Published:Updated:

உத்தரகாண்ட் தேர்தல்: பா.ஜ.க-வில் இணைந்தார் பிபின் ராவத்தின் சகோதரர் விஜய் ராவத்!

பா.ஜ.க-வில் இணைந்த விஜய் ராவத்

மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் சகோதரர் விஜய் ராவத் உத்தரகாண்ட் முதல்வர் முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார்.

உத்தரகாண்ட் தேர்தல்: பா.ஜ.க-வில் இணைந்தார் பிபின் ராவத்தின் சகோதரர் விஜய் ராவத்!

மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் சகோதரர் விஜய் ராவத் உத்தரகாண்ட் முதல்வர் முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார்.

Published:Updated:
பா.ஜ.க-வில் இணைந்த விஜய் ராவத்

நீலகிரி மாவட்டம், காட்டேரியில் கடந்த மாதம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் என்று முப்படைகளின் விசாரணைக்குழு முதற்கட்ட அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது.

பிபின் ராவத்
பிபின் ராவத்

இந்த நிலையில் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிபின் ராவத்தின், சகோதரரும் ஓய்வுபெற்ற ராணுவ வீரருமான கர்னல் விஜய் ராவத் பங்கேற்றார். அப்பொழுது விஜய் ராவத் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் முன்னிலையில் பாஜக-வில் தன்னை இணைத்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும் இதைத் தொடர்ந்து பேசிய அவர், தன்னுடைய தந்தை பணி ஓய்வுபெற்றதும், பாஜக-வில் தன்னை இணைத்துக்கொண்டார். தனக்கு இந்த வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது எனவும், பிரதமர் மோடியின் திட்டங்கள் தொலைநோக்குப் பார்வை வாய்ந்தது என்றும், பாஜகவில் இணைந்துகொண்டதற்காகத் தான் மிகவும் பெருமைப்படுவதாகவும் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism