Published:Updated:

Droupadi Murmu : "பழங்குடியினச் சமூகத்தில் பிறப்பது ஒரு தடையல்ல!"- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ( ட்விட்டர் )

``பெண்ணாக இருப்பதோ அல்லது பழங்குடியினச் சமூகத்தில் பிறப்பதோ ஒரு தடையல்ல." - திரௌபதி முர்மு

Published:Updated:

Droupadi Murmu : "பழங்குடியினச் சமூகத்தில் பிறப்பது ஒரு தடையல்ல!"- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

``பெண்ணாக இருப்பதோ அல்லது பழங்குடியினச் சமூகத்தில் பிறப்பதோ ஒரு தடையல்ல." - திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ( ட்விட்டர் )

ஜார்கண்ட் மாநிலம், குந்தியில் மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்திருந்த பெண்கள் மாநாட்டில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``நம் நாட்டில் பெண்களின் பங்களிப்புக்கு எண்ணற்ற எழுச்சியூட்டும் எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. சமூகச் சீர்திருத்தம், அரசியல், பொருளாதாரம், கல்வி, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி, வணிகம், விளையாட்டு, ராணுவம் உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கியிருக்கின்றனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
ட்விட்டர்

எந்தவொரு துறையிலும் வெற்றிபெறுவதற்கு, அவர்களின் திறமையை அங்கீகரிப்பது இன்றியமையாதது. பெண்களை வலுவூட்ட பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் சமூக மற்றும் பொருளாதார அம்சங்கள் இரண்டும் இணையாக முக்கியமானவை. ஜார்க்கண்ட் மாநிலத்தின் கடின உழைப்பாளி சகோதரிகள், மகள்கள் அனைவரும் மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க வல்லவர்கள். உங்கள் திறமையை உணர்ந்து தன்னம்பிக்கையுடன் முன்னேறுங்கள்.

ஜார்க்கண்டின் கிராமப்புறப் பொருளாதாரத்துக்குப் பெண்களின் சக்தி ஆற்றலை வழங்குகிறது. எனவே, ஜார்க்கண்டிலுள்ள சுய உதவிக்குழுக்களுடன் அதிகமான பெண்களை இணைத்து அவர்களின் திறன் மேம்பாட்டின் மூலம் வேலைவாய்ப்பை வழங்குவது அவசியம். இந்த மாநாட்டின் மூலம், பெண்கள் தங்கள் உரிமைகள் மற்றும் அவர்களின் நலனுக்காக அரசு நடத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்து அதிக விழிப்புணர்வு பெறுவார்கள்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
ட்விட்டர்

பெண்ணாக இருப்பதோ அல்லது பழங்குடியினச் சமூகத்தில் பிறப்பதோ ஒரு தடையல்ல. பழங்குடிச் சமூகம் பல துறைகளில் சிறந்த உதாரணங்களை முன்வைக்கிறது. அவற்றில் ஒன்று பழங்குடிச் சமூகத்தில் வரதட்சணை முறை இல்லாதது. ஆனால், நம் சமூகத்திலுள்ள பலர், நன்கு படித்தவர்கள். ஆனாலும், இன்றுவரை வரதட்சணை முறையை படித்தவர்களால் விட முடியவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.