Published:Updated:

``தி.மு.க-வுக்கு வைக்கும் செக்” - கௌதம சிகாமணி சொத்து முடக்கத்தின் பின்னணி!

தி.மு.க -பொன்முடி - கௌதம சிகாமணி
தி.மு.க -பொன்முடி - கௌதம சிகாமணி

2ஜி வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணைக்கு வந்துள்ளது. இப்போது தி.மு.க புள்ளிகள் மீது மத்திய அரசின் பிடி இறுக ஆரம்பித்திருப்பது தி.மு.க-வை கலகம் அடையச்செய்துள்ளது.

தி.மு.க மீது மத்திய அரசின் பிடி அதிகரித்துக்கொண்டே வருகிறது. முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதமசிகாமணியின் 8.60 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளது மத்திய அமலாக்க பிரிவு.

அமலாக்க பிரிவு
அமலாக்க பிரிவு

2006-11-ம் ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் தமிழகத்தின் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இவருடைய மகன் கௌதம சிகாமணி. இவர் 2008-ம் ஆண்டு 41,57,225 ரூபாய் மதிப்பீட்டில் இந்தோனேஷியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ளார். அதே போல ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் 22 லட்ச ரூபாய் முதலீடும் செய்தார். இந்த பணப் பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு அமலாக்க பிரிவு பெமா சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்தது.

இந்தநிலையில் கௌதம சிகாமணி, ஐக்கிய அரபு குடியரசில் உள்ள யுனிவர்ஸ் நிறுவனத்தின் மூலம் 7,05,57,237 கோடி ரூபாயை 2008-2009ம் ஆண்டு முதல் 2012-13ம் ஆண்டு காலம் வரை லாபத்தொகையை ஈட்டியுள்ளார். இது ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பானது என்று அமலாக்க பிரிவு குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு அமலாக்க பிரிவு விசாரணையிலிருந்து வந்த நிலையில் தற்போது அமலாக்க பிரிவு இந்த வழக்கில் மேல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கௌதம சிகாமணி
கௌதம சிகாமணி

அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் வெளிநாடுகளில் கௌதமசிகாமணி செய்த முதலீடுகள் மற்றும் அவர் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் லாபம் ஈட்டிய தொகைகளுக்கு ஈடாக அவருடைய விவசாய நிலங்கள், மற்றும் வணிக வளாகங்கள், மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்டவற்றை அமலாக்கப் பிரிவினர் 'பெமா' சட்டத்தின் கீழ் முடக்கி உத்தரவிட்டுள்ளனர். அமலாக்க பிரிவின் இந்த நடவடிக்கை தி.மு.க வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் அரக்கோணம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஜகத்ரட்சகனின் சொத்துக்களை இதே பெமா சட்டத்தின் கீழ் முடக்கி உத்தரவிட்டது மத்திய அமலாக்க பிரிவு. அதைத்தொடர்ந்து இப்போது கௌதம சிகாமணியின் சொத்துக்களை முடக்கியுள்ளது. இந்த வழக்கு பல காலமாக அமலாக்க பிரிவில் கிடப்பில் கிடந்தது. இப்போது இதற்கு உயிருட்டப்படதன் பின்னணியே தி.மு.க-விற்கு தேர்தல் நேரத்தில் நெருக்கடி கொடுக்கவே என்கிறார்கள்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

தி.மு.கவுக்கு தேர்தல் நேரத்தில் பொன்முடி, ஜகத்ரட்சகன் உள்ளிட்டவர்கள் தேர்தல் நிதி வழங்குவதில் முக்கியமானவர்கள் என்று மத்திய பா.ஜ.க அரசு கருதுகிறது. அவர்கள் மீது அடுத்தடுத்து நெருக்கடிகளைக் கொடுத்தால் அது தேர்தல் நேரத்தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். ஏற்கனவே 2ஜி வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு விசாரணைக்கு வந்துள்ளது. இப்போது தி.மு.க புள்ளிகள் மீது மத்திய அரசின் பிடி இறுக ஆரம்பித்துள்ளது அந்த தரப்பைக் கலகம் அடையச்செய்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு