Published:Updated:

`என்னை அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள்!'- கொதிக்கும் புகழேந்தி

புகழேந்தி
புகழேந்தி ( எம்.விஜயகுமார் )

டி.டி.வி.தினகரனுக்கு தளபதிபோல் செயல்பட்ட பெங்களூரு புகழேந்தி, தற்போது எதிரணிபோல் செயல்படத் தொடங்கிவிட்டார்.

``நீதிமன்றம் என்ன கட்சி மேடையா? உங்கள் அரசியல் விளையாட்டை எங்களிடம் காட்டாதீர்கள்" என்று நீதிமன்றம் கடுமையான வார்த்தைகளை உயோகப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குப் புகழேந்தி நடக்காத ஒன்றை வேண்டுமென்றே கிளப்பிவிடுவதாக ஆவேசப்படுகிறார்.

புகழேந்தி
புகழேந்தி
எம். விஜயகுமர்

டி.டி.வி.தினகரனுக்கு தளபதிபோல் செயல்பட்ட பெங்களூரு புகழேந்தி, தற்போது தீராத பகையாளியாக மாறிவிட்டார். இந்த நிலையில், அ.ம.மு.க-வை தொடங்கிய புகழேந்தி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். அவர் தாக்கல் செய்த மனுவில், ``அ.ம.மு.க தொடங்கியபோது நான் உட்பட பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த 100 பேரில் 41 பேர் அ.ம.மு.க-விலிருந்து வெளியேறிவிட்டோம். எனவே, அ.ம.மு.க-வுக்கு தடைவிதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,

`தந்தை பியூன்... மகள் நீதிபதி'- குழந்தையில் சொன்னதை தாயான பின் செய்துகாட்டிய பெண்!

கட்சியிலிருந்து வெளியேறிய பின் அந்தக் கட்சியைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்தக் கூடாது. அரசியல் விளையாட்டை இங்கு விளையாடக் கூடாது என்று ஆவேசத்தோடு பேசியிருக்கின்றனர். அத்தோடு இந்த மனு குறித்து தினகரன் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

பெங்களூரு புகழேந்தி
பெங்களூரு புகழேந்தி

இதுகுறித்து புகழேந்தியிடம் பேசினோம். ``இது முற்றிலும் தவறான தகவல். பாண்டிச்சேரியில் அ.ம.மு.க-வில் போட்டியிட்ட தமிழ்மாறன் என்பவர் இவ்வழக்கில் என்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு மனுவைத் தாக்கல் செய்கிறார். அதை விசாரித்த நீதிபதி, `உங்களை இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ளமுடியாது. வேண்டுமென்றால் தனி வழக்காக பதிவு செய்யுங்கள். அத்தோடு நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள்' என்றும் சொன்னார். அவ்வளவுதான். இதில், நான் எங்கிருந்து வந்தேன். இந்த வழக்கு வருகின்ற திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. என்னை வேண்டுமென்றே அசிங்கப்படுத்த நினைத்து பலர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நான் யார் என்று காட்டுகிறேன்'' என்றார் காட்டத்தோடு.

அடுத்த கட்டுரைக்கு