Published:Updated:

பீகார்: 40 வருட துப்புரவு பணி டு துணை மேயர் பதவி... யார் இந்த சிந்தா தேவி?!

சிந்தா தேவி ( ட்விட்டர் )

பீகாரில் கடந்த 40 வருடங்களாக துப்புரவு பணி செய்து வந்த பெண் ஒருவர் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பீகார்: 40 வருட துப்புரவு பணி டு துணை மேயர் பதவி... யார் இந்த சிந்தா தேவி?!

பீகாரில் கடந்த 40 வருடங்களாக துப்புரவு பணி செய்து வந்த பெண் ஒருவர் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Published:Updated:
சிந்தா தேவி ( ட்விட்டர் )

பீகாரின் கயாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் மேயராக கணேஷ் பாஸ்வான் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, துணை மேயராக கடந்த 40 வருடங்களாக கழிவுகளை அகற்றும் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்த சிந்தா தேவி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக வெளியான தகவலில், கயா பகுதியில் கழிவறை எண்ணிக்கை குறைவாக இருந்த போது, மனித மலத்தை தலையில் சுமந்து அப்புறப்படுத்தியவர் சிந்தா தேவி. ஒரு துப்புரவு பணியாளரை துணை மேயராக கயா நகராட்சி தேர்வு செய்ததன் மூலம் உலகம் முழுவதற்கும் ஒரு உதாரண சரித்திரம் படைத்திருக்கிறது.

இது தொடர்பாக முன்னாள் துணை மேயர் மோகன் ஸ்ரீவஸ்தவா, "சிந்தா தேவி, கடந்த காலங்களில் துப்புரவு தொழிலாளியாகவும் காய்கறி விற்பனையாளராகவும் பணியாற்றினார். தேர்தலில் வெற்றி பெற்று சிந்தா தேவி சரித்திரம் படைத்துள்ளார். நகர மக்கள் ஒடுக்கப்பட்டவர்களை ஆதரித்து, அவர்களை சமூகத்தில் முன்னேற்ற முயன்றிருக்கிறார்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.

சிந்தா தேவி
சிந்தா தேவி

சிந்தா தேவி ஸ்ரீவஸ்தவா-வின் ஆதரவு பெற்றவர் என்பது கவனிக்கத்தக்கது. கயாவில் இது போன்ற சம்பவங்கள் புதிதல்ல. இதற்கு முன் 1996-ம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைத் சேர்ந்த பகவதி தேவி, நிதிஷ் குமாரின் கட்சியின் மூலம் மக்களவைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய வரலாறும் உள்ளது குறிப்பிடத்தக்கது.