Published:Updated:

`தாய்மொழி கண்பார்வை போன்றது... ஆங்கிலம் போன்ற பிற மொழிகள் கண்ணாடி போன்றவை!' - வெங்கைய நாயுடு

வெங்கைய நாயுடு

`குரலற்றவர்களில் குரலாக இருங்கள்' என முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்திருக்கிறார்.

`தாய்மொழி கண்பார்வை போன்றது... ஆங்கிலம் போன்ற பிற மொழிகள் கண்ணாடி போன்றவை!' - வெங்கைய நாயுடு

`குரலற்றவர்களில் குரலாக இருங்கள்' என முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
வெங்கைய நாயுடு

டெல்லியில் இந்திய ஒளிபரப்பு கூட்டமைப்பின் 'செய்திகளின் எதிர்காலம்' என்ற கருத்தரங்கின் மாநாட்டின் தொடக்க விழாவில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், ``ஊடக நிறுவனங்கள் பற்றிய என் கருத்துகள் மிகவும் எளிமையானவை. குரலற்றவர்களில் குரலாக இருங்கள். ஊடகங்கள் நடுநிலையாக இருக்க வேண்டும். நீங்கள் ஒருபோதும் இடது அல்லது வலதுபுறமாக இருக்கக்கூடாது. ஊடகங்களுக்கு தேசத்தின் மீது பேரார்வம் இருக்க வேண்டும், உங்களுடைய வேலையை முழுமையுடன் செய்ய வேண்டும். தேசத்தின் மீதான ஆர்வம் என்பது ஒரு சேவை போன்றது.

வெங்கைய நாயுடு
வெங்கைய நாயுடு

தாய்மொழி கண்பார்வை. ஆங்கிலம் போன்ற பிற மொழிகள் கண்ணாடி போன்றவை. கண் பார்வை இருந்தால்தான், கண்ணாடி வேலை செய்யும். அதனால் நாட்டில் தாய் மொழிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும், ஏனென்றால் அவை மக்களின் மொழிகள். நான் மாநிலங்களவைத் தலைவராக இருந்தபோது, உறுப்பினர்களிடம், நீங்கள் விரும்பும் எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசலாம் என்று கூறுவதுண்டு.

முதலில் தாய்மொழி பிறகு சகோதர மொழி, அதன் பிறகு வேறு எந்த மொழியாக இருந்தாலும் பிரச்னை இல்லை. எனவே மக்களின் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதைதான் மக்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள். அதனால்தான் நான் எங்கு சென்றாலும் தாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறேன்'' என்றார்.