Published:Updated:

`ஆட்டோ மொபைல் துறை மேம்படுத்தப்படும்!’ - நிர்மலா சீதாராமன்

கலிலுல்லா.ச

ஆட்டோ மொபைல் நிறுவனங்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம். ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

nirmala sitharaman
nirmala sitharaman

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``வங்கி இணைப்புகள் மூலம் 1 சதவிகிதம்கூட வேலை இழப்புகள் இருக்காது. பொதுவாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு நிதிகள் அதிகமாகத் தரப்படுகிறது. எந்த வங்கிகளும் மூடப்படாது; வங்கிகள் மூடப்படும் என்பது தவறான தகவல். வாகன உற்பத்திக்கான ஜி.எஸ்.டி குறைப்பு நடவடிக்கை குறித்து ஜி.எஸ்.டி குழுவே முடிவெடுக்கும்.

nirmala sitharaman
nirmala sitharaman

நிதித்துறை சார்பில் அவர்களுக்கு இது தொடர்பாக பரிந்துரைக்கப்படும். பொருளாதாரப் பின்னடைவால் வாகன உற்பத்தி சரிவடைந்து, 3.5 லட்சம் பேர் வேலை இழந்திருப்பதாகக் கூறுவதற்கு எந்தவித புள்ளிவிவரமும் இல்லை. பெரிய நிறுவனங்களில் எத்தனை பேர் பணிபுரிகின்றனர் என்ற புள்ளிவிவரம் உள்ளது. ஆனால், சிறு குறு நிறுவனங்களில் எத்தனை பேர் பணிபுரிகின்றனர் என்பதற்கான ஆவணங்கள் இல்லை. வாகன உற்பத்தி வீ்ழ்ச்சி ஜி.எஸ்.டி காரணம் என்றால் இது குறித்து ஜி.எஸ்.டி. குழுவிற்கு பரிந்துரைப்போம்.

மேலும் இது தொடர்பாக ஆட்டோ மொபைல் நிறுவனங்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம். ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

nirmala sitharaman
nirmala sitharaman

இந்தியாவில் தங்கத்தின் மீது அதிக ஈர்ப்பு உள்ளது. உலக நாடுகளின் முதலீடுகளைப் பொறுத்தே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது” என்றார். மேலும் `பொருளாதார வீழ்ச்சி’ குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ``இது தொடர்பாக அனைத்துத் துறைகளுடனும் கலந்து ஆலோசித்து வருகிறோம்” என்றார்.