Published:Updated:

தேசபக்தியை கையில் எடுக்கும் ராகுல்! - நடைப்பயணத்தில் ‘பாரத் மாதா கி ஜே’ கோஷம்...

ராகுல் காந்தி நடைபயணம்
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் காந்தி நடைபயணம்

ராகுல் காந்தியை வரவேற்கும்விதமாக சாலையின் இரண்டு பக்கமும் காங்கிரஸ் கொடிகளும், பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன

தேசபக்தியை கையில் எடுக்கும் ராகுல்! - நடைப்பயணத்தில் ‘பாரத் மாதா கி ஜே’ கோஷம்...

ராகுல் காந்தியை வரவேற்கும்விதமாக சாலையின் இரண்டு பக்கமும் காங்கிரஸ் கொடிகளும், பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன

Published:Updated:
ராகுல் காந்தி நடைபயணம்
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் காந்தி நடைபயணம்

தேசத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள ‘இந்திய ஒற்றுமைப் பயண’த்தில், தேசபக்தியைக் கையில் எடுத்து நடைபோட ஆரம்பித்திருக்கிறார் ராகுல் காந்தி. கடந்த 7-ம் தேதி (7-9-2022) நடைப்பயண தொடக்க விழாவுக்காக கன்னியாகுமரி வந்திருந்தவர், முதலில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். பிறகு காமராஜர், காந்தி மண்டபங்களில் அஞ்சலி செலுத்திவிட்டு, நடைப்பயணத்துக்குத் தயாரானார்.

‘தமிழக முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தியிடம் தேசியக்கொடியை வழங்கி நடைப்பயணத்தைத் தொடங்கிவைப்பார்’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால், மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து காங்கிரஸ் முதல்வர்கள் அசோக் கெலாட் (ராஜஸ்தான்), பூபேஷ் பாகல் (சத்தீஸ்கர்) ஆகியோரும் தேசியக்கொடியைப் பிடித்திருந்தனர்.

தேசபக்தியை கையில் எடுக்கும் ராகுல்! - நடைப்பயணத்தில் ‘பாரத் மாதா கி ஜே’ கோஷம்...

பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் வெளி மாநில நிர்வாகிகளும் ‘பாரத் மாதா கி ஜே’ என உணர்ச்சிமிகு கோஷம் எழுப்பியபடியே இருந்தனர். ‘இது பா.ஜ.க-வின் கோஷம் இல்லையா?’ எனச் சிலர் சந்தேகம் கேட்க, ‘பாரத மாதா எல்லோருக்கும் பொதுவானவர்தான்’ என்று ஒரு நிர்வாகி விளக்கமளித்தார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ‘‘சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கு பங்கு இல்லை; காங்கிரஸுக்குத்தான் பங்கு உண்டு’’ என விளக்கம் கொடுத்துவிட்டு, ‘ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா...’ என்ற பாரதியார் பாடலைப் பாடி ராகுல் காந்தியின் பாத யாத்திரைக்கு வாழ்த்து சொன்னார். அதை ரசித்துக் கேட்ட ராகுல், ப.சிதம்பரம் பேசி முடித்ததும் அவரைத் தனது பக்கத்து இருக்கையில் அமரவைத்து, ‘அது என்ன பாடல்?’ என்று கேட்டார். பாடல் குறித்து ப.சிதம்பரம் கூறிய விளக்கத்தைச் சிரித்துக்கொண்டே கேட்ட ராகுல் முகத்தில் கூடுதல் உற்சாகம். நிறைவாக ராகுல் காந்தி பேசும்போதும் மத்திய அரசைப் பெரிதாக அட்டாக் செய்யாமல், தேசியக்கொடி, தேசபக்தி பற்றித்தான் அதிகமாகப் பேசினார்.

``என்ன... இந்த முறை தேசபக்தி முழக்கங்கள் தூக்கலாக இருக்கின்றனவே?’’ என்று கேட்டோம். ‘காங்கிரஸை தேசத்துக்கு எதிரானவர்கள் போன்று பா.ஜ.க சித்திரித்துவருகிறது. எனவே, மீண்டும் காங்கிரஸ் எழுச்சி பெற்று ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால், நாம் தேசபக்தியைக் கையில் எடுக்க வேண்டும்’ என அண்மையில் நடந்த கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நிர்வாகிகள் சொன்னார்கள்.

தேசபக்தியை கையில் எடுக்கும் ராகுல்! - நடைப்பயணத்தில் ‘பாரத் மாதா கி ஜே’ கோஷம்...

வாழ்த்து சொல்லமுடியாத திருமா!

