Published:Updated:

சூடுபிடிக்கும் வழக்கு விசாரணை! - சபரிமலையில் கொடியேரி பாலகிருஷ்ணன் மகன் சுவாமி தரிசனம்

சிந்து ஆர்

பாலியல் புகாரில் சிக்கிய கேரள சி.பி.எம். செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினோய் கொடியேரி சபரிமலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

binoy kodiyeri
binoy kodiyeri

கேரள மாநில சி.பி.எம் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினோய் கொடியேரி மீது பீகாரைச் சேர்ந்த இளம் பெண் மும்பை போலீஸில் பாலியல் புகார் அளித்திருந்தார். அதில் ``துபாய் பாரில் டான்சராக இருந்த சமயத்தில் பினோய் கொடியேரி அறிமுகம் ஆனார் என்றும், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி நெருக்கமாக இருந்தார். அதன்மூலம் தனக்கு ஒரு குழந்தை பிறந்தது.

binoy kodiyeri
binoy kodiyeri

பின்னர் மும்பையில் ஒரு பிளாட்டில் தங்க வைத்த பினோய் கொடியேரி தன்னைக் கைவிட்டுவிட்டார். அவருக்கு வேறு திருமணம் நடந்த விஷயம் பின்னர்தான் தெரியவந்தது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து மும்பை போலீஸ் வழக்குபதிவு செய்த நிலையில் பினோய் கொடியேரி கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றார். முன் ஜாமீன் அளித்த கோர்ட் விதித்த நிபந்தனைபடி பினோய் கொடியேரி டி.என்.ஏ. சோதனைக்காக தனது ரத்த மாதிரியை மும்பையில் உள்ள மருத்துவமனையில் கொடுத்துள்ளார்.

binoy kodiyeri
binoy kodiyeri

இன்னும் சில நாள்களில் டி.என்.ஏ. பரிசோதனை முடிவு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்தநிலையில் பினோய் கொடியேரி நேற்று சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் இருமுடிகட்டு சுமந்து சென்று சுவாமி தரிசனம் செய்தார். மதம் சார்ந்த வழிபாடுகளுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட இடதுசாரி கட்சியின் மாநில செயலாளரின் மகன் சபரிமலையில் தரிசனம் செய்த சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.