Published:Updated:

பீகார்: தேஜஸ்வி யாதவின் இஃப்தார் விருந்தில் நிதிஷ்குமார்! - மாறுகிறதா அரசியல் காட்சிகள்?

இஃப்தார் விருந்தில் நிதிஷ் குமார் - தேஜஸ்வி யாதவ்

பீகாரில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அளித்த இஃப்தார் விருந்தில் பா.ஜ.க ஆதரவு முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்து கொண்டது பீகார் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.

ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் பாஜக ஆதரவுடன் பீகாரில் முதலமைச்சராக இருந்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவராகத் தேஜஸ்வி யாதவ் இருந்து வருகிறார். இந்த நிலையில், தேஜஸ்வி யாதவ் தனது இல்லத்தில் நேற்று இஃப்தார் விருந்தளித்தார்.

இந்த விருந்தில், பாஜக ஆதரவு முதல்வர் நிதிஷ்குமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கலந்துகொண்டுள்ளார். அவருக்கு லாலு பிரசாத் யாதவ்வின் மகன்களான தேஜ் பிரதாப், தேஜஸ்வி யாதவ், அவர்களின் தாயார் என அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்

இது தொடர்பாக பீகார் மாநில அமைச்சர் ஷாநவாஸ் ஹுசைன், “நானும் சுஷில் மோடியும் இஃப்தார் விருந்து வைத்தோம், அதில் முதல்வர் நிதிஷ்குமாரும் கலந்துகொண்டார். அதே போல தற்போது தேஜஸ்வி யாதவ் வழங்கும் இஃப்தர் விழாவுக்கு அழைக்கப்பட்டதால் வந்துள்ளோம். இதில் எந்த அரசியலும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என்றார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ், "பாஜக, ஜேடியு, எல்ஜேபி என அனைத்து கட்சிகளுக்கும் நாங்கள் அழைப்புகளை வழங்கியுள்ளோம், மேலும் அனைவரும் இஃப்தார் விருந்தில் பங்கேற்பது பாரம்பரியமாக இருந்து வருகிறது" என்றுக் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism