Published:Updated:

பீகார் உள்குத்து அரசியல்: பா.ஜ.க-வை புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டாரா நிதிஷ் குமார்?

நிதிஷ்குமார் - மோடி

கடந்த 10 நாள்களில் பா.ஜ.க அழைப்பு விடுத்த மூன்று முக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பு செய்திருக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். இதனால், பா.ஜ.க-ஐ.ஜ.த கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பீகார் உள்குத்து அரசியல்: பா.ஜ.க-வை புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டாரா நிதிஷ் குமார்?

கடந்த 10 நாள்களில் பா.ஜ.க அழைப்பு விடுத்த மூன்று முக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பு செய்திருக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். இதனால், பா.ஜ.க-ஐ.ஜ.த கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Published:Updated:
நிதிஷ்குமார் - மோடி

பீகாரில் கூட்டணிக்கட்சியான பா.ஜ.கவுடன் ஏற்பட்டிருக்கும் விரிசலால் தொடர்ச்சியாக பா.ஜ.க ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகளை புறக்கணித்துவருகிறார் ஐ.ஜ.த தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார். குறிப்பாக, கடந்த 10 நாள்களில் பா.ஜ.க அழைப்பு விடுத்த மூன்று முக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பு செய்திருக்கிறார். இதனால், பா.ஜ.க - ஐ.ஜ.த கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பா.ஜ.க தலைவர்- நிதிஷ்குமார்
பா.ஜ.க தலைவர்- நிதிஷ்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பீகாரில் பா.ஜ.க - ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 77 இடங்களிலும், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 45 இடங்களிலும் வெற்றிபெற்றது. கூட்டணி ஒப்பந்தப்படி நிதிஷ் குமார் முதல்வரானார். இந்த நிலையில், சமீப காலமாக நிதிஷ் குமாரின் ஐ.ஜ.தவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. அதனால், கடந்த 10 நாள்களில் பா.ஜ.க சார்பில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காமல் தவிர்த்திருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேசியக்கொடி ஆலோசனைக் கூட்டம்:

குறிப்பாக, கடந்த ஜூலை 17-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரின் வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பா.ஜ.க கூட்டணி ஆளும் மாநில முதல்வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்தார். அவருக்குப் பதிலாக பா.ஜ.கவைச் சேர்ந்த துணை முதல்வர் தர்கிஷ் பிரசாத் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அமித்ஷா
அமித்ஷா

குடியரசுத் தலைவர் பிரிவு உபசார விழா:

கடந்த ஜூலை 23-ம் தேதி, குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்துக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ராம்நாத் கோவிந்திற்கு பிரியாவிடை
ராம்நாத் கோவிந்திற்கு பிரியாவிடை
ட்விட்டர்

ஆனால், அந்த நிகழ்விலும் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை. அதற்கு முன்னதாக ராம்நாத் கோவிந்துக்கு மோடி அளித்த இரவு விருந்திலும் பங்கேற்காமல் தவிர்த்தார். அதேசமயம் பீகார் சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார்.

திரௌபதி முர்மு  பதவியேற்பு
திரௌபதி முர்மு பதவியேற்பு
ட்விட்டர்

குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா:

இந்த நிலையில், நேற்று முந்தினம்(ஜூலை 25) புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். அந்த விழாவில் பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பையும் நிதிஷ்குமார் புறக்கணித்திருக்கிறார்.

இப்படியாக, கடந்த 10 நாள்களில் அடுத்தடுத்து 3 நிகழ்ச்சிகளுக்கு பா.ஜ.க சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் புறக்கணித்திருக்கிறார். இதனால் பா.ஜ.க - ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியில் விரிசல் முற்றியிருக்கிறது. கூட்டணியில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பா.ஜ.க - ஐ.ஜ.த: விரிசலுக்கான காரணங்கள் என்ன?

கடந்த சில மாதங்களாகவே பா.ஜ.கவுக்கும், ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவிவருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

நிதிஷ்குமாரின் எதிர்க்கட்சியுடனாக நெருக்கம்:

குறிப்பாக, கடந்த ஜூன் மாத தொடக்கத்தில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக பீகார் மாநில அரசு சார்பில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அந்தக்கூட்டத்தின் முடிவில் முதல்வர் நிதிஷ் குமாரும், எதிர்க்கட்சித் தலைவரான (ராஷ்ட்டிரிய ஜனதா தளம்) தேஜஸ்வி யாதவும் கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் முடிவு குறித்துப் பேசினர். இது கூட்டணிக்கட்சியான பா.ஜ.கவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதற்கு முன்னதாக, இப்தார் நோன்பு விருந்திலும் எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவுடன் நிதிஷ் குமார் பங்கேற்றார். இப்படி, ராஷ்ட்டிரிய ஜனதா தளத்துடனான ஐக்கிய ஜனதா தளத்தின் நெருக்கமும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

நிதிஷ்குமார் - தேஜஸ்வி
நிதிஷ்குமார் - தேஜஸ்வி

மாநில பா.ஜ.க-வுடனான உரசல்:

பீகார் அரசியலில் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் மாநில பா.ஜ.க தலைவர்களுக்கும் இடையே மறைமுகமாக அதிகார மோதல் இருந்துவருகிறது. குறிப்பாக, பீகார் மாநில பா.ஜ.க தலைவர்கள் ஐ.ஜ.த தலைமையிலான தங்கள் கூட்டணி அரசையே விமர்சிப்பது, மாற்றாந்தாய் மனப்பன்மையுடன் சட்டப்பேரவை சபாநாயகர் செயல்படுவது போன்றவை நிதிஷ் குமாருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இதுபோன்ற சூழ்நிலையில், சபாநாயகரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற நிதிஷ் குமாரின் கோரிக்கைக்கு பா.ஜ.க தலைமை செவிசாய்க்காமல் இருப்பது போன்றவை இன்னும் மனக்கசப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், மத்திய அரசு கொண்டுவந்த அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ஐக்கிய ஜனதா தளம் கருத்து தெரிவித்ததை, ​​மாநில பா.ஜ.க தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் ஐக்கிய ஜனதா தளத்தை கடுமையாக விமர்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பீகார் சட்டப்பேரவை நூற்றாண்டு விழா:

உட்சபட்சமாக, கடந்த ஜூலை 12-ம் தேதி பீகார் சட்டப்பேரவை நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில், சபாநாயகர் விஜய்குமார் அழைப்பின்பேரில் கலந்துகொண்ட மோடி சிறப்புரை ஆற்றினார். அப்போது மோடி உரையாற்றிய விதம் நிதிஷ் குமாருக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகரும் முதல்வர் நிதிஷ் குமாரின் பெயரைக் குறிப்பிடாமல் தவிர்த்தார். இதுமட்டுமல்லாமல் நிகழ்வில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசில் நிதிஷ் குமாரின் படமும் தவிர்க்கப்பட்டிருந்தது.

நிதிஷ்குமார் - மோடி
நிதிஷ்குமார் - மோடி

இதுபோன்ற பல்வேறு புகைச்சல்களால் பீகாரில் ஒரே கூட்டணியைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா கட்சிக்கும், பா.ஜ.கவுக்கும் இடையே மோதல் முற்றியிருக்கிறது. அதன்விளைவாக, பா.ஜ.க முன்னெடுக்கும் நிகழ்ச்சிகளை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருகிறார். இது இப்படியே நீடித்தால் இறுதியில் கூட்டணி முறிவுதான் ஏற்படும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.