Published:Updated:

``அக்னி வீரர்களின் எதிர்காலமே நிச்சயமில்லாதபோது, அவர்கள் எப்படி நாட்டைப் பாதுகாப்பார்கள்!"- தேஜஸ்வி

தேஜஸ்வி யாதவ்

``இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தைப் பற்றி நிச்சயமற்றவர்களாக இருப்பதாக உணர்ந்தால், அவர்கள் எப்படி எல்லையைப் பாதுகாப்பார்கள்.?" - தேஜஸ்வி யாதவ்

``அக்னி வீரர்களின் எதிர்காலமே நிச்சயமில்லாதபோது, அவர்கள் எப்படி நாட்டைப் பாதுகாப்பார்கள்!"- தேஜஸ்வி

``இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தைப் பற்றி நிச்சயமற்றவர்களாக இருப்பதாக உணர்ந்தால், அவர்கள் எப்படி எல்லையைப் பாதுகாப்பார்கள்.?" - தேஜஸ்வி யாதவ்

Published:Updated:
தேஜஸ்வி யாதவ்

இந்திய ராணுவத்தில் புதிய முறையில் ஆள்சேர்க்கும் விதமாக, அக்னிபத் எனும் புதிய திட்டத்தைக் கடந்த வாரம் செவ்வாயன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தியிருந்தார். இந்தத் திட்டத்தில் 4 ஆண்டுக்கால ஒப்பந்த முறையில் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதாலும், அதிலிருந்து 25 சதவிகித வீரர்களை மட்டுமே இந்திய ராணுவத்தில் நேரடியாக பணியமர்த்தப்படுவர் எனக் கூறியதாலும், நாடளவில் இளைஞர்கள் திட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். பல இடங்களில் போராட்டம் கலவரமாக மாற, போலீஸ் ஏராளமான இளைஞர்களைக் கைதுசெய்து நடவடிக்கை எடுத்தது. மேலும் போராட்டம் தீவிரமடைய, அக்னி வீரர்களுக்கு ராணுவ துணைப்படையில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியது.

அதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ``அக்னிபத் திட்டத்தைச் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இது ஒரு தனித் திட்டம் அல்ல. அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெறும் எண்ணமே கிடையாது" என திட்டவட்டமாக நேற்று கூறியிருந்தார்.

அக்னிபத் - திட்டம்
அக்னிபத் - திட்டம்

இந்த நிலையில், ``அக்னி வீரர்களின் எதிர்காலமே நிச்சயமில்லாதபோது, நாட்டை எப்படி அவர்கள் பாதுகாப்பார்கள்" என பீகார் மாநில எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வியெழுப்பியுள்ளார்.

பீகாரில் இன்று செய்தியாளர்களிடத்தில் பேசிய தேஜஸ்வி யாதவ், ``அக்னிபத் திட்டம் தொடங்கப்பட்டதால், நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் அனைவர்களும் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். மேலும், இந்தத் திட்டமானது 4 ஆண்டுகளுக்குப் பிறகு 75 சதவிகித வீரர்களை வேலையில்லாமல் ஆக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும். இளைஞர்கள் ஒருபோதும் தங்களின் எதிர்காலம் குறித்து எக்காரணம் கொண்டும் குழப்பமடையக்கூடாது. அதுமட்டுமல்லாமல், இவர்கள் தங்களின் எதிர்காலத்தைப் பற்றி நிச்சயமற்றவர்களாக இருப்பதாக உணர்ந்தால், அவர்கள் எப்படி எல்லையைப் பாதுகாப்பார்கள்?" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism