வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, ராம்நாத் கோவிந்த், மோடிக்கு ஒரு மெட்ரிக் டன் மாம்பழங்களைப் பரிசளித்தது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ``கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்கம், திரிபுரா, அஸ்ஸாம் முதல்வர்கள் ஆகியோருக்கு பிரதமர் ஹசீனா மாம்பழங்களைப் பரிசாக அனுப்பினார்.

இப்போது வங்கதேசத்தில் மாம்பழ சீஸன் தொடங்கியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு மெட்ரிக் டன் 'அம்ராபலி' மாம்பழங்களைப் பரிசாக அனுப்பியிருக்கிறார். வங்கதேசம் மற்றும் இந்தியா இடையேயான உறவு புதிய உயரங்களை எட்டியிருக்கிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism