Published:Updated:

இந்தியில் மருத்துவப் படிப்பு: ம.பி-க்கு பிரதமர் பாராட்டு- `அடுத்த ஆண்டு உ.பி-யிலும் தொடங்கும்’ யோகி

பிரதமர் மோடி

மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் 13 மருத்துவக் கல்லூரிளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உடற்கூறியல், உடலியல், உயிர் வேதியியல் ஆகிய மூன்று இளநிலை மருத்துவப் படிப்புக்கான பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்படவிருக்கின்றன.

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட முதலாம் ஆண்டு MBBS பாடப் புத்தகங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டு, இந்தி மொழியில் மருத்துவக் கல்வித் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். மேலும், மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் 13 மருத்துவக் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உடற்கூறியல், உடலியல், உயிர் வேதியியல் ஆகிய மூன்று இளநிலை மருத்துவப் படிப்புக்கான பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்படவிருக்கின்றன.

அமித் ஷா
அமித் ஷா

இந்த நிலையில், இந்தியில் மருத்துவக் கல்வி அளிக்கும் மத்தியப் பிரதேச அரசின் முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில், "மருத்துவக் கல்வித்துறையில் இந்த ஆரம்பம் நாட்டில் ஒரு பெரிய நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரப்போகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் சொந்த மொழியில் படிக்க முடியும், அவர்களுக்கு பல வாய்ப்புகளின் கதவுகள் திறக்கப்படும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

இதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில், "உத்தரப்பிரதேசத்தில் உள்ள சில மருத்துவம் மற்றும் பொறியியல் புத்தகங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுவருகின்றன. வரும் ஆண்டு முதல், இந்தப் பாடங்களின் படிப்புகள் மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இந்தியில் படிக்கக் கிடைக்கும்" எனத் தெரிவித்திருக்கிறார்.