Published:Updated:

``பாகிஸ்தான் சந்தித்த மிகப்பெரிய `அராஜகவாதி' இம்ரான் கான்!" - நவாஸ் ஷெரீப் மகள் காட்டம்

மரியம் நவாஸ் ( ட்விட்டர் )

`வெளிநாட்டு சதியால் தன்னுடைய அரசாங்கம் கவிழ்ந்தது என்று இம்ரான் கான் கூறி வருவது, பாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய நாடகம்' என மரியம் நவாஸ் தெரிவித்திருக்கிறார்.

``பாகிஸ்தான் சந்தித்த மிகப்பெரிய `அராஜகவாதி' இம்ரான் கான்!" - நவாஸ் ஷெரீப் மகள் காட்டம்

`வெளிநாட்டு சதியால் தன்னுடைய அரசாங்கம் கவிழ்ந்தது என்று இம்ரான் கான் கூறி வருவது, பாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய நாடகம்' என மரியம் நவாஸ் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
மரியம் நவாஸ் ( ட்விட்டர் )

இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்ததையடுத்து, ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இருப்பினும் பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டேதான் இருக்கிறது. அமெரிக்காசெய்த சதியால்தான், தன்னுடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக இம்ரான் கான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். மேலும், ஷெபாஸ் ஷெரீப் அரசை, `இறக்குமதி அரசு' எனவும் விமர்சித்து வருகிறார்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

பாகிஸ்தானின், பஞ்சாப் சட்டப்பேரவையில் காலியாக உள்ள 20 இடங்களுக்கு ஜூலை 17-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனால் பாகிஸ்தான் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், லாகூரில் நடந்த தேர்தல் பேரணியின்போது பேசிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், ``துரதிஷ்டவசமாக பாகிஸ்தான் அரசியல் மிகப்பெரிய பொய்யர், அராஜகவாதி மற்றும் ஏமாற்றுபவரை சந்தித்திருக்கிறது. அமெரிக்கா நாட்டு மக்களை அடிமைகளாக வைத்திருக்கிறது என்று அவர் மக்களிடம் அடிக்கடி பொய் சொல்வார். வெளிநாட்டு சதியால் தன்னுடைய அரசாங்கம் கவிழ்ந்தது என்று இம்ரான் கான் கூறி வருவது, பாகிஸ்தான் வரலாற்றில் மிகப்பெரிய நாடகம். பி.டி.ஐ-யின் ஆட்சிக்காலத்தில் பஞ்சாப் அனாதை போல இருந்தது. இனி பஞ்சாப் முன்பு போலவே முன்னேறும்" என இம்ரான் கானைச் சாடினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!