வி.சி.க தலைவர் திருமாவளவன் நடைப்பயணம் செல் லும் ராகுல் காந்திக்கு வாழ்த்து சொல்ல கன்னியாகுமரிக்கு வந்திருந்தார். அவரை கே.எஸ்.அழகிரி மேடைக்கு அழைத்து வந்து, ராகுலுடன் கைகுலுக்கவைத்தார். பதிலுக்கு திருமா ராகுலுக்கு வாழ்த்து சொல்ல முனையும் வேளை, மிகச்சரியாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் ஒலிக்கத் தொடங்கியது. உடனே திருமாவளவன் மேடையின் பின் வரிசைக்குச் சென்றுவிட்டார். கடைசிவரை திருமாவளவனால், ராகுலுக்கு வாழ்த்து சொல்லவே முடியவில்லை.

காங்கிரஸ் மறியல்!

ராகுல் காந்தியை வரவேற்கும்விதமாக சாலையின் இரண்டு பக்கமும் காங்கிரஸ் கொடிகளும், பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், முதல்வர் ஸ்டாலின் வரும் பாதையில் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு கொடிகளையும், பேனர்களையும் பாதுகாப்பு காரணங்களுக்காக அகற்றிவிட்டனர் போலீஸார். இதனால் கோபமடைந்த காங்கிரஸ் கட்சியினர் எம்.எல்.ஏ விஜயதரணி தலைமையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். முதல்வர் சென்ற பிறகு கொடியை மீண்டும் வைப்பதாக போலீஸ் தரப்பில் சமாதானம் கூறப்பட்டது.

தேசபக்தியை கையில் எடுக்கும் ராகுல்! - நடைப்பயணத்தில் ‘பாரத் மாதா கி ஜே’ கோஷம்...

மக்களைத் திரட்டிய எம்.எல்.ஏ-க்கள்!

நடைப்பயணத்தின் இரண்டாவது நாள் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியிலிருந்து நடக்கத் தொடங்கினார் ராகுல். அப்போது, சாலையின் இருபுறமும் மக்கள் தாமாகக் கூடினாலும், கூடுதல் கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒவ்வொரு 3 கிலோமீட்டருக்கும் மக்களை நிறுத்தும் பொறுப்பு கட்சியின் எம்.எல்.ஏ-க்களுக்கு தனித்தனியே பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. முதல் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ் குமார் பொறுப்பேற்றிருந்தார்.

148 நாள்கள்... 3,600 கி.மீ கொண்ட இந்த நீண்ட நடைப்பயணத்தில் ராகுலுடன் 118 பேர் செல்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள், 28 பேர் பெண்கள்!

***

தேசபக்தியை கையில் எடுக்கும் ராகுல்! - நடைப்பயணத்தில் ‘பாரத் மாதா கி ஜே’ கோஷம்...

ராஜீவ் நினைவிடத்தில் ராகுல்!

நடைப்பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, ஸ்ரீபெரும்புதூரிலுள்ள தன் தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்குச் சென்றார் ராகுல். இந்த நினைவிடத்துக்குள் ராகுல் வந்தது இதுவே முதன்முறை. 15 ஆண்டுகளுக்கு முன்பே அவர் இங்கே அஞ்சலி செலுத்த வந்திருக்கிறார் என்றாலும், காரிலிருந்து இறங்கியவுடனேயே பிரியங்கா துக்கம் தாங்காமல் கீழே விழுந்து அழுதுவிட்டார். ஆண்டுகள் பல ஆகிவிட்டாலும், ராகுல் முகத்தில் பெரும் சோகம். கடைசியாக ராஜீவ் நடந்துவந்த பாதை, குண்டு வெடித்து ராஜீவ் சரிந்து விழுவது போன்ற ஓவியம், நினைவிடத்தின் மீது வைக்கப்பட்டிருந்த தந்தைக்குப் பிடித்தமான மாம்பழங்கள், வீணை காயத்ரியின் சோக இசை எல்லாம் சேர்ந்து அவரைக் கண்கலங்க வைத்துவிட்டன.

நினைவிடத்தை ராகுல் சுற்றிவரும்போது, அவருக்குப் பக்கத்தில் நடந்துசெல்வதில் அங்கிருந்த மூத்த தலைவர்களுக்கிடையே கடும் போட்டி. பிரார்த்தனைக்காக அமர்ந்தபோதும், அவருக்கு அருகில் உட்காருவதற்குத் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், கே.எஸ்.அழகிரி தடுமாறி கீழே சாய அருகிலிருந்த செல்வப்பெருந்தகை அவரைத் தாங்கிப் பிடித்தார். ராகுல் கிளம்பியதுமே மூத்த தலைவர்கள் அனைவரும் அவசர அவசரமாக அவருடனேயே சென்றுவிட்டார்கள். ஆனால், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் நினைவிடத்துக்கு வந்து மலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டே கிளம்பினார்.