Published:Updated:

'ஒவ்வொரு நாளும் ஓர் ஆவணம்... அவர் வாயிலேயே உண்மை வரும்!' - செந்தில் பாலாஜிக்கு சவால்விடும் அண்ணாமலை

அண்ணாமலை
News
அண்ணாமலை

``செந்தில் பாலாஜி வாயிலேயே உண்மை வரவைப்போம். ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் ஆவணம் வெளியாகும்.” - அண்ணாமலை.

அமைச்சர் செந்தில் பாலாஜி, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இடையேயான விவாதம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. அண்ணாமலை நேற்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ``நான்கு சதவிகித கமிஷன் வாங்கிக்கொண்டு தூத்துக்குடி தெர்மல் பவர் ஸ்டேஷனில் பில் க்ளியர் செய்யப்படுகிறது.

அண்ணாமலை - செந்தில் பாலாஜி
அண்ணாமலை - செந்தில் பாலாஜி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரை க்ளியர் செய்யப்படாத பில் விவரங்களை வழங்குங்கள் என்று மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக சி.எஃப்.ஓ அக்டோபர் 21-ம் தேதி மெயிலில் கேட்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆனால், `எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற பழமொழியைப்போல, எதற்காக மின் உற்பத்தி பகிர்மானக் கழகத்துக்கு அழுத்தம் கொடுத்து அந்த மெயிலை அனுப்ப வேண்டும். இதற்கு முன்பு இருந்த கான்ட்ராக்டர்கள் மற்றும் பின்பு இருந்த கான்ட்ராக்டர்களின் பில்கள் க்ளியர் செய்யப்படவில்லை.

அண்ணாமலை
அண்ணாமலை

இடையில் இருந்த குறிப்பிட்ட சில கான்ட்ராக்டர்களின் பில்கள் மட்டும் க்ளியர் செய்யப்படுகின்றன. மின்சார வாரியத்தில் பி.ஜி.ஆர் என்ற நிறுவனத்துக்கு அடுத்தடுத்து ஒப்பந்தங்கள் கொடுக்கவிருக்கிறார்கள். தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்துக்கு 1.59 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்ததிலிருந்து பல்வேறு ஊழல்கள் நடைபெற்றதே இதற்குக் காரணம். செந்தில் பாலாஜி அந்த ஊழலை விஞ்ஞான முறையில் கட்டமைக்கிறார். செந்தில் பாலாஜி மீது போக்குவரத்துத்துறை, மணல் கொள்ளை, மின்சாரத்துறை என்று ஏகப்பட்ட ஊழல் புகார்கள் உள்ளன. ஒரு மனிதன் எதிரில் அமர்ந்து பேசும்போது தரம், தராதரம் வேண்டும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜியை ஒவ்வொரு பிரஸ் மீட்டிலும் பதில் சொல்ல வைப்பேன். ராஜ்யசபா எம்.பி வில்சன், பி.ஜி.ஆர் நிறுவனத்துக்காக நீதிமன்றத்தில் ஏன் ஆஜராக வேண்டும்... ஒருபக்கம் மின்வாரிய ஊழியர்கள், அரசு சார்பாக ஆஜராவார்கள், வில்சன் பி.ஜி.ஆருக்காக ஆஜராவார்.

பி.ஜி.ஆர் நிறுவனத்தை யார் வாங்கப்போகிறார்... அதற்கான பதிலை கோபாலபுரம் என்று நான் சமூக வலைதளங்களில் சொல்லியிருக்கிறேன். அதையும் பொறுத்திருந்து பாருங்கள். உண்மை தெரியும். நாங்கள் இதைச் சும்மா விடப்போவதில்லை. அவருடைய வாயிலிருந்தே பதில் வரவைப்போம். தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி எஸ்.பி., நாம் குற்றச்சாட்டு முன்வைத்த அதே நாளில் கான்ட்ராக்டர்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறார். முதல்வர் அலுவலகத்தில் இருந்து கேட்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

`உண்மையிலேயே பணம் கொடுத்திருக்கிறீர்களா?’ என்று கான்ட்ராக்டரிடம் கேட்டுள்ளனர். அதனால், முதல்வர் இந்தப் பிரச்னையை சீரியஸாக எடுத்துக்கொண்டிருக்கிறா என்று நம்புகிறோம். அதனால் அமைச்சர் வாயிலேயே உண்மை வரவைப்போம். ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் ஆவணம் வெளியாகும்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, திருப்பூர் மாவட்டம் ஆதிதிராவிடர் ஹாஸ்டலிலுள்ள சமையலரை சுழற்சி முறையில் தன் வீட்டில் சமைக்க வைக்கிறார். இரவு சமைப்பவர்கள், அந்தச் சமையல் அறையிலேயே தூங்க வேண்டும். இதற்கான ஆடியோ ரெக்கார்டிங் உள்ளது. அதை வெளியிட்டு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்க விரும்பவில்லை.

அமைச்சர் கயல்விழி
அமைச்சர் கயல்விழி

`இதுதான் சமூகநீதியா?’ என்று முதல்வரிடம் கேட்க விரும்புகிறேன். இதுதான் உங்கள் சமூகநீதி என்றால், சாதாரண கிராமத்தில் பிறந்த எல்.முருகனை மத்திய அமைச்சர் ஆக்குவதுதான் பா.ஜ.க-வின் சமூகநீதி. முதல்வர் இந்த விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.