகக் கலாசாரம் அப்படியேதான் இருக்கிறது. பிரதோஷம் பற்றி டீக்கடைக்காரரும் தெரிந்துகொள்ளும் நிலை உள்ளதால் திராவிட அரசியலை தமிழக மக்கள் புறக்கணிக்கத் தொடங்கிவிட்டதாகச் சொல்லலாம்.

கறுப்புச் சட்டையைப் போட்டுகொண்டு 1970-ம் ஆண்டு 400 இந்து தெய்வங்களை நிர்வாணமாக படம்போட்டு ஊர்வலம் நடத்தினார்கள். அப்போது துக்ளக் மட்டும்தான் அவர்களுக்குப் பதில் அளித்தது. தற்போது கோடிக்கணக்கானோர் கறுப்புச் சட்டை அணிந்து சபரிமலைக்குச் செல்கிறார்கள். தற்போது அரசியலில் மட்டும்தான் திராவிடம் உள்ளது. மக்களிடம் திராவிடம் இல்லை. இப்படித் தமிழகத்தை மாற்றிய பெருமை எம்.ஜி.ஆரைத்தான். கோயிலுக்கு முதன்முதலில் வெளிப்படையாக அறிவித்துவிட்டு சென்றவர் அவர்தான்.

ஆடிட்டர் குருமூர்த்தி
ஆடிட்டர் குருமூர்த்தி
என்.ஜி.மணிகண்டன்

நாத்திகத்தையும், மார்க்சிஸத்தையும் கடைப்பிடிப்பவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பத்திரிகைகளிலும் உள்ளனர். இந்தக் கலாசாரத்தை மாற்ற வேண்டும். தனித் தமிழகம் என்பது கிணற்றுத் தவளை போன்றது. தமிழகம் இந்தியாவுக்குத் தலைமை தாங்க வேண்டும் என்ற நிலை வர வேண்டும்.

`ஆளத்தான் அதிகாரம் அளித்தார்கள்; நாட்டைத் துண்டாக்க அல்ல!’ - மக்களவையில் தகித்த சு.வெங்கடேசன் எம்.பி

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற தேசமாக இந்தியா உள்ளதாக ராகுல்காந்தி கூறிவருகிறார், அவருக்கு நாட்டைப் பற்றி முழுமையாகத் தெரியாது. இங்கிலாந்தில் இந்தியாவைவிட 80 மடங்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுகின்றன. ஆனால், இங்கு அது செய்தியாக வெளிவரவில்லை. இந்தியா, பெண்களுக்கு மதிப்பளிக்கும் தேசம். மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் குற்றச்சம்பவங்கள் குறைவாகத்தான் நடக்கின்றன.

ஆடிட்டர் குருமூர்த்தி
ஆடிட்டர் குருமூர்த்தி
என்.ஜி.மணிகண்டன்
`இழிவாகப் பேசுவதை குருமூர்த்தி நிறுத்திக்கொள்வது உத்தமம்!' - அ.தி.மு.க நாளிதழ் விமர்சனம்

ஏனென்றால் சமுதாயம் கண்காணிக்கிறது என்ற உணர்வோடு இந்தியர்கள் வாழ்கிறார்கள். பெண்களுக்கு உரிமைகள் அதிகமாகி, மரியாதை குறைந்ததால்தான், பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்கின்றன. உரிமை என்பது மேற்கத்திய கலாசாரம், உரிமைகளால் பெண்களைப் பாதுகாக்க முடியாது'' என்றார். போலீஸ் பாதுகாப்புடன் வந்தார் குருமூர்த்தி. நிகழ்ச்சி நடந்த அரங்கில் ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாகச் செய்திருந்தது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